இகிரு (வாழ்தல்)
மனித மனத்தின் நுண்ணுணர்வை திரைமொழியாக்கும் ஜப்பானிய இயக்குநர் அகிரா குரேசவாவின் படம் இகிரு. பணியாற்றும் காலத்தில் பிறருக்கு எந்த வகையிலும் பயன்படமால் முப்பது ஆண்டுகளாக அரசு பொதுப்பணித்துறையில் விடுப்பே எடுக்காத, தொடர்ந்து பணிப்பாதுப்பை மட்டுமே முன்னிருத்தி எப்பொழுதும் வேலை செய்துகொண்டிருப்பது போல தோற்றத்தைக் கொடுத்து, தலைமை அலுவலராக உயர்ந்து, சில மாதங்களில் ஒய்வு பெற இருக்கும் நிலையில், குடல் புற்று நோயால் சில மாதங்களில் இறந்துவிடுவோம் என்று தெரியும் போதும் தன் மகனால் புறக்கணிக்கப்படும் நிலையில் ஒரு மனிதன் எப்படியான முடிவை நோக்கி நகர்வான் என்பதையும் அதனூடாக அரசு அலுவலர்கள் மற்றும் அரசியல் பிரமுகர்களின் செயல்பாடுகளையும் பேசுகிறது இகிரு . படத்தின் தொடக்கத்தில் ஒரு ஊடுகதிர் (எக்ஸ்ரே) காட்டப்படுகிறது. பின்னணியில் நமது கதாநாயகனுக்கு வயிற்றில் புற்று நோய் என்பதை அறியாமல். தன் பணியில் முழுமையாக செய்து கொண்டிருக்கிறார் என ஒலிக்கிறது. கதாநாயகன் வடனபே பொதுப்பணித்துறையில் தற்போது தலைமை அதிகாரியாகப் கடந்த முப்பதாண்டுகளாகக் கடமையே கண்ணாக ஒரு நாள் கூட விடுப்பு எடுக்க...