இடுகைகள்

கல்வி என்பது...

 தொடக்க கல்வியிலிருந்து உயர்நிலை கல்வி வரை நாம் பின்பற்றும் முறைகள் சரியாகத்தான் உள்ளனவா என்ற கேள்வி எழுகிறது.  கிட்டத்தட்ட இரண்டே முக்கால் வயதில் குழந்தைகளைப் பள்ளியில் சேர்த்துவிடுகின்றோம். அவர்களின் குழந்தைமையைப் பற்றி கவலை கொள்வதே கிடையாது. குழந்தைகள் பள்ளிக்கூடங்கள் சென்று அந்த வயதில் நிறைய கற்றுக்கொள்ளுவார்கள் ஒழுக்கம் வரும் என்பது பெற்றோர்களின் நினைப்பாக உள்ளது. அதனை கல்வி நிறுவனங்களும் பயன்படுத்திக் கொள்ளுகின்றன.  சிறந்த கல்விமுறை கொண்ட நாடாகவும் மகிழ்ச்சியான நாடாகவும் ஐக்கிய சபையால் அங்கீகரிக்கப்பட்ட நாடு பின்லாந்து. இங்கு கல்விக்கட்டணம் கிடையாது. கல்விக்குத் தேவையான அனைத்தும் இலவசமாக வழங்கப்படுகிறது. மருத்துவ  பல் மருத்துவ வசதிகளும் செய்து கொடுப்பதுடன் உளவியல் நிபுணர்களும் ஆசிரியர்களும் மாணவர்கள் நலனில் அக்கறை செலுத்துகின்றார்களாம். அத்துடன் மாணவர்கள் ஏழு வயதில் தான் தொடக்கப்பள்ளியில் சேர்க்கப்படுகிறார்கள். ஒருநாளைக்கு நான்கு மணி நேரம் மட்டுமே வகுப்புகள் நடைபெறுகின்றனவாம். ஆண்டுக்கு மாணவர்கள்  670 மணி நேரம் பள்ளியில் கற்றலில் ஈடுபடுகிறார்கள். பள்ளியில்...

அற்றைத் திங்கள் அவ்வெண்ணிலவில்…

படம்
  நல்லாரைக் காண்பதுவும் நன்றே நலமிக்க நல்லார்சொல் கேட்பதுவும் நன்றே – நல்லார் குணங்கள் உரைப்பதுவும் நன்றே அவரோடு இணங்கி இருப்பதுவும் நன்றே -        மூதுரை,9   நாள் ஒன்றுக்கு ஒரு நூறு பக்கங்களுக்குக் குறையாமல் படித்தலும், பதினாறு பக்கங்களுக்குக் குறையாமல் எழுதுதலும், இரவில் படுக்கையில் வரும் சிந்தனைகளைப் பாடல் ஆக்குதலும் நாள் வழிக்கடமையாகக் கொண்டு, தமிழ் மொழிக்காவும் இனத்திற்காகவும் இறுதி காலம் வரை எழுத்து, பேச்சு எனச் செயல்பட்டவர் செந்தமிழ் அந்தணர் முதுமுனைவர் ஐயா இரா. இளங்குமரனார். ஐயாவின் திருக்குறள் தொடர்பான நூல்கள், இலக்கண வரலாறு, சுவடியியல் போன்ற நூல்களின் வழியாக   அறிந்திருந்தேன். நேரில் சந்திக்கும் வாய்ப்பு   2005 - இல்   கிட்டியது. நெய்வேலிக்குச் சொற்பொழிவு நிமித்தமாக ஐயா வந்தபொழுது, நானும் என் கணவர் மருத்துவர் மு. சேக்கிழாரும் திருக்குறள் ஆய்வுத் தொடர்பாக அவர்களைச் சந்தித்தோம். அன்று தொட்டு ஐயா அவர்களுடன் ஏற்பட்ட சில நினைவுகளைப் பகிர்வதாகவே இக்கட்டுரை அமைகிறது. என்னுடைய ஆய்வு திருக்குறள் பரிதியார் உரையைப் பற்ற...

ஒரு பிணந்தூக்கியின் வரலாற்றுக் குறிப்புகள்

படம்
  பெரும்பாலும் அறியப்படாத இனமாக இருப்பவர்கள் பார்சிகள். சொராஸ்டிரம் என்னும் மதத்திலிருந்துதான் பின்னர் பார்சி மதமாக இனமாக உருவாகியது என்பர்.   19 ஆம் நூற்றாண்டில் இந்தியாவில் பார்சிகளின் எண்ணிக்கை 85,397 பம்பாயில் மட்டும் 48,507     ( https://www.dinamani.com/arasiyal-payilvom/ ) தமிழகத்தில் கிட்டத்தட்ட 200 க்கும் மேற்றபட்ட குடும்பங்கள் வசிக்கின்றார்கள். பாரசீகத்திலிருந்து இந்தியாவிற்கு குடியேவறியவர்கள். சுதந்திர போராடத்தில் ஈடுபட்ட தாதாபாய் நௌரௌஜி, இந்திய அணு சக்தியில் புகழ்பெற்ற ஹோமி ஜஹாங்கீர், ரத்தன் டாடா, கோத்ரெஜ் வாடிய போன்றோர்கள் பார்சி இனத்தைச் சேர்ந்தவர்கள்.என்பது குறிப்பிடத்தக்கது.   இவர்கள் தங்களுக்கென்று சில வாழ்க்கை முறைகளைக் கொண்டிருக்கிறார்கள். 2021 ஆம் ஆண்டின் சிறந்த மொழிபெயர்ப்பு நூலுக்கான சாகித்திய அகாதமி விருதினை ஒரு பிணந்தூக்கியின் வரலாற்றுக் குறிப்புகள் என்னும் நூல் பெற்றுள்ளது. இதனை மொழி பெயர்த்தவர் பத்திரிக்கையாளர் மாலன். இதன் மூலநூலான Chronicle of a Corpse Bearer க்கு 2015 ஆண்டு சாகித்திய அகாதெமி விருது கிடைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக...

ஒரு அரசு எழுத்தரின் மரணம்

  எழுத்தாளர் பிரபஞ்சன் அவர்களின் உரையைச் சில ஆண்டுகளுக்கு முன் கேட்டுக்கொண்டிருந்த பொழுது ரஷ்ய சிறுகதை மன்னனாகிய ஆன்டன் பாவ்லோ செக்காவின்   ஒரு கதையைக் கூறினார். அக் கதை ரஷ்ய சமூகத்தின் மனசாட்சியை உலுக்கிய கதை என்றார். அக்கதையை நீண்ட நாள்கள் படிக்க வேண்டும் என்று எண்ணியிருந்தேன் பேராசிரியர் கி. நடராஜன் மொழிப்பெயர்ப்பில் பாவை பப்ளிகேஷன்ஸ் வெளியிட்டுள்ள சிறுகதை மன்னன் செகாவ் என்னும் தொகுப்பில் அக்கதை இடம்பெற்றிருந்து. செகாவின் வான்கா சிறுகதையில்,   அன்புக்குரிய தாத்தா கான்ஸ்டன்டைன் மக்காரிச் என்று எழுதினான்.   உனக்கு நான் கடிதம் எழுதுகிறேன் . கிறிஸ்மஸ் வாழ்த்துக்கள் அனுப்பிகிறேன் ,  ஆண்டவன் உனக்கு அருள் புரிய வேண்டுகிறேன் .  எனக்கு அப்பாவும் இல்லை ,  அம்மாவும் இல்லை ;  உன்னைத் தவிர யாருமே இல்லை எனக்கு . மாஸ்கோ மிகப் பெரிய ஊர் ,  கனவான்களது வீடுகளுக்குக் கணக்கே இல்லை ,  குதிரைகளும் ஏராளம் .  ஆனால் ஆடுகள் இல்லை ,  நாய்கள் கொஞ்சங்கூட மூர்க்கமின்றி சாதுவாய் இருக்கின்றன .  கிறிஸ்மஸ் பண்டிகையின் போது பையன்கள் நட்சத்திரம் எடுத்த...

ஊராளி பழங்குடியினர் வாழ்வியல்

படம்
            இயற்கையோடு இயைந்த வாழ்க்கையிலிருந்து அந்நியப்பட்ட வாழ்க்கையை நவீனம் என்கின்றோம். அதனோடு இன்றளவும் இயைந்து வாழக்கூடியவர்களைப் பழங்குடிகள் என அடையாளப்படுத்துகிறோம். தமிழகத்தில் 36 வகையான பழங்குடிகள் வசிப்பதாகக் கணக்கிடப்பட்டுள்ளது. இவர்களின் வாழ்வியல் குறித்த ஆய்வுகள் நிகழ்ந்துள்ளன. ஆய்வுகளை வாசிக்கும் பொழுது, ஆய்வுகளின் நோக்கம் ஆவணப்படுத்துவது மட்டுமா? வெளி உலகிற்கு அறிமுகப்படுத்துவதா? அம்மக்களை மேம்படுத்டுவதா? அவர்களின் வாழ்வியலைப் புரிந்துகொண்டு அதற்கேற்ற வாழ்க்கையை அளிப்பதா? என்ற பல்வேறு வினாக்கள் எழுகின்றன.             நீலகிரி, ஈரோடு, சத்தியமங்கலம் பகுதிகளில் வசித்துவரும் ஊராளி எனப்படும் பழங்குடி மக்களோடு ஐந்து ஆண்டுகள் வாழ்ந்து, அவர்களின் வாழ்வியல் முறைகளை நுட்பமாக அவதானித்து, அங்குள்ளோரிடம் வாய்மொழியாகப் பெற்ற விவரங்களை அடிப்பட்டையாகக் கொண்டு, தம்முடைய அனுபவத்தையும் இணைத்து தகவல் கிடங்காக மட்டும் இல்லாமல் வாசகர்களை ஈர்க்கும் வகையில் பிலிப் குமார் என்னும் ஊரா...

தமிழில் எழுதப்பட்ட தன் வரலாற்று நூல்கள்

  Ø   பி ரத்தியேகமான ஆனந்தரங்கப் பிள்ளை அவர்களின் சொஸ்த லிகித தினப்படி சேதிக் குறிப்பு - ஆனந்தரங்கப் பிள்ளை Ø   கனவு, சின்னசங்கரன் கதை – பாரதியார் Ø   என் சரித்திரம் - உ.வே.சாமிநாதய்யர் Ø   வ.உ.சி.- சுயசரிதை Ø   ஜீவித சரிதம்- ரெட்டைமலை சீனிவாசன் Ø   என் கதை- நாமக்கல் கவிஞர் ராமலிங்கம்பிள்ளை Ø   வாழ்க்கைக்குறிப்புகள்-திரு.வி.க [இருபகுதிகள்] Ø   எனது வாழ்க்கைப்பயணம்- கோவை அய்யாமுத்து Ø   என் வாழ்க்கை – ந. சுப்புரெட்டியார் Ø   எனது நாடகவாழ்க்கை – அவ்வை டி.கே. சண்முகம் Ø   நாடக மேடை – பம்மல் சம்பந்த முதலியார் Ø   நினைவுகள்- க.சந்தானம் Ø   உலகம் சுற்றும் தமிழன் – ஏ.கே.செட்டியார் Ø   எனது வாழ்க்கை அனுபவங்கள்- ஏ.வி.மெய்யப்பச்செட்டியார் Ø   நினைவலைகள் -தி .செ. சௌ. ராஜன் Ø   நினைவலைகள் – நெ.து.சுந்தரவடிவேலு Ø   கவலை – அழகிய நாயகி அம்மாள் Ø   எனது வாழ்க்கைப் பாதையிலே – இராதா மணாளன் Ø   எனது பொதுவாழ்வும் அனுபவங்களும் – எம்.ஏ. சிங்கராயர் மாவீரன் Ø   பித்த...