இணைமொழிகள்

இன்று இகர வரிசையில் துவங்கும் இணைமொழிகளைப் பார்க்கலாம்.


இசகு பிசகாய் நடக்கிறான்,அகப்பட்டுக்கொண்டான்.
இண்டும் இடுக்குமாய் இருக்கிறது.
இயங்குதிணை நிலைத்திணை ஆகிய இருவகைச் சொத்தும் உண்டு.
இயலும் செயலும் ஒத்திருக்கும்.
இழுப்பும் பறிப்புமாய் கிடக்கிறது.
இளைத்தும் களைத்தும் போனான்.
இன்னார் இனியார் என்று அவனுக்கில்லை.

ஈகை யிரக்கம் இருக்க வேண்டும்.
ஈடும்எடுப்பும் அற்றவன்.
ஈடுசோடு இல்லாதவன்.
ஈயெறும்பு மொய்க்கும்.

உடைநடையால் உயர்வு தாழ்வு அறியப்படும்
உண்டியுறையுள் வசதியுண்டு.
உண்டுடுத்து வாழவேண்டும்.
உருட்டும் புரட்டும் எண்ணிடம் பலிக்காது.
உருண்டு திரண்டு இருக்கிது.
உருவும் திருவும் ஒத்த காதலர்.
உள்ளது உரியது எல்லாம் விற்றுவிட்டான்.
உற்றார் உறவினர் உதவுவர்.

ஊண்உடை சிறக்க வேண்டும்.
ஊண் இறக்கம் ஒழித்து வேலை செய்தான்.
ஊதியமும் இழப்பும் வணிகத்திற்கியல்பு.

எக்கச்சக்கமாய் மாட்டிக் கொண்டான்.
எக்காளமும் ஏடாசியுமாய் பேசுகிறான்.
எய்படை எறிபடை கொண்டு பொருதார்கள்.

ஏங்கித் தேங்கித் தவிக்கிறான்.
ஏட்டிக்குப் போட்டியாய் செய்கிறான்.
ஏமமும் சாம்மும் கூத்தாடுகிறான்.
ஏழை பாழை பிழைக்க வேண்டும்.
ஏற்றதாழ்வு சமுதாயத்தில் இருக்க கூடாது.
ஏற இறங்க பார்க்கிறான்.

ஒட்டி உலர்ந்து போயிற்று.
ஒட்டுறவு அற்றுப் போய்விட்டது.
ஒண்டு சண்டியாய் காட்டுவழி போகக் கூடாது.
ஒன்றாய் மன்றாய்க் குடியிருக்கிறார்கள்.
ஓட்டமும் நடையுமாய் போய் சேர்ந்தோம்.
ஓட்ட உடையல் போட்டு வைக்கும் அறை.
ஓட்டை சாட்டை யிருந்தால் கொடு.
ஓடியாடி திரிகிறான்.
ஓய்வும் சாய்வும் ஒருநாளும் எனக்கில்லை.

--------------------------தொடரும்

கருத்துகள்

Admin இவ்வாறு கூறியுள்ளார்…
அனைத்தையும் அறிய ஆவலாக இருக்கிறேன். தொடருங்கள்... வாழ்த்துக்கள்...
குப்பன்.யாஹூ இவ்வாறு கூறியுள்ளார்…
wow superb, thanks for sharing
முனைவர் கல்பனாசேக்கிழார் இவ்வாறு கூறியுள்ளார்…
உங்கள் வருகைக்கு நன்றி சந்ரு.
முனைவர் கல்பனாசேக்கிழார் இவ்வாறு கூறியுள்ளார்…
நன்றி குப்பன்
Suresh Kumar இவ்வாறு கூறியுள்ளார்…
அருமையாக உள்ளது . உங்கள் இடுகையை பின் தொடர விருப்பம் ஆனால் பின் தொடர் widget இல்லையே

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

புறநானூற்றில் கல்விச்சிந்தனை

சங்க இலக்கியத்தில் விருந்தோம்பல்

பூவின் பல நிலைகள்.......