இடுகைகள்

மே, 2009 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

கேட்ட கதை

படம்
அண்மையில் கேட்ட ஒரு கதை பெரியவர் ஒருவர் ஒவ்வொரு நாளும் கடற்கரையோரம் சென்று தியானம் செய்வது வழக்கம்.அவர் தியானம் செய்யும் பொழுது அவர் மேல் கடற்கரையில் உள்ள நண்டுகள் எல்லாம் ஏறி மகிழ்ச்சியாக விளையாடிக் கொண்டு இருக்கும். இப்படியாக ஒவ்வொரு நாளும் அவரின் காலை பொழுது கழியும். ஒருநாள் அவருடைய பேரன் தாத்தா நீங்கள் ஒவ்வொரு நாளும் தியானம் செய்யும் போது உங்கள் மேல் நண்டுகள் ஏறிவிளையாடுகின்றன,இன்று நீங்கள் தியானம் செய்ய போகும் போது எனக்கு ஒரு நண்டினைப் பிடித்துக்கொண்டு வந்து கொடுங்கள் என்று கூறினான்.அவர் எவ்வளவோ மறுத்துப் பார்த்தார் பேரன் கேட்பதாக இல்லை.பேரன் ஆசைப்பட்டுவிட்டானே ,அவனுக்கு இன்று ஒரு நண்டினைப் பிடித்துக் கொடுப்போம் என்ற எண்ணத்தில் விடியலில் தியானம் செய்ய கடற்கரைக்குச் செல்லுகின்றார்.அவர் மனநிலை முழுதும் தியானத்தில் ஒன்றவில்லை எப்பொழுது நண்டுகள் நம்மீது ஏறும் பிடிக்கலாம் என்ற எண்ணத்துடன் இருந்தார்.ஆனால் அன்று ஒரு நண்டு கூட அவரின் அருகே வரவில்லை.வெறுங்கையுடன் திரும்பினார். அவரின் எண்ணவோட்டம் தியானத்தில் மட்டும் இருந்த போது நண்டுகள் பயமில்லாமல் அவர் மீது ஏறி விளையாடியது.அவரால் தமக்கு து...

நன்றி யூத்புல்விகடன் குட்ப்ளாக்ஸ்

முனைவர் D.சாந்தி அவர்ளைப் பற்றிய கட்டுரையை வெளியிட்ட குட்ப்ளாக்கிற்கு நன்றி ஜமதக்னி முதல்வர் D.சாந்தி திருக்குறள் ரீமிக்ஸ் - தேர்தல் புதுக்குறள்! Low Disk space warning மற்றும் Don't Send error reporting நீக்குவதை பற்றி சிறு நகர காதலின் சிரமங்கள் Captcha - சிறு விளக்கம்... Up 3D (2009)

பேராசிரியர் மா.இராமலிங்கம்

படம்
1982 ஆம் ஆண்டு புதிய உரைநடை என்னும் நூலூக்குச் சாகித்திய அகதெமி விருதும்1983 இல் விடுதலைக்கு முன் தமிழ் சிறுகதை என்னும் நூலூக்கு தமிழ் வளர்ச்சித்துறை பரிசும்,1992 இல் கவிதை படைப்புக்குப் பாவேந்தர் பாரதிதாசன் விருதும்,1988 இல் நல்லாசிரியர் விருதும்,நாவல் இலக்கியம் என்னும் நூலுக்கு விருதும்,2008 இல் நிச்சயத்தார்த்தம் என்னும் குஜராத்தி மொழிபெயர்ப்பு நூலிக்கு சாகித்திய அகதெமி விருதும் பெற்ற பெருமைக்குரியவர் பேராசிரியர் மா.இராமலிங்கம்.இவர் இலக்கிய உலகில் எழில் முதல்வன் என்னும் புனைப்பெயரில் பல படைப்புக்களைப் படைத்துள்ளார்.ஒய்வு பெற்ற பின்பும் ஒயாது உழைத்துக் கொண்டு இருப்பவர். பல்வேறு மொழிகளில் உள்ள நூல்களைத் தமிழில் மொழிப்பெயர்ப்புச் செய்து கொண்டுள்ளார்கள். நாகை மாவட்டம் திருத்துரைப்பூண்டி என்னும் தாலுக்காவில் உள்ள தகட்டூர் என்னும் ஊரில் 5-10-1939 ஆம் ஆண்டு திருமிகு வ.மாணிக்கம் திருமதி மா.இராமாமிருத அம்மையார் இணையருக்கு மகவாய் தோன்றினார்.உயர்நிலைக் கல்வி திருத்துறைப்பூண்டியிலும்,தமிழ் இளங்கலை கும்பகோணம் அரசு கல்லூரியிலும் பயின்று,முதுலை சென்னை மாநிலக்கல்லூரியில் பயின்று முதல் வகுப்பி...

முதல்வர் D.சாந்தி

படம்
பெண்கள் இன்று எல்லா துறைகளிலும் தங்களது முத்திரைகளைப் பதித்து வருகின்றனர் . எடுத்துக்கொண்ட வேலைகளைச் செவ்வனே முடித்து வெற்றிவாகை சூடிக்கொண்டுள்ளனர். அந்த வகையில் தான் கேரளாவில் சந்தித்த ஒரு தமிழ் பெண்மணியைக் குறிப்பிடலாம். தமிழகத்தின் ஒரு குக்கிராமத்தில் பிறந்து இன்று சாதனைகளின் எல்லைகளைத் தொட்டு கொண்டிருப்பவர்தான் Regional Vocational Traning Institute For Woman (RVTI) என்ற நிறுவனத்தின் முதல்வர் D . சாந்தி. திண்டுக்கல் பெத்தாம்பட்டி என்னும் கிராமத்தில் பிறந்து ,பெத்தம்பட்டி அரசு பள்ளியில்1-3 வகுப்பு வரையிலும் கொசவப்பட்டி R.C.கான்வெட்டில் 4-8 பயின்றும்,மேலும் மதுரை லூர்தூ அன்னை மேல்நிலைப்பள்ளியில் 11 ஆம் வகுப்பு வரை கல்வி கற்றும் ,மதுரையில் ஆடை வடிவமைப்புத் துறையில் பயின்று,1992 ஆம் ஆண்டு UPSC –யால் பயிற்சி அதிகாரியாக தேர்வு செய்யப்பெற்று,தன்னுடைய திறமையான பணியின் காரணமாக இன்று,இந்தியாவின் ஏழு இடங்களில் அமைந்துள்ள இந்நிறுவனங்களின் ஒன்றான கேரள பகுதியில் முதல்வராக 11-6-2007 இலிருந்து பதவியேற்று,திறம்பட தன் பணியை இன்று செய்து வருகின்றார். அந்த பகுதி நிறுவனத்தில் முதல்வராக பதவி ஏற்றுள்ள மு...

செல்லியம்மன் திருவிழா

படம்
அசுர நாகரிக வளர்ச்சியின் ஊடே,கிராமங்களும் தங்கள் நிறத்தினை மாற்றிக் கொள்ள தொடங்கினாலும் , சில பழமையான விழாக்களால் கிராமங்கள் இன்னும் தன்னை அடையாளப்படுத்திக் கொண்டுதான் உள்ளது.நாட்டுப்புற வழிபாடுகள் என்பது தொன்மை வாய்ந்தது. இவ்வழிபாடுக்ள மூலமாக பழமைகள் போற்றப்படுகின்றது.காக்கப்படுகின்றது என்றும் கூறலாம். வரலாற்றுச் சிறப்பைத் தன்னகத்தே கொண்டு , உலகின் அச்சானியாகத் திகழக் கூடிய உழவுத் தொழிலை மையமாகக் கொண்டு ,கலைகளின் பிறப்பிடமாய் திகழக் கூடிய தஞ்சை தரணினியின் ஒரு சிறு பகுதியாக உள்ளதுதான் ஒக்கநாடு கீழையூர் என்னும் கிராமம். இங்கு உழவுத் தொழில் தான் முக்கிய தொழிலாகவுள்ளது.ஆண்டு தோறும் உழைத்துக் களைத்த மக்களுக்கு , அவர்கள் கொண்டாடும் விழாக்களே ஒரு மாற்றாகவுள்ளது.இந்த கிராமத்தில் நாகரிக வளர்ச்சியின் தாக்கம் தலைக்காட்டத் தொடங்கியிருந்தாலும்,இன்னும் பழமை மாறாமல் விழாக்களை நடத்திக் கொண்டுள்ளனர். கோடைக்காலத்தில் (மே) மாதத்தில் விழாக்கள்நடைபெறுவது வழக்கம்.இந்த ஆண்டும் கடந்த வாரம் காப்புக் கட்டுடன் இங்கு விழாத்தொடங்கியது.இன்னும் இங்கு விழாவினைப் பறையறைந்து அறிவிக்கும் முறைவுள்ளது.விழா அறிவிக்கப்பட்...

மொழியியலில் கணினி பயன்பாடு

படம்
கேரளப் பல்கலைக்கழகத்தில் கடந்த ஆறு நாள்களாக நடைப்பெற்ற மொழித்துறையில் கணினி பயன்பாடு குறித்த கருத்தரங்கில் கலந்து கொண்டு இன்று ஊர்திரும்பினேன்.மிக பயன்னுள்ளதாக இருந்து.நிறைய நண்பர்கள் அறிமுகமானார்கள்.இதுதான் நான் முதல் முதலாக கேரளா சென்றது. சென்ற சனிக்கிழமை கிளம்பி ஞாயிறு காலையில் திருவனந்தபுரத்தைச் சென்றடைந்தேன்.கேரளா சென்ற நேரம் பயங்க வெயில்,பயங்கர வேர்வை ஏன் வந்தோம் என்று இருந்து. இருந்தாலும் பசுமை ,எங்கும் நிறைந்து காணப்படும் மரங்கள் மனதுக்கு மகிவூட்டியது. வரும் இரண்டுநாளில் இருந்து மழை பெய்யத்தொடங்கியது. ஆனாலும் பூமி குளிரவில்லை. கேரளாவின் தலைநகரான திருவனந்த புரத்தின் பேருந்து நிலை மிக மோசமான நிலையில், ஆனால் அங்குள்ள மக்கள் பழக மிக இனிமையானவர்களாக இருக்கின்றார்கள்.நானும் என்னுடன் வந்த தமிழ்ப் பல்கைக்கழகப் பேராசிரியர் மங்கையர்கரசி அவர்களும் கழக்கூட்டத்திலி உள்ள பெண்கள் விடுதியில் தங்கி இருந்தோம்.அங்கிருந்த அனைத்துப் பெண்களும் மிக அன்புடன் பழகினர்.அவ்விடுதி காப்பாளர் சீனா என்ற பெண் மிகவும் கவர்ந்து விட்டாள் . அப்படி ஒரு பாசத்துடன் பழகினாள்.அவளுக்கு மலையாளம் மட்டிமே தெரியும் ,இருந்...

சைவசித்தாந்தம்

மானுட வளச்சிக்கு ஏற்ப,அவனுடைய இறைவழிபாட்டு முறையும் காலம் தோறும் வளர்ந்துள்ளது.மனித இனம் எதனைக் கண்டு அச்சப்படத்தொடங்கியதோ, அதனை முதலில் வழிபட்டிருக்க வேண்டும்.அதன் பிறகு அவனுடைய வாழ்க்கைக்குத் துணைப்புரிய கூடியவற்றை அவன் வணங்க தொடங்கியிருக்க வேண்டும்.பின்பு தங்களைத் துன்பத்திலிருந்து காப்பவர்களையும்,வீட்டில் இறந்தவர்களையும் வழிபடும் முறை இருந்துள்ளது. இன்றும் பாம்பு வழிபாடு,இறந்தவர்களை நினைத்து வழிபாடு செய்தல் போன்றவை வழக்கில் இருப்பதைக் காணலாம். சைவசமயம் என்பது எப்பொழுது தொடங்கியது என்பதனை அறுதியிட்டுக் கூறமுடியாது.சைவ வழிபாடு என்பது தொன்மை காலத்தில் இருந்துள்ளது என்பதை, அகழாய்வின் மூலம் நிறுவியுள்ளனர். சிவலிங்க உருவ வழிபாடும் இருந்துள்ளமையையும் கல்வெட்டுகளில் காண்டெடுத்த சிற்பங்களின் வாயிலாக அறியமுடிகின்றது. தொன்மை வாய்ந்த சிவ வழிபாடு பற்றிய குறிப்பு , நம் பழமையான இலக்கண நூலாகிய தொல்காப்பியத்தில் காணப்படவில்லை என்றாலும்,சங்க இலக்கியங்களில் ஆங்காங்கு சில குறிப்புக்கள் காணப்பெறுகின்றன. தொல்காப்பியம் நானிலத்துக்குரிய தெய்வத்தை மட்டும் கூறுகிறது,சிவபெருமானைத் தனித்துக் கூறாததற்குக் கா...

சங்க வாழ்வு

படம்
நம்முடைய பழமையான சங்க இலக்கியம் எத்தனையோ அக வாழ்வியல் செய்திகளை உள்ளடக்கியுள்ளது.அச்செய்திகள் எல்லாம் நம் வாழ்வை வளப்பமாக்கும் என்பதில் ஐயமில்லை. நற்றிணையில் முதல் பாடல் தலைவன் தலைவியை விட்டுப் பிரிந்து,செல்லக்கூடிய சூழல் வருகிறது,தலைவன் பிரிந்தால் தலைவி வருந்துவாளே என்று தோழி ,தலைவன் உன்னை விட்டு பிரியக் கருதுகிறான் என்று கூறுகிறாள்.தலைவியோ தலைவன் அப்படி செய்பவன் இல்லை.என்று கூறி அவன் புகழ் பாடுகிறாள். என்னுடைய தலைவன் சொன்ன சொல் தவறாதவர்.என்றும் இனிமைப் பண்பு கொண்டொழுகும் உயர்ந்த மாண்பினர்.என்னை விட்டு பிரியவேண்டும் என்று ஒரு போதும் அவர் எண்ணியது இல்லை.அவர் என்மேல் மிகுந்த அன்புடையவர்.அவருடைய நட்பு எப்படி போன்றது தெரியுமா? சிறந்த தாமரை மலரினை அணுகி ,அதில் உள்ள தேனினை எடுத்த வண்டு ,உயர்ந்த சந்தனமரத்தில் கட்டினால் எவ்வளவு சிறப்பாக இருக்குமோ அதனைப் போன்றது அவருடைய நட்பு. இந்த உலகம் நீரில்லாமல் அமையுமா?முடியாது அல்லவா.அது போல்தான் அவரில்லாமல் நான் மிகுந்த துன்பத்திறக் ஆட்படுவேன் என்பதனை அறிந்து,என்னை விட்டு பிரிந்து செல்லும் எண்ணத்தைக் கைவிடுவார் என்று கூறுகிறாள். நின்ற சொல்லர் நீடுதோன்ற...

தாம்பூலம் தரித்தல்.....

படம்
தமிழர்களுடைய பழக்க வழக்கங்களில் ஒன்று தாம்பூலம் தரித்துக்கொள்ளுதல். தாம்பூலம் தரித்தல் என்றால் வெற்றிலைப் போடுவதாகும்.என்னென்ன பொறுள்களைக் கலந்து தாம்பூலம் தரிக்கவேண்டும் என்பதும் உண்டு.வெற்றிலையுடன் பச்சைக் கற்பூரம்,ஜாதிக்காய் ,வால் மிளகு,காராம்பு,கத்தக்காம்பு,சுண்ணாம்பு,பாக்கு ஆகிவற்றைச் சேர்த்து போடுவதால் உடலுக்கு நன்மை ஏற்படுகிறது. தாம்பூலம் தரிப்பதால் என்ன பயன் என்றால், வாய்க்கு நறுமணம் ஏற்படுகிறது.முகத்திற்கு அழகையும் ஒளியையும் உண்டாக்குகிறது . தாடை ,பல்,நாக்கு இவற்றின் அசுத்தங்களைப் போக்குகிறது.வாயில் மிகுதியாக உமிழ் நீர் சுரப்பதைத் தடுக்கின்றது.கலவியில் விருப்பத்தை ஏற்படுத்துகிறது.துவர்ப்பு ,கார்ப்பு,கசப்பு,உவர்ப்பு சுவைகள் ஒருங்கே இருப்பதால் எளிதில் உண்ட உணவு செரிக்கின்றது.இதயத்திற்கு நலம் பயக்கின்றது.தொண்டை நோய்களைப் போக்குகின்றது. தாம்பூலத்தை எப்பொழுது போட்டுக்கொள்ளவேண்டும் என்றும் வரையறுத்துற்றனர் நம் முன்னோர்.தூங்கி எழுந்தவுடன்,உணவு உண்ட பின்,குளித்த பிறகு தாம்பூலம் தரித்துக்கொள்ளலாம்.அதே போல காலை நேரத்தில் தாம்பூலம் போடும்போது பாக்கைச் சிறிது கூடுதலாகவும்,மதியநேரத்தில்...

சைவசித்தாந்த வகுப்பு

படம்
திருமுறை அருட்பணி அறக்கட்டளைச் சார்பில் ஆண்டின் கோடைக்காலத்தில் சைவசமயப் பயிற்சி வகுப்பினை நடத்துகின்றனர்.இந்த ஆண்டின் சைவசித்தாந்த பயிற்சி வகுப்பு இன்று(2-5-2009)தொடங்கியது.இவ் வகுப்பு தொடர்ந்து பத்து நாள்கள் நடைபெறுகிறது. இன்று காலை 10.30 மணிக்கு தொண்டை மண்டல ஆதினம் குருமகாசந்நிதானம் அவர்கள் தலைமையில் விழா சிறப்பாகத் தொடங்கியது.இவ் விழாவில் உமாபதி சிவாச்சாரியார் அருளிய திருவருட்பயன் நூலுக்குப் புலவர் சரவண சதாசிவம் அவர்கள் எழுதிய உரைவிளக்கம் நூல் வெளியீடும் நடைபெற்றது. விழாவினைத் தொடர்ந்து 12.10 இலிருந்து 1.10 வரை முனைவர் அ.பாலறாவாயன் அவர்கள் சிவஞானபோதகத்தினைப் பற்றி விளக்கம் அளித்தார்கள். மெய்கண்ட தேவரால் எழுதப்பெற்ற சிவஞனபோதகம் என்னும் நூல் தமிழில் எழுதப்பெற்ற முதல் நூலே என்பதை தக்க காரணங்களுடன் விளக்கினார். இது மொழிப்பெயர்ப்பு நூல் எனக் கூறும் சிவஞான முனிவர் அவர்களின் கருத்து ஏற்புடையதல்ல என்பதைத் தெளிவுபடுத்தினார். மெய்கண்டரின் இயற்பெயர் சுவேத பெருமாள் என்பதும் ,அவருடைய குரு பரஞ்சோதி முனிவர்,அவருடைய குருவின் பெயரான சத்தியஞான தர்சினி என்பதைத் தமிழ் படுத்தி மெய்கண்டார் எனப் ப...

உத்திரமேரூர்

படம்
வரலாற்றுச் சிறப்பு மிக்க உத்திரமேரூரில் எழுந்தருளியுள்ள ஸ்ரீ சுந்தரவரதராஜப் பெருமாள் கோவில்.இத்தலம் பொய்கையாழ்வார்,பேயாழ்வார்,திருமிசையாழ்வார்,திருமங்கை ஆழ்வார் ஆகியோரால் பாடப்பெற்ற தலமாகும். உத்திரமேரூர் சதுர்வேதி மங்கலம் சோழர்களால் பார்ப்பனர்களுக்கு தானமாக கொடுக்கப்பட்ட 12 சேரிகளை உள்ளடக்கிய ஊர்களாகும். அந்த சதுர்வேதி மங்கலத்தின் தோட்டம், ஏரி போன்றவற்றிற்கான வாரியங்களை நாட்டாமை செய்பவருக்கான தேர்தல் முறைகள் இருந்துள்ளமையை இங்கு உள்ள கல்வெட்டுகள் அறிபட்டுள்ளன.

சாப்பிட

தங்க தட்டில் சாப்பிடுவதின் குணம் தங்கத் தட்டில் சாப்பிடுவது தோஷங்களைப் போக்கும்.உடம்பைத் தேற்றும்.இதமானது. வெள்ளித் தட்டில் சாப்பிட்டால் கண்களுக்கு நலம்.பித்ததைப் போக்கும்.கபம் வாயுவை இவைகளை உண்டாக்கும். வெங்கலத்தட்டில் சாப்பிட்டால் புத்தியை வளர்க்கும்.உணவின் சுவையைக் கூட்டும்.பித்ததைத் தெளிவுபடுத்தும் இரும்பு கண்ணாடிப் பாத்திரங்களில் சப்பிடுவதால் சித்தியைக் கொடுகிறது.வீக்கம்,சோகை,இவைகளைப் போக்குகிறது.காமாலையைப் போக்குவதில் சிறந்தது. வலிமையைக் கொடுகிறது. வாழை இலையில் சாப்பிடுவதால் உடம்புக்கு வலிமையைக் கொடுக்கும் விஷதோஷத்தைப் போக்கும்.ஆண்மையை வளர்க்கும்.உணவின் சுவையை மிகுவிக்கும்.பசியைத் தூண்டும்.குளிர்ச்சியை உண்டாக்கும்.உடம்புக்கு நல்ல ஒளியை உண்டாக்கும். பூவரச இலையில் சாப்பிடுவதால் வாயு ,கபத்தைப் போக்கும்,பசியைத் தூண்டும்.வயிற்றில் உண்டாகும் கட்டி போன்ற நோய்களைப் போக்கும். உணவின் சுவையைக் கூட்டும். பலா இலையில் சாப்பிடுவதால் பலா இலையில் சாப்பிடுவது சிறந்தது.சுவையை உண்டுபண்ணுகிறது.வாயு கபம் இவைகளைக் குறைக்கின்றது.உடம்பைத் தேற்றுகின்றது.பசித்தீயைத் தூண்டுகிறது. ஆல்,அத்தி,இத்தி,அரசு ...