வியாபாரிகளாகும் மருத்துவர்கள்..........

அனைத்தும் உலகமயமாகி கொண்டிருக்கும் சூழலில் உயிருக்கு எவ்வித உத்தரவாதம் இல்லாமல் போய்க்கெண்டு இருக்கின்றது. உயிரைக் காக்க கூடிய மருத்துவம், அதனைச் செய்யக்கூடிய மருத்துவர்கள் பொருளை மையப்படுத்தி மனித உயிர்களை விளிம்பு நிலைக்குத் தள்ளவிடுகின்றார்கள். மக்கள் உயிர் மலினப்பட்டுவிட்டது. அறியமையில் உழலும் மக்கள் மட்டும் அல்ல அறிவுடையோரும் சில நேரங்களில் இதில் சிக்கித் தவிக்கதான் செய்கின்றார்கள். அவர்களுடைய தேவையைப் பயன்படுத்திக்கொண்டு பணம் பார்த்துவிடவேண்டுமெனச் சில மருத்துவர்களின் எண்ணமாகிவிடுகின்றது.

சர்க்கரை நோய் நிபுணர் ஒருவர் கடந்த மூன்று ஆண்டுகளாக 60 வயதுள்ள ஆங்கில ஆசிரியராக இருந்து பணி ஒய்வு பெற்ற அம்மையார் ஒருவர் சர்க்கரை நோய்க்காக மருத்துவம் பார்த்து வந்தார். அவருக்கு மூன்று ஆண்டுகளில் கொடுக்கப்பட்ட மருந்தின் அளவு எக்கச் சக்கம். அதைவிடக் கொடுமை அவர் எழுதிக் கொடுக்கும் மாத்திரை அவர் வைத்திருக்கும் மருந்து கடையைத்தவிர வெளியில் கிடைக்காது.(பெரும்பாலன மருத்துவமனைகளில் இதுதான் நடக்கின்றது. இல்லை என்றால் மருத்துவக் கடைக்கார்கள் அவர்கள் வைத்திருக்கும் மருந்தினை எழுதிகொடுப்பதற்குக் கமிஷன் கொடுத்து விடுகிறார்கள் அது வேறு,அதோடு மட்டுமல்லாமல் மளிகடை ரசீதி மாதிரி மருந்துகளும் பட்டியல்போல அது நோயாளிக்குத் தேவையோ தேவையில்லையோ பணம் மட்டும் தான் அவர்கள் குறிக்கோள்) அம்மருந்துகளைச் சாப்பிடுவதால் எப்பொழுதும் மயக்கத்தில் இருப்பது போலவும்,எந்த வேலைகளையும் சுறுசுறுப்பான செய்யமுடியாமலும் இருந்துகொண்டு இருந்து. இப்படியே இருக்கிறதே கடந்த மூன்று ஆண்டுகளாக என்று எண்ணிய அப்பெண்மணி மருந்தாளுனர் ஒருவரை அணுகி அதைப் பற்றி கேட்டுள்ளார். அவர் இப்பொழுது இது ஒரு ட்ரெண்டாக மாறிவிட்டது மருத்துவர்களே அவர்களுக்கு வேண்டிய மருத்துவ நிறுவனங்களில் மருந்துக்களைப் பெற்று, அதில் என்ன பக்கவிளைவுகள் இருந்தாலும் அவர்கள் கவலைப்படுவதில்லை அவர்கள் தரும் கூடுதல் பணத்திற்காக உயிரைப் பற்றியெல்லாம் கவலைப்படாமல் இப்படிதான் செய்கின்றார்கள் என்று கூறியுள்ளார். அந்த மருத்துவரை முழுமையாக நம்பியிருந்தார் அப்பெண்மணி அவருக்கு அதிரச்சி, ஒன்றும் சொல்லாமல் வேறு ஒரு மருத்துவரிடம் சர்க்கரை நோய்க்கான மருந்து எடுத்துக்கொண்டுளார் இப்பொழுது. இம்மருந்து முன்போல் இல்லை இப்பொழுது என்னால் நன்றாக இயங்கமுடிகிறது என்று கூறுகிறார். ஆனால் படித்திருந்தும் அந்த மருத்துவர் தவறு செய்கிறார் என்று தெரிந்தும் தட்டிகேட்க முடியவில்லை. என்ன சொல்வது.

தெரிந்தவர்கள் இருவருமே பேராசிரியராகப் பணிபுரிகின்றவர்கள், கடந்த பத்தாண்டுகளாக குழந்தை இல்லை. குழந்தை வேண்டுமென்ற விருப்பத்தினால பல மருத்துவ பரிசோதனைக்ள மேற்கொண்டு பத்தாண்டுகளுக்குப் பிறகு கருவுற்றார். கருவுற்றதில் இருந்து அந்த குழந்தை மருந்திலேயே தான் வளர்ந்து என்று கூறலாம். பேறு காலம் நெருங்கியவுடன் அவர்கள் பார்த்துக்கொண்டிருந்த மருத்துவமனையில் பார்க்க முடியாது கோயம்புத்தூர் அழைத்துச் செல்லுங்கள் என்று கூறிவிட்டார்கள். அங்கு சென்று குழந்தையும் பிறந்தது. அதன் பிறகுதான் சிக்கலே ஆரம்பித்தது. நீண்ட நாள் கழித்து பிறந்த அக்குழந்தையை எத்துணை ஆசையோடு எதிர்ப்பார்த்திருப்பார்கள் ,ஆனால்அக்குழந்தைக்கு உணவு இரைப்பைக்குச் செல்லாமல் தடைப்படுகிறது என்று கூறி பிறந்தில் இருந்து அவசரச் சிகிச்சைப் பிரிவில் கடந்த ஒரு மாதகாலமாக வைத்திருக்கிறார்கள் மருத்துவர்கள். அந்த அறையில் இருந்து எடுத்தால் குழந்தைக்குப் பாதிப்பு உண்டாகும் என்று கூறி, தொடர்ந்து நாங்கள் சிகிச்சைக் கொடுத்துக்கொண்டு இருக்கிறோம் என்கிறார்களாம் மருத்துவர்கள். பணம் போவது மட்டுமல்லாம் பெற்ற தாய் மனதளவில் மிகுந்த பாதிப்புக்கு ஆளாகியிருக்கிறார். அக்குழந்தையின் தந்தை நாங்கள் இக்குழந்தையின் மீது வைத்திருக்கும் பாசத்தினைச் சாதகமாக பயன்படுத்திக்கொண்டு இப்படி நடக்கின்றார்களா? ரமணா படத்தில் நடப்பது போல் இருக்கிறது ஒன்றும் புரியவில்லை என்று புலம்பித் தள்ளுகிறார். இதற்குத் தீர்வுதான் என்ன?

மருத்துவர்களை மறுசென்மம் கொடுக்கும் மனித கடவுளாக மக்கள் எண்ணுகிறார்கள் ஆனால் சில மருத்துவர்களோ அவர்கள் உயிரோடு விளையாடிப் பார்க்கின்றார்கள். போலி மருத்துவம் ,போலி மருந்துகள் இதெல்லாம் எங்கு போய் நிற்கப் போகின்றது ?........... உயிர் சந்தைப்பொருளா? வணிகமயமாக்கப்படுவதற்கு.................

கருத்துகள்

செல்வமுரளி இவ்வாறு கூறியுள்ளார்…
உண்மைதான் மேடம்,
என் தந்தைக்கும் சர்க்கரை நோய். சர்க்கரையின் அளவு அதிகமாகிவிட்டால் அடியேன் அவ்வப்போது சித்தபிரிவிற்கு சென்று ஒரு பொடியை வாங்கித்தருவேன். அது அளவாக சர்க்கரையினை குறைத்துவிடுகிறது.
வெள்ளையர்களின் தாக்கத்தினால் சித்த மருத்துவமும், ஆயுர்வேத மருத்துவமும் மங்கிக்கொண்டே செல்கின்றது......

எல்லாம் நம் கையிலயே இருக்கிறது. ஒருவரையே நம்பி இல்லாமல் அவ்வப்போது மற்றவர்களிடமும் விவாதிக்கவேண்டும்.
முனைவர் கல்பனாசேக்கிழார் இவ்வாறு கூறியுள்ளார்…
ஆம் முரளி......நம் மருத்துவமுறை மறைந்து மேலை மோகத்தின் விளைவு தான்......
ஆ.ஞானசேகரன் இவ்வாறு கூறியுள்ளார்…
//மருத்துவர்களை மறுசென்மம் கொடுக்கும் மனித கடவுளாக மக்கள் எண்ணுகிறார்கள் ஆனால் சில மருத்துவர்களோ அவர்கள் உயிரோடு விளையாடிப் பார்க்கின்றார்கள்.//

சிலர் என்று சொல்லுவதை விட பலர் என்றே சொல்லலாம்.... ஒரு சிலர்தான் மருத்துவம் ஒரு சேவை செய்ய நல்ல வாய்ப்பாக கருதுகின்றனர்.....
முனைவர் கல்பனாசேக்கிழார் இவ்வாறு கூறியுள்ளார்…
ஆம் சேரன் உங்கள் வருகைக்கு நன்றி
ஆரூரன் விசுவநாதன் இவ்வாறு கூறியுள்ளார்…
உண்மைதாங்க.....சரியாச் சொல்லியிருக்கீங்க.....

கவனமா இல்லாம போனா ஆபத்து தானுங்களே...

அந்த காலத்துல குடும்ப டாக்டர்னு ஒருத்தர் இருப்பாரு. நம்மைப் பற்றி முழுதாக அறிந்தவராக மருத்துவம் செய்வார். தேவைய ஒட்டி வேற மருத்துவர்களையும் அவர் பரிந்துரை செய்வாரு....

இப்பல்லாம் அதெல்லாம் இல்லமையே போச்சுங்களே

அதுமில்லாம, அன்னைக்கு இத்தனை நோவு இல்லீங்களே....

நல்ல பகிர்வுங்க....வாழ்த்துக்கள்
முனைவர் கல்பனாசேக்கிழார் இவ்வாறு கூறியுள்ளார்…
வாங்க ஆருரன் உங்கள் வருகைக்கு நன்றி..
munril இவ்வாறு கூறியுள்ளார்…
முன்றில் கருத்துரையூடாக,
கால தேவைக்கேற்ற இடுகை நன்றி தாயே!
சில மருத்துவரின் தீயச் செயலால் இன்று மக்கள் அடைந்து வரும் இன்னலைத் தாளிகைகளும் கால இதழ்களுமே வெளிக்கெணரவேண்டும். மருத்துவர்களோடோ அல்லது மருத்துவத் துறையினரோடோ கலந்துரையாடலைச் செய்ய வேண்டும். மேலை நாடுகளில் வாழும் எமக்கும் கூட இவ்வகைச் சிக்கல் இருந்தது.எம்நாட்டவர் மருத்துவத் துறைப் பணியில் அமர்ந்த பிற்பாடு மாற்றம் ஏற்பட்டது. அச்சிக்கலுக்கு மொழிச்சிக்களும் நிறச்சிக்களும் தான் கரணியம். ஆனால் பணத்துக்காகவே பல மருத்துவர்கள் வேலைசெய்வதால் இப்படி நிகழ்கிறது. தமிழ் மருத்துவமென்பது பற்றி வள்ளுவரும் சிறப்பாகக் கூறியுள்ளார். முதலில் மக்களைக் காப்பதற்கான வழிமுறையில் இறங்கவேண்டும். அதற்கு எல்லா மக்களும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும். எப்பொழுது தமிழகத்தையும் தமிழீழத்தையும் மேலை நாடுகள் போல் ஆக்கப்போகிறோம் என்ற சிந்தனையே எமக்கு . ஊரூராய் தொடங்கிச் செய்யலாம். கல்வியும் சித்தப்பயிற்சியும் மருத்துவமும் வணிகமும் மக்களின் மேன்மைக்காக இயங்குமானால் மக்களுக்கு நலம் உண்டாகும். வளங்களை வைத்துக் கொண்டு வாழவழி தெரியாமல் தவிக்கிறது தமிழகம். வளங்களே இல்லாமல் செழிப்பாக வாழ்ந்து கொண்டிருக்கின்றன மேலைநாடுகள். எழுத்துப் பணியால் எல்லோர் மனங்களைத் திருத்தி எல்லோருக்குமான கடமையை உணர்த்துவோம். அப்பொழுது மருத்துவர்கள் மனமும் மேன்மைபெறும். வளங்களை வீணாக்காத தமிழகத்தை உருவாக்குவோம். வலிகளை நீங்குவோம்.
"சட்டங்கள் பேணும் குமுகாயம் வேண்டும்"
_ச.உதயன் (நோர்வே)

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

புறநானூற்றில் கல்விச்சிந்தனை

சங்க இலக்கியத்தில் விருந்தோம்பல்

பூவின் பல நிலைகள்.......