கேட்ட கதை
அண்மையில் கேட்ட ஒரு கதை பெரியவர் ஒருவர் ஒவ்வொரு நாளும் கடற்கரையோரம் சென்று தியானம் செய்வது வழக்கம்.அவர் தியானம் செய்யும் பொழுது அவர் மேல் கடற்கரையில் உள்ள நண்டுகள் எல்லாம் ஏறி மகிழ்ச்சியாக விளையாடிக் கொண்டு இருக்கும்.
இப்படியாக ஒவ்வொரு நாளும் அவரின் காலை பொழுது கழியும்.
ஒருநாள் அவருடைய பேரன் தாத்தா நீங்கள் ஒவ்வொரு நாளும் தியானம் செய்யும் போது உங்கள் மேல் நண்டுகள் ஏறிவிளையாடுகின்றன,இன்று நீங்கள் தியானம் செய்ய போகும் போது எனக்கு ஒரு நண்டினைப் பிடித்துக்கொண்டு வந்து கொடுங்கள் என்று கூறினான்.அவர் எவ்வளவோ மறுத்துப் பார்த்தார் பேரன் கேட்பதாக இல்லை.பேரன் ஆசைப்பட்டுவிட்டானே ,அவனுக்கு இன்று ஒரு நண்டினைப் பிடித்துக் கொடுப்போம் என்ற எண்ணத்தில் விடியலில் தியானம் செய்ய கடற்கரைக்குச் செல்லுகின்றார்.அவர் மனநிலை முழுதும் தியானத்தில் ஒன்றவில்லை எப்பொழுது நண்டுகள் நம்மீது ஏறும் பிடிக்கலாம் என்ற எண்ணத்துடன் இருந்தார்.ஆனால் அன்று ஒரு நண்டு கூட அவரின் அருகே வரவில்லை.வெறுங்கையுடன் திரும்பினார்.
அவரின் எண்ணவோட்டம் தியானத்தில் மட்டும் இருந்த போது நண்டுகள் பயமில்லாமல் அவர் மீது ஏறி விளையாடியது.அவரால் தமக்கு துன்பம் வரும் என்று அறிந்தவுடன் அவர் அருகே கூட அவை செல்லவில்லை.இப்படி அஃறிணைக்கு இருக்கும் உணர்வு நமக்கு இருந்தால் பல ஆபத்துக்களில் இருந்து நம்மை காத்துக்கொள்ளலாம்.
கருத்துகள்
கதையின் உட்பொருள் பிரமிக்க வைத்தது. மிக்க நன்றி.
உண்மையான கருத்து