இடுகைகள்

நவம்பர், 2008 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

விடுதலையின் நிறம்

அமெரிக்காவின் அடிமை வாழ்க்கை வரலாற்றை மையமாகக் கொண்டு பல நூல்கள் வெளிவந்துள்ளன.அவற்றுள் விடுதலையின் நிறம் என்ற நூல் அமெரிக்காவில் அடிமையாக இருந்த ஹாரியட் ஏ.ஜேக்கப்ஸ் என்ற இளம் பெண்ணின் வாழ்க்கையில் ஏற்பட்ட மிகத் துயரமான நிகழ்வுகளைப் பதிவு செய்துள்ளது.இந் நூலை அவரே 1857 இல் எழுதியுள்ளார்.இந்நூல் 19-ஆம் நூற்றாண்டு அமெரிக்கா குறித்த இரு வித திறனாய்வு க்கு வடிவம் கொடுக்கிறது. மனிதர்களை விற்பனைப் பொருளாக எண்ணும் அடிமை முறைக்கும் அதற்குத் துணை நிற்கும் வெள்ளை இனவாத கருத்தியலுக்கும்,அது போலவே மரபான தந்தை வழி அமைப்புகள் மற்றும் கருத்தியலுக்கும் சவாலாக விளங்குகின்றது. 1813 ஆம் ஆண்டு கரோலினாவிலுள்ள எடென்டனில்,மோல்லி ஹார்னிப்ளோவுக்கும், மார்கரெட் ஹார்னிப்ளோவின் அடிமைக்கும் மகளான டிலைலாவுக்கும் டாக்டர் ஆண்ட்ரு நாக்ஸின் அடிமையான தச்சுத் தொழிலாளி டேனியல் ஜேக்கப்ஸூக்கும் மகளாகப் பிறந்தார் ஹாரியட் ஏ.ஜேக்கப்ஸ். இவர் அடிமையாகவே பிறந்து ,இரண்டு வயதிலும்,நான்கு வயதிலும் விற்கப்பட்டு இரண்டு குழந்தைகளுக்குத் தாயாகும் வரை பல்வேறு துன்பங்களுக்கு ஆளாகியுள்ளார். ஜேக்கப்ஸ் குழந்தையாக இருந்த பொழுதே அனாதையாகிவிட்ட...

நள்ளிரவில் சுதந்திரம்(Freedom At Midnight)

அண்மையில் படித்த நூல்.இந்தியர் ஒவ்வொருவரும் படிக்க வேண்டிய நூல். 670 பக்கங்களில் 1947 ஆகஸ்டு 15 இல் இந்தியா விடுதலை அடைந்த நிகழ்வுகளை வரலாற்று ஆவணங்களோடு இந்நூலுள் பதிவுசெய்யப்பெற்றளன.இந் நூலாசிரியர்கள் டொமினிக் லேப்பியர்,லேரி காலின்ஸ் ஆவர்.தமிழாக்கம் செய்தவர்கள் வி.என். ராகவன்,மயிலை பாலு ஆவர். தமிழாக்கம் மூலநூலைப் படிப்பது போன்ற உணர்வினை ஏற்படுத்துகின்றது.

வெள்ளத்தால் பாதிப்பு

கடலூர் பாண்டிச்சேரி மாவட்டங்கள் மழையால் பெரும் அழிவைச் சந்தித்தன.முனைவர் பேராசிரியர் மு.இளங்கோவன் அவர்களின் வீட்டில் பேரழிவு நிகழ்ந்துள்ளது.அவர் வைத்திருந்த மிகப்பெரும் நூலகத்திலுள்ள பெரும்பான்மை நூல்கள் வெள்ளத்தால் அழிவுற்றன.அந்நூலகத்தில் மிக அரிய பல நூல்கள் இருந்தன.அச்செல்வங்கள் அழிந்த்து தமிழுக்குப் பேரிழப்பாகும். இச்செய்தியை இன்று காலை செல்பேசியின் மூலம் அறிந்தேன். மிக துயரமான செய்தி.

அண்ணாமைப் பல்கலைக்கழகத் தமிழியல்துறை-திருமுறை ஆய்விருக்கை

சைவத்திருமுறைகளான பன்னிரு திருமுறைகளுள் மூவரின் தேவாரத் தொகுப்புக்கள் ஏழனுக்கு விவான உரையும்,சித்தாந்தக் குறிப்புக்களும் எழுதி வெளியிடும் நோக்கில் ,1990 -ஆம் ஆண்டு அண்ணாமலைப் பல்கலைக்கழகத் தமிழியல்துறையில் திருமுறை ஆய்விருக்கை தொடங்கப்பெற்றது.இப்பணிகளைச் செம்மையுற மேற்கொள்வதற்காகப் பேராசிரியப் பெருமக்களும் ஓய்வு பெற்ற ஆசிரியர் பெருமக்களும் நியமிக்கப் பெற்றனர்.அவர்களின் ஆய்வுகளின் வழி ,ஆய்வு நூல்கள் வெளிவந்துள்ளன.அந்நூல்கள் அண்ணாமல்ப் பல்கலைக்கழகப் பதிப்பகத்தின் மூலம் வெளியிடப்பெற்றுள்ளன. வெளிவந்துள்ள நூல்கள் 1.தொல்காப்பியம் சைவசித்தாந்த நோக்கில் சிவத்திரு.அ.சொ.சுப்பையா 1997 2.சுந்தரர் தேவாரமும் உரைவிளக்கமும் ஆய்வுரையும் முதல் 500 பாடல்கள் அ.ஆனந்த நடராசன் சிவத்திரு.அ.சொ.சுப்பையா 2001 3..சுந்தரர் தேவாரமும் உரைவிளக்கமும் ஆய்வுரையும் இரண்டாம் 500 பாடல்கள் புலவர் சுந்தரேசம் பிள்ளை சிவத்திரு.அ.சொ.சுப்பையா அச்சில் 4.திருநாவுகரசர் 4,6 திருமுறை 2000 பாடல்கள் கணபதி டாக்டர்அ.ஆனந்த நடராசன் டாக்டர் வெ.பழனியப்பன் அச்சில் மேலும் ஆய்வுகள் தொடர்ந்து நடைப்பெற்று வருகின்றன.

மெய்யப்பன் தமிழாய்வகம்

ஆடலரசன் வீற்றிருக்கும் பெருமைமிகு தில்லை மூதூரின் கண் தமிழார்வலர்களின் சரணாலயமாகத் திகழ்வது மெய்யப்பன் தமிழாய்வகமாகும்.இவ்வாய்வகத்தை உருவாக்கியவர் பேராசிரியர் ச. மெய்யப்பனாவார்.இவர் தமிழார்வ துடிப்புக் கொண்டு எளிமையும் எழுச்சியும் மிக்க தம் எழுத்தாலும்,சிறந்த பதிப்பாளும் சான்றோர் உள்ளத்துள் நின்று நீடு வாழ்பவர்.தமிழே நினைந்து தமிழே சொல்லி,தமிழே வாழ்வெனக் கருதும் பேரன்பினராகத் திகழ்ந்த இவரை ஒரு புத்தகப்பித்தர் எனலாம்.புத்தகங்களின் மீது கொண்ட காதலாலும்,அன்னைத் தமிழுக்கு அரும்பணியாற்ற வேண்டும் என்ற வேணவாவினாலும் பணியாற்றும் காலத்திலிருந்தே தமிழ் தொடர்பான பல்வேறு புத்தகங்களைச் சேகரிக்கத் தொடங்கினார். அண்ணாமலைப் பல்கலைக்கழத்தின் தமிழியல்துறையில் 35 ஆண்டுகள் பணியாற்றி ஓய்வு பெற்ற பிறகும்,ஓய்வே இல்லாமல் அல்லும் பகலும் தமிழகத்திலும்,தமிழ் வழங்கும் இடங்களிலும் தேடித் தேடி சேகரித்த தமிழ்ப் புத்தகங்களைப் பொதுமக்களும் ஆய்வாளர்களும் பயன்படுத்தும் வகையில் ச.மெய்யப்பனார் தம் பெயரில் ஓர் அறக்கட்டளை நிறுவி,அதன் சார்பில் மெய்யப்பன் தமிழாய்வகம் என்னும் உயர் ஆய்வகம் தொடங்கினார். இந்நூலகம் வடக்குவீதி புதுத...

சங்க இலக்கியத்தில் விருந்தோம்பல்

சங்கதமிழ் இலக்கியங்கள் காதல்,வீரம்,கொடையை மட்டுமன்றி இல்லறத்துக்குரிய அறங்களுள் ஒன்றாக விருந்தோம்பலையும் சிறப்பித்துக் கூறுகின்றன.விருந்தோம்பலில் தமிழரே பேர் பெற்றவர்கள். பழந்தமிழர் விருந்தோம்பலை வாழ்க்கையின் உயிர் நாடியாகக் கொண்டமை, அக்கால நூல்களால் நன்கு தெரிகிறது.பழந்தமிழ் நூல்களில் விருந்து மணமே பெரிதும் கமழ்ந்து கொண்டிருந்தது.விருந்தோம்பலின் அருமையை அறிந்து வள்ளுவர் விருந்தோம்பலுக்கென்று தனியோர் அதிகாரத்தைப் படைத்துள்ளார். 'விருந்து' என்ற சொல் புதுமையைப் குறித்துப் பின்பு ஆகுபெயராய் விருந்தினரைக் குறித்து வழங்கலாயிற்று. 'விருந்து தானும் புதுவது கிளந்த யாப்பின் மேற்றே'(பொருளதிகாரம்,237) என்ற தொல்காப்பிய நூற்பா மூலம் அறியலாம். இல்லற நெறி 'பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதலே' இல்லறத்தின் தலையாய நெறியாகும். விருந்தோம்பல் இல்லாத வாழ்க்கை இல்வாழ்க்கை ஆகாது. விருந்தோம்பலில் பெண் பெரும் பங்கு பெறுகிறாள்.ஆதலின் 'நல்விருந்தோம்பலின் நட்டாள்' எனத் திரிகடுகம் கூறும். தொல்காப்பியமும் மனைவிக்கு உரிய மாண்புகளாக விருந்தோம்பலையும் சுற்றம் ஓம்பலையும் சுட்டுகிறது. \ 'வி...

அண்ணாமலைப் பல்கலைக்கழகத் திருக்குறள் ஆராய்ச்சி இருக்கை

அறிஞர் அண்ணா அவர்கள் தமிழக முதல்வராக இருந்த பொழுது சென்னையில் இரண்டாவது உலகத் தமிழ் மாநாடு நடைப்பெற்றது. அப்பொழுது தமிழுக்குப் பெருமை சேர்க்கும் வகையில், வாழ்வியல் கருவூலமாகத் திகழக் கூடிய திருக்குறளுக்குப் பல்வேறு ஆராய்ச்சிகள் நடைபெறவேண்டும் என்ற நோக்கில் சென்னை, அண்ணாமலை, மதுரை ஆகிய பல்கலைக்கழகங்கள் ஒவ்வொன்றிற்கும் ரூபாய் 3 இலட்சம் வைப்புநிதியாக அளித்துத் திருக்குறள் ஆராய்ச்சி இருக்கையை உருவாக்கினார்கள். அத் திருக்குறள் இருக்கை வழி கற்றுத்துறை போகிய அறிஞர்கள் திருக்குறள் தொடர்பான பல்வேறு அரிய ஆராய்ச்சி நூல்களைத் தழிழுலகுக்கு வழங்கியுள்ளனர். அந்த வகையில் அண்ணாமலைப் பல்கலைக்கழகத் திருக்குறள் ஆராய்ச்சி இருக்கை மூலம் சிறந்த ஆராய்ச்சி நூல்கள் வெளிவந்துள்ளன. 1.திருக்குறள் பொருளதிகாரம் டாக்டர் மு.கோவிந்தசாமி 1973 2.காப்பியங்களில் திருக்குறள் திரு.ச.தண்டபாணி தேசிகர் 1974 3.திருக்குறளும் பிற உரையாசிரியர்களும் டாக்டர் மு.கோவிந்தசாமி 1975 4.வள்ளுவரும் கம்பரும் திரு.ச.தண்டபாணி தேசிகர் 1975 5.பரிமேலழகர் டாக்டர் மு.கோவிந்தசாமி 1978 6.வள்ளுவத்தில் மெய்ப்பொருட்சுவடுகள் திரு.ச.தண்டபாணி தேசிகர் 1980 7...

தமிழ் வளர்ச்சிமன்ற விழா

படம்
படம்
என் செல்லத்திற்குப் பிறந்த நாள் வாழ்த்துக்கள்.
படம்
படம்

வலி

என் இதயத்திற்கு முள்மகுடம் சூட்டிவிட்டாய் எத்தனை வலி இருக்கும் உன் கைகளில் கவிஞர் கா.சரவணன்