திருக்குறள் உரை வேற்றுமை நூற்பதிப்பும்: மறுபதிப்பின் தேவையும்
தமிழையும் தமிழ்ப் பண்பாட்டையும் உலகறியச் செய்வது இப் பல்கலைக்கழகத்தின் தலைசிறந்த குறிக்கோள் என 1929 இல் நடைபெற்ற ஆளவை மன்ற துவக்க உரையிலும் , அண்ணாமாலைச் சர்வ கலாசாலையின் வளர்ச்சியை ஒவ்வொரு நாளும் சிந்திப்பே ன் . தமிழ் நாடெங்கும் தமிழிசை முழங்க வேண்டும் என்பது எனது ஆவல் என 25. 03. 1944 வெளியிட்ட அறிக்கையிலும் அண்ணாமலை அரசர் தமது நோக்கத்தை தெளிவாக வரையறுத்துக்கொண்டு அதனபடி செய்லபட்டார் . 1929 இல் உருப்பெற்ற அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் தமிழுக்கும் தமிழ் இசைக்கும் முதன்மை கொடுத்து அத்துறையில் வல்லுநர்களைப் பணியில் அமர்த்தி , கற்பித்தலும் ஆய்வும் நிகழ்ந்தன . அன்றைய சூழலில் தனித் தமிழ் இயக்கங்கள் வலுவாக இருந்த பின்னணியையும் , திராவிட இயங்கங்கள் முன்னெடுத்த தமிழ் நூற்களையும் நாம் எண்ணத்தில் கொள்ளவேண்டும் . சுதந்திரத்திற்குப் பிறகான தமிழ்ச் சூழலில் ஏற்பட்ட அரசியல் மாற்றங்கள் , தமிழ் மொழியை முதன்மைப்படுத்திய முறைமை , அதன் தொடர்ச்சியாக தமிழ் குறித்த சிந்தனை , தமிழ் மொழியின் இலக்கிய வளத்தை உலக வளத்தோடு ஒப்பிட்டு நோக்க வேண்டி தேவை எழுந்தன . குறிப்பாக திருக்குறளை உலகப்பொதுமறையான கட்டமை...