அண்ணா கருத்தரங்கம்
அண்ணாமலைப் பல்கலைக்கழகத் தமிழியல் துறையின் சார்பாக அண்ணா நூற்றாண்டினைக் கொண்டாடும் வகையில் இரண்டுநாள் கருத்தரங்கினை ஏற்பாடு செய் பட்டிரு ந்தது.அது தொடர்பான கருத்தரங்க முதல் நாள் நிகழ்வு இன்று நடைப்பெற்றது. துணை வேந்தர் ,மொழிப்புல முதன்மையர்,சிறப்பு விருந்தினர்கள் ஆகியோர் குத்து விளக்கு ஏற்ற விழா இனிதே தொடங்கியது.மொழிப்புல முதன்மையர் அனைவரையும் வரவேற்று, அண்ணாவைப் பற்றி சிறந்த அறிமுகவுரை நல்கினார்கள். தலைமையுரை மாண்பமை துணைவேந்தர் இராமநாதன் வழங்கினார்கள்.சிறப்பு விருந்தினர் பேராசிரியர் மா.நன்னன் தமிழுலகம் நன்கறிந்த தமிழறிஞர் அவர் தமது உரையின் தொடக்கத்தில் ‘வணக்கம்’ என்று நான் கூறமாட்டேன் வாழ்த்து எனக் கூ றினார்.அதற்கு அவர் அளித்த விளக்கம் சிந்திக்க வைப்பதாக இருந்தது.நம்முடைய சங்க இலக்கியங்களில் மன்னர்களை வாழ்த்துகின்றார்களே ஒழிய வணங்கவில்லை.வணங்குதல் என்பது பிற்காலத்தில் தோன்றியது எனக் கூறினார்.மேலும் அவர் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் பயின்ற நினைவுகளைப் பகிர்ந்து கொண்டார். உணவு இடைவெளிக்குப் பிறகு பேராசிரியர் முனைவர் சி.மறைமலை அவர்கள் அண்ணாவைப் பற்றி சிறப்புச் சொற்பொழிவாற்றினார்கள்.ஆய...