விருந்தோம்பல்.......


உண்டி கொடுத்தோர் உயிர்கொடுத் தோரே(புறநானூறு,18)

உண்டாயின் பதம் கொடுத்து
இல்லாயின் உடன் உண்ணும்
இல்லோர் ஒக்கல் தலைவன்( புறநானூறு,95)

ஒருநாள் செல்லலம்; இருநாள் செல்லலம்;
பலநாள் பயின்று, பலரொடு செல்லினும்,
தலைநாள் போன்று விருப்பினன் மாதோ!(புறநானூறு,110)

நெருநை வந்த விருந்திற்கு மற்றுத்தன்
இரும்புடைப் பழவாள் வைத்தனன்;இன்றிக்
கருங்கோட்டுச் சீறியாழ் பணையம்(புறநானூறு,316)

இல்லது படைக்கவும் வல்லன் உள்ளது
தவச்சிறிது ஆயினும் மிகப்பலர் என்னான்
நீள்நெடும் பந்தர் ஊண்முறை ஊட்டும்
இற்பொலி மகடூப் போல, சிற்சில
வரிசையின் அளிக்கவும் வல்லன்(புறநானுறு,331)


தேட்கடுப் பன்ன நாட்படுதேறல்
கோண்மீன் அன்ன பொலங்கலத்து அளைஇ,
ஊண்முறை ஈத்தல் அன்றியும் , கோண்முறை
விருந்திறை நல்கி யோனே!அந்தரத்து
அரும்பெறல் அமிழ்தம் அன்ன
கரும்பிவண் தந்தோன் பெரும்பிறங் கடையே (புறநானூறு,392)

தனமனைப்
பொன்போல் மடந்தையைக் காட்டி, இவனை
என்போற் போற்றென் றோனே! அதற்கொண்டு
அவன்மறவ லேனே பிறர் உள்ள லேனே.(புறநானூறு,395)


தீந்தொட் நரம்பின் பாலை வல்லோன்
பையுள் உறுப்பிற் பண்ணுப்பெயர்த் தாங்குச்
சேறுசெய் மாரியின் அளிக்கும் நின்
சாறுபடு திருவின் நனைமகி ழானே (பதிற்றுப்பத்து,65)

மீன்பூத்தன்ன வான்கலம் பரப்பி,
மகமுறை மகமுறை நோக்கி,முன்அமர்ந்து
ஆனா விருப்பின் தானின்று ஊட்டி( பெருபாணாற்றுப்படை)

மழவிடைப் பூட்டிய கூழாஅய்த தீம்புளி
செவியடை தீரத் தேக்கிலைப் பகுக்கும்
புல்லி நன்னாடு(அகநானூறு,311)

.................... மாலை
பலர்புகு வாயில் அடைப்பக் கடவுநர்
வருவீர்உளீரோ ? எனவும்
வாரார் தோழி ! நம்காத லோரே ( குறுந்தொகை,118)


அல்லில் ஆயினும் விருந்துவரின் உவக்கும்
முல்லை சான்ற கற்பின்
மெல்இயல் குறுமகள் (நற்றிணை,142)

கருத்துகள்

munril இவ்வாறு கூறியுள்ளார்…
முன்றில் இடுகையூடாக,
விருந்தோம்பல்: விரும்பிக் கொடுக்கின்றமையால் விருந்தோம்பலாயிற்று. விரும்பு - விருந்து - விருது (அன்பானவரைக் கூப்பிட்டுக் கொடுத்தல்).தாயே! யாம் விருந்தோம்பலில்
பேருவகை அடைந்தேம். எம்முடைய சிறிய கருத்து என்னவென்றால் நுங்கள் நடை பெருமழைப் புலவரைப் போல் பட்டி தொட்டியெங்கும் செல்லவேண்டும். அதற்கு உங்கள் நடையில் பாடல்களைத் தெளிவு படுத்தினால் சிறப்பாக இருக்கும். கற்பித்தலுக்கான சிறந்த உத்தி இதை பள்ளி ஆசியர்களும் பின்பற்றினால் தமிழ்க் கல்வி வளம் பெறும்.
நன்றியன்பன்
ச.உதயன்.
முனைவர் கல்பனாசேக்கிழார் இவ்வாறு கூறியுள்ளார்…
நன்றி உதயன். பாடல்களுக்கு விளக்கம் எழுதுகின்றேன்.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

புறநானூற்றில் கல்விச்சிந்தனை

சங்க இலக்கியத்தில் விருந்தோம்பல்

இரண்டாம் ஆண்டு - மூன்றாம் பருவம்