இடுகைகள்

மார்ச், 2026 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

மௌன சாட்சியாய் … இல்லாமல் இருப்போமே

  பெண்ணே அருகில் வா, நான் கூறுவதைக் கேள் பயனுள்ள விசயங்கள் மீது ஒருமுறை உனது ஆர்வத்தைத் திருப்பு. இயற்கை உனக்கு வழங்கிய இச்சமூகம் தட்டிப்பறித்த ஆதாயங்களக் கருதிப் பார். நீ ஆணுடைய கூட்டாளியாகப் பிறந்து எப்படி அவனுடைய அடிமையானாய் என்பதை அறிவதற்கு அருகில் வா. செயற்கையான நிலைமைகளை எவ்வாறு இயற்கை என்று நினைத்து நீ அதனை விரும்பத் தொடங்கினாய் என்பதை அறிந்திட வா. நீண்டகால அடிமைப்பழக்கம் உன்னைக் கீழ்மைப்படுத்தியதை அறிந்திட வா. சுதந்திரம் புகழ் ஆகியவற்றின் மேன்மைகள் கடினமானவை என்று ஒதுக்கிவிட்டுச் சொகுசான இழிவுகள் போதுமென்று எவ்வாறு தெரிவு செய்தாய் என்பதை அறிந்திட வா. நான் வரைகிற இந்தச் சித்திரம் உன்னை உன் கட்டுக்குள் வைக்கும் என்றால் இதுபற்றி உணர்ச்சி கலவாமல் உன்னால் சிந்திக்க முடியும் என்றால் பயனற்ற உனது வேடிக்கை விளையாட்டுகளுக்குத் திரும்பிவிடு, இதற்கு மருந்து ஏதுமில்லை, இழிவுகள் பழகிவிட்டன. (Choderlos de Loclose, On the Education of W omen) உலகில் பெரும்பாலான பெண்கள் இன்னமும் அஞ்சுகிறார்கள், பசியோடுயிருக்கிறார்கள் மௌனமாகயிருக்கிறார்கள் எல்லாவித தளைகளையுடைய மதத்தால் நிரப்பப்பட்டுள்ளார...

திணையியம்- தமிழின் ஆதி மெய்யியல்

படம்
  சுற்றுச்சூழல் இயற்கை வேளாண்மை ஆகிய துறைகளில்     முப்பதாண்டுகளுக்கும் மேலாகத் தொடர்ச்சியாக இயங்கி வருபவர் மு. பாலசுப்பிரமணியம் என்னும் இயற்பெயரைக் கொண்ட பாமயன். நவீன வேளாண்மையினால் ஏற்படும் பாதிப்புகள் குறித்தும் பழந்தமிழரின் திணையியல் வாழ்வியலைப் பற்றித் தமிழ் சமூகத்தோடு தொடர்ந்து உரையாடியும் எழுதியும் வருபவர் . வேளாண்மையை அடிப்படையாக் கொண்டு வாழ்வியலை அமைத்துக்கொள்ளும் ஓர் இயற்கைநேய வாழ்க்கைமுறையை பொதியைச் சோலை என்னும் ஊரினை (கூட்டுறவு வேளாண் நிலமாகத் தென்காசி, சிவகிரி, வாசுதேவன்நல்லூர் அருகே) ஏற்படுத்தி பகுத்துண்ணல், பல்லூயிர் ஓம்பல், தமிழர் வகுத்துள்ள திணை வாழ்வியல், உயிர்ம நேயம் காத்தல் அத்துடன் அன்பையும் நிறைவையும் கொண்ட வாழ்வை எதிர்கால தலைமுறைக்கு உருவாக்கி கொடுத்தல் என்னும் கனவுகளைச் சாத்தியப்படுத்தி வருபவர் பாமயன். வேளாணைமை இறையாண்மை, அள்ளித் தரும் நிலம், அணுகுண்டும் அவரை விதைகளும், நியாய வணிகம், தாணுமாலயன் ஆலயம், முன்னத்தி ஏர் என்னும் நூல்களின் வரிசையில்2025 இல் வெளிவந்துள்ள நூல் திணையியம் தமிழின் ஆதி மெய்யியல். தோற்றுவாய் தொடங்கி நிறைவாக வரை 37 தலைப்புக...