இடுகைகள்

தனே புயலின் அறுவடை

2011 டிசம்பர் 29 அன்று கடலூர்,புதுச்சேரி பகுதியில் கோரத்தாண்டவம் ஆடிச் சென்ற தனே புயல் குறித்து தனே புயலின் அறுவடை என்னும் ஆவணப்படத்தை தங்கர்பச்சான் பிப்ரவரி 25 அன்று சிதம்பரம் லேனா திரையரங்கில் வெளியிட்டுப் பேசினார். சுனாமி ஏற்படுத்திய பாதிப்பு வேறு தனே புயல் ஒரு தலைமுறையின் வாழ்க்கையே கேள்விக்குறியாக்கிவிட்டது. கடலூர் மாவட்டம்  பல  பகுதிகளின் வாழ்வாதாரமாக இருக்க கூடிய பலா,முந்திரி போன்ற மரங்கள் அழிந்த நிலையில், அது போன்று உருவாக்க குறைந்தது இன்னும் பதினைந்து ஆண்டுகளுக்கு மேல் ஆகும். அதுவரை அவர்களின் வழி என்ன? அப்படி மரங்கள் வைத்தாலும் அதனை காவந்து பண்ணுவது எப்படி?நிலத்தடி நீர்மட்டம் இறங்கி போயியுள்ள நிலை இது எப்படி சாத்தியமாகும்? இதற்கு அரசு என்ன தீர்வை கூறப்போகின்றது என்ற வினாவுடன் ?ஆவணப்படம் திரையிடப்பட்டது.48 நாள்கள் அங்கு தங்கி எடுக்கப்பட்டதாக கூறினார். தமிழர் திருநாளை மகிழ்வுடன் கொண்டாடவேண்டிய  மக்கள் புயல் அறுவடை செய்து சென்ற நிலையில்  அடிப்படை வசதிகள் கூட பழுது நீக்கப்படாமல்  புலம்பி தவிக்கும் மக்களையும், வாங்குவோர் இன்மையால் சுணங்கி போன வியாபரங்களும்...

“யுத்தம் என்பது இரத்தம் சிந்தும் அரசியல். அரசியல் என்பது ரத்தம் சிந்தாத யுத்தம்”

படம்
  போராட்டமே வாழ்வாக மாறிய போது எப்படியாவது வாழ்ந்துவிட வேண்டும் என்னும் துடிப்புடன் தொடங்குகிறது சயந்தனின் ஆறாவடு. ஆறாதவடுவாய் ஈழ மக்களின் உணர்வுக்குள் ஒடுங்கிய போன பல பக்கங்களைப் பேசுகிறது. சிங்கள இராணுவம், அமைப்திபடை, இயக்கம்  மூன்றின் நிலைபாடு வாழ்வினை மீட்டுத் தரும்  என்னும் நம்பிக்கையோடு அமைதிப்படையைக் கொண்டாட்டத்தோடு வரவேற்கும் ஈழ மக்களின் நம்பிக்கையைக் குலைத்து,வெறியாட்டம் ஆடும் அப்படை, சிங்களப்படையின் கொடூரம், மேலும்...

அண்ணாமலைப் பல்கலைக்கழக பதிப்பக நூல்கள் 50% கழிவு

அண்ணாமலைப் பல்கலைக்கழகப் பதிப்பகம் வெளியிட்டுள்ள  கம்பராமாயணம் தவிர மற்ற நூல்கள்  பாதி விலை கழிவிற்கு இந்த வருடமுழுதும் விற்பனைக்கு கிடைக்கும்.

இலக்கணமும் சமூக உறவுகளும்

படம்
சமூக இயங்கியலுக்கும் மொழிக்குமான உறவு காலத்தால் ஏற்பட்டும் மாற்றத்தை பொருள் முதல் வாதத்தின் அடிப்படையில் இலக்கணங்களை அணுகுகிறது இந்நூல் .உற்பத்தி முறைகளுக்கு ஏற்ப ஒரு சமூக குழுவின் அரசியல்/ சட்டம், பண்பாட்டு நிலை, கருத்து நிலை மேற்கட்டுமானம் ஆகியவற்றில் இயல்பாக மாற்றங்கள் நிகழும் என்பதை விஞ்ஞான முறையில் விளக்க முற்படுகிறது. கி.பி 4 தோன்றியதாக கூறக்கூடிய  தொல்காப்பியத்தையும் கி.பி 13 ஆம் நூற்றாண்டில் தோன்றிய நன்னூலையும் அடிப்படையாக கொண்டு திணை பகுப்பு, பால்,எண், வேற்றுமை வினையமைப்பு ஆகியவற்றில் சமூக மாறுதலுக்கு ஏற்ப மொழி சமூகத்தோடு கொண்டிருந்த உறவினை ஆராய்கின்றது இந்நூல்.

2012 புத்தக கண்காட்சி

2012 க்கான புத்தக கண்காட்சிக்கு நேற்று சென்று வந்தேன். ஞாயிறு 12 மணியளவிலேயே  கூட்டம் நிரம்பி வழிந்த்து.  புத்தக கண்காட்சியைக் காண இவ்வளவு கூட்டம் பிரமிக்க வைத்தது. ஒரு நாளில் அனைத்து புத்தக கடைகளுக்குள்ளும் நுழைந்து பார்க்கும் சாத்தியம் வாய்க்கவில்லை. குறிப்பாக தமிழ் இலக்கிய, இலக்கணம் ,மொழிபெயர்ப்பு இலக்கியங்கள் குறித்தான புத்தகங்கள் மட்டும் வாங்கியதால் அவை தொடர்பாக கடைகளுக்கு மட்டமே செல்ல முடிந்தது. இலக்கியம் திறனாய்வு சார்ந்த நூல்கள் இந்த ஆண்டு பெருமளவு இல்லை என்று கூறலாம். சில பழைய புத்தகங்களின் அட்டைகள் மாற்றப்பட்டு காட்சியளித்தன.   ப. அருணாச்சலம் அவர்களின் வைணவ, சைவ, பக்தி போன்ற சமயநூல்களும், ராஜ்.கௌதமனின் ஆரம்பக் கட்ட முதளாலியமும் தமிழ்ச் சமூக மாற்றமும்,  கலித்தொகை - பரிபாடல் விளிம்பு நிலை நோக்கு அவரின் மொழிபெயர்ப்பு நூல்களான பெண்ணியம் வரலாறும் கோட்பாடுகளும், கதைக் கரூவூலம் சமணக் கதைகள்,  இராம.கி யின் சிலம்பின் காலம்  எம் . வேதசகாயகுமாரின் புனைவும் வாசிப்பும்  ஜெயமோகனின் சங்கச் சித்திரங்கள், இந்திய ஞானம் தேடலும் புரிதலும்,   அற...

மலர் வெளியீடு