இடுகைகள்

வேளாண்மையியல் (பட்டயம்)

வேளாண்மையியல் (பட்டயம்) TAM 228: தமிழ் வழி தகவல் பரிமாற்ற வழிமுறைகள் கலைச் சொற்கள் எல்லா சொல்லும் பொருள் குறித்தனவே” என்ற கருத்திற்கு ஏற்ப ஒவ்வொரு சொல்லும் ஓர் பொருளை குறித்தே உருவாகிறது. ஒவ்வொரு மொழியில் உள்ள கருத்துக்களை பிற மொழியில் பெயர்த்து எழுதுதல் மொழிபெயர்ப்பு எனப்படுகிறது. மொழி பெயர்ப்பின் உயிர்த்துடிப்பு கலைச் சொற்கள் ஆகும். ஒரு மொழியிலுள்ள ஒரு சொல்லுக்கு ஏற்ற சொற்செறிவும், கருத்தாழமும் மிக்க எளிமையான சொல்லை கலைச் சொல் என்கிறோம். ஒரு   மொழியில்   இல்லாத   சொல்லுக்கு   வேற்று   மொழியினின்று   நேரிடையாகச்   சொற்களைப்   பெற்றோ, ஒலிப்   பெயர்த்தோ   அல்லது   மொழி   பெயர்த்தோ   புதுச்   சொற்களை   ஆக்கிக்   கொள்வதைக்   கலைச்   சொல்லாக்கம்   என்பர். குறுகிய   பொருளில்   பயன்படும்   சொற்களே   கலைச்சொற்கள். புதிய   கருத்துக்களை   விளக்க, கலைச்சொற்கள்   குறுகியவையாகவும்     இலக்கண      விதிகளுக்கு ...