இலக்கிய இதழ்கள் வழி திருக்குறளாராய்ச்சி
தமிழ்ச் சமூகத்தில் தாம் தோன்றிய காலம் தொட்டு இடையறவுபடாமல் தொடர்ச்சியாக ஊடாட்டம்
நிகழ்த்தி வரும் நூல் திருக்குறள். படைப்பாளர்கள் திருக்குறளின் கருத்துகளைத் தழுவிக்கொண்டனர்.
பிறநூல் உரையாளர்கள் தங்கள் கருத்துக்கு வலுசேர்க்க அல்லது விளக்கப்புகும் பகுதியைத்
தெளிவிக்க மேற்கோள்களாகத் தமது உரைகளில் எடுத்தாண்டனர். திருக்குறளைப் புரிந்துகொள்ள
முயன்வர்களும் புரிய வைக்க முயன்றவர்களும், தமது அறிவாற்றலைப் புகுத்திப்பாக்க விரும்பியோருர்
எனப் பலர் உரையெழுதினர். திருக்குறளைத் தமிழரின் பண்பாட்டு அடையாளமாக கண்டோர் திருக்குறளை
அரசியல் ஆயுதமாக்கி பொதுவெளியில் அனைவரும் கற்கும்,கேட்கும், பார்க்கும் வகையில் பரவலாக்கம்
செய்தனர்.
தமிழ்ப் புலமை மரபு திருக்குறளுளை அகப்
புறநிலைகளில் ஆய்ந்து ஆய்ந்து அதைச் சுற்றிப்
பிண்ணிப் பிணைக்கப்பட்ட தளைகளை விடுத்து திருவள்ளுவரின் மெய்யான சிந்தனையை நோக்கி நகர்த்த
முற்பட்டுக்கொண்டிருக்கிறது.
அந்நிலையில் இந்த நூல் கவனம் பெறுகிறது. முன்னுரை பகுதியில் திருக்குறள் வளர்ச்சி
வரலாறு, தொகுப்பின் தேவையும் இதழ்க் குறிப்புகளும், இதழ்களின் வழி திருக்குறள் ஆய்வுப்
போக்குகள், நூல் பகுப்பும் அணுகுமுறையும் நூலாக்கத்திற்குத் துணைநின்றோர் ஆகிய பகுதிகள்
அடங்கியுள்ளது. அடுத்து நூலடங்கள் என்னும் முதல் பகுதி அறம், இலக்கணம், இலக்கியத் திறனாய்வு,
உரை ஆராய்ச்சி விளக்கம், உரை கட்டுரை மறுப்பு, ஒப்பீடு, சமயம், திருக்குறள் இயக்கம்,
பரப்புநர் பணிகள்,நூற்பெருமை, சிறப்பு, பிற துறை வல்லுநர், மொழிபெயர்ப்பு, வாழ்க்கை
வரலாறு, பொது, அதன் தொடர்ச்சியாக ஆசிரியர் பெயரடைவு, தலைப்புப் பெயரடைவு, முடிவுரை,
பிண்ணினைப்பு, துணைநூற் பட்டியல் கொடுக்கப்பட்டுள்ளன.
1841 இல் வெளிவந்த உதயதாரகை தொடங்கி 1999 இல் வெளிவந்த வள்ளுவம் இதழ் வரை கிட்டத்தட்ட
80 இதழ்களில் இடம் பெற்றுள்ள கட்டுரைகளை மேற்கண்ட பொருளடிப்படையில் பகுத்துக்கொண்டு
தொகுக்கப்பட்டுள்ளது. 20 ஆம் நூற்றாண்டில் தமிழ்ச் சமூகத்தின் ஆகச் சிறந்த அடையாளங்களுள்
ஒன்றான திருக்குறளைத் தமிழ் புலமை மரபு எவ்வாறு உள்வாங்கிக் கொண்டது என்பதை அறிவதற்கான
முக்கியமான கருவிநூலாக இத்தொகுப்பு அமைந்துள்ளது. இத் தொகுப்பினைத் தாகூர் அரசு கலை அறிவியல் கல்லூரியில்
தமிழ்த்துறைப் பேராசியராக பணி நிறைவு பெற்று தொடர்ச்சியாக திருக்குறள் ஆய்வில் தம்மை
ஈடுபடுத்தி வரும் முனைவர் தி. தாமரைச் செல்வி
அவர்கள் உருவாக்கியுள்ளார்கள்.
நூல் கிடைக்குமிடம்
செயராம் பதிப்பகம்
125, இலால் பகதூர் சாத்திரி வீதி
புதுச்சேரி – 60 001
தொடர்ப்புக்கு- 9443210488
விலை- 1200

கருத்துகள்