இருபதாம் நூற்றாண்டு தமிழியல் ஆய்வுகளை முன்னெடுத்தவர்களுள் மு. அருணாசலம் முக்கிய இடத்தை வகிக்கிறார். இவர் சமகால நிலையோடு பழந்தமிழ் மரபு சார் ஆய்வுகளை நிகழ்த்தியவர். இவருடைய தமிழ் இலக்கிய வரலாறு நூற்றாண்டு வாரியாக வெளிவந்து தமிழ்ச் சூழலில் மிகுந்த வரவேற்பைப் பெற்றது அறிந்ததே. வெறுங்கதைகளைத் தமிழகத்தில் குவித்துப் பயனில்லை, மக்கள் வாழ்க்கை முன்னேற வேண்டுமானால் எழுதும் திறமை வாய்ந்தவர்கள் முயன்று எழுதும்போது, தமிழர் அறிவுப் பெருக்கத்துக்கான நால்களைத் தான் எழுதவேண்டுமேயன்றி, வீண் பொழுதுப்போக்குக்கான புத்தகங்களை எழுதக்கூடாது.பொழுது போக்கிற்காக எழுதுவது தமிழுக்கும் சமூகத்தார்க்கும் பெருந்துரோகம் என்று நான் அக்காலத்தில் நான் தீவிர எண்ணம் கொண்டிருந்தேன் இன்னும் மாற்றிக் கொள்ளவில்லை என்று புத்தகமும் வித்தகமும் நூலில் தன் எண்ணத்தை வெளிப்படுத்தும் மு. அருணாசலம் அவர்கள் தமது ஒவ்வொரு எழுத்தும் ஆய்வை நோக்கி உண்மையை அறிவதாக அமைத்துகொண்டு தமிழுலகிற்கு பல ஆய்வு நூல்களை வழங்கியுள்ளார். அவர் காலத்து வெளிவராமல் கையெழுத்துப் பிரதியாக இருந்த நூல்களைப் பேரா. உல பாலசுப்பிர...