இயக்கி இந்தியத் தொல்குடித் தெய்வம் முனைவர் வெ. வேதாசலம்

 

இயக்கி இந்தியத் தொல்குடித் தெய்வம்

முனைவர் வெ. வேதாசலம்



 இன்று இந்தியா என்று கூறப்படும் நிலத்து தொல்பழங்காலத்து பல கடவுளர்களும் வழிபாட்டு முறைகளும் இருந்துள்ளன. அவற்றுள் இயக்கன் – இயக்கி வழிபாட்டு முறை குறிப்பிடத்தக்கது.  இயற்கையும் இயற்கை இறந்த ஆற்றல்களைத்  தொல்குடிகள் வேவ்வேறு நிலைகளில் குறிப்பாக  தங்கள் ஊர் மரங்களில் குடிக்கொண்டிருப்பதாகவும் தங்களுக்கு வளத்தை அளிப்பதாகவும் நம்பி, அம்மரக்கிளைகளுக்கு மாலை அணிவித்து, மரத்திற்கு மேடை அமைத்து விளக்கேற்றி படையல் படைத்துள்ளனர். பின்னர் உருவங்கள் செய்து வணங்கியுள்ளனர். பிற்காலத்து இயக்கர்- இயக்கியர் வழிபாடாக மாறியுள்ளது. இந்தியாவில் பொ. ஆ. மு. மூன்றாம் நூற்றாண்டிற்கு முன்பிருந்தே  அதாவது ஆரியர் வருகைக்கு முன்பிருந்தே இவ்வழிபாடு மிகச்சிறப்புடன் இவ்வழிபாடு இருந்துள்ளது. வைதீக, சமண, பௌத்த மதங்கள் தொடக்கத்தில் இவ்வழிபாட்டினை நிராகரித்தலும் மக்களிடம் பெற்றிருந்த செல்வாக்கின் காரணமாகத்  தங்கள் தெய்வங்களின் காவல், ஏவல் தெய்வங்களாக உட்செரித்துக்கொண்டனர்.

பொதுவாக இயக்கியை வளமையின் தெய்வமாக வணங்கியுள்ளனர். இவ்வியக்கியர் உருவத்தில் காண்போரைக் கவர்ந்திழுக்கும் தன்மை வாய்ந்தவராய் இருந்தனர். அத்துடன் நினைத்த பொழுது நினைத்த உருவத்தை எடுகக்கூடியவர்கள். இயக்கியர் நீர்நிலைகளிலும் மரங்களிலும் மலை, மலைக்குகைகளிலும் இருப்பிடமாகக் கொண்டிருந்தனர்.

நீண்ட நெடிய வழிபாட்டு மரபில் வரக்கூடிய இயக்கி தொல் தமிழர்களிடத்தும், பௌத்தம், சமணம், சைவம் போன்ற சமயங்களில் அவர்களின் இடம் என்னவாக இருந்தது என்றும் இன்றும் நாட்டுப்புறப் பெண்தெய்வ வழிப்பாட்டில் பொன்னியம்மன், அவ்வையாரம்மன், பகவதியம்மன், இராக்காயி, பேச்சி, இசக்கியம்மன் போன்ற பெண் தெய்வங்களில் இசக்கியம்மன் வழிபாடு இயக்கியர் வழிபாடோடு ஒத்துவருவதாக இந்நூலின் ஆசிரியர் கூறியுள்ளார்.

வட இந்தியாவில் யக்க்ஷி தமிழில் சூலி, சூர் மகள், சூரர மகளிர், கடல்கெழு செல்வி, கானமர் செல்வி, பாவை, அணங்கு,வரையர மகளிர், கொல்லிப்பாவை,அயிரை என அழைக்கப்பெற்ற இயக்கியர் பௌத்ததில் ஜாங்குலி(மானசா), கண்டா( பிரக்ஞானமித்ரா), தாரா, மகாமயூரி, சரஸ்வதி, பிருகுடி, ஆரிதி மணிமேகலையில் சம்பாபதி, மணிமேகலை, தீவதிலகை, சிந்தாதேவி, சித்திரத்தெய்வம்,சுந்திற்பாவை எனவும் சமண சமயத்தில் கிட்டத்தட்ட 24 இயக்கியர்கள் உள்ளனர் எனத் தொகுத்தும் அவர்களைப் பற்றி  இலக்கியங்கள், கல்வெட்டுகள் சிற்பங்களில் காணப்பட்டவற்றை அடிப்படையாகக் கொண்டு இந்நூல் விளக்கியுள்ளார். இந்திய நிலப்பகுதி முழுவதும் கிடைத்துள்ள சிற்பங்களைத் தொகுத்து கொடுத்துள்ளார். இந்திய நிலப்பகுதியில் வாழ்ந்த தொல்குடிகளின் தொடக்கக்கால வழிபாட்டு முறைகளை அறிந்துகொள்வதற்குவும் அவ்வாழிபாடு காலம் தோறும் மாறுதல்களுக்கு உள்ளாகி இன்றும் வழிபாட்டுமுறையில் குறிப்பாக நாட்டுப்புறத் தெய்வங்களாக மாறியுள்ளன என்பதை அறிய இந்நூல் உதவுகிறது.

 கிடைக்குமிடம்

தனலட்சுமி பதிப்பகம்

12, இராஜராஜன் நகர்

மனோஜிப்பட்டி தெற்கு

தஞ்சாவூர் - 613 004

பேசி -98945 78440

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

புறநானூற்றில் கல்விச்சிந்தனை

சங்க இலக்கியத்தில் விருந்தோம்பல்

இரண்டாம் ஆண்டு – நான்காம் பருவம்