ஆவுடையம்மாள்
கி.பி 19 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் வாழ்ந்த ஒரு புலவர். இவர் தென்காசிக்கருகிலுள்ள செங்கோட்டை என்னும் ஊரைச் சேர்ந்தவர். வேதாந்த கொள்கை உடையவராக விளங்கியவர். வேதாந்த கோட்பாட்டினை நன்குணர்ந்து அதனை விளக்கும் நூல்கள் எழுதியுள்ளார். வேதாந்த வித்தியா சோபனம் என்னும் நூல், வேதாந்த கருத்துக்களைச் சோபனப் பாட்டில் அமைத்து விளக்குகின்றது. இந்நூல் கி.பி 1890 வெளிவந்தது. கி.பி. 1896 -இ ல் வெளிவந்த வேதாந்த பள்ளு என்னும் இவரது நூல் வேதாந்த கொள்கைகளை, எளிய மக்களின் பேச்சு மொழியில் அமையத்தக்க பள்ளு என்னும் சிற்றிலக்கிய வாயிவாக விளக்குகிறது. என ஆவுடை அக்கா பற்றிய செய்தி வாழ்வியற் களஞ்சியத்தில் காணப்படுகின்றது. இச் செய்தியின் வாயிலாக ஆவுடையம்மாள் என்னும் பெயர் பின்னால் ஆவுடை அக்காள் என வழங்கலாயிற்று என அறியமுடிகின்றது. செங்கோட்டையில் பிராமணக் குடும்பத்தில் பிறந்தவர் ஆவுடை அக்கா. இளம் வயதில் திருமணம் செய்து வைக்கப்பட்டு, கணவரை இழந்த கைம்பெண்ணாக வீட்டுக்குள் வளர்ந்தார். ஊரின் எதிர்ப்பைப் பொருட்படுத்தாமல் அக்காவின் தாயார் அவர் கல்வி கற்பதற்கான ஏற்பாடுகளைச் செய்தார். பண்டிதர்களை வீட்டுக்கு வரவழைத்து அக்க...