தமிழ்ச் சமூகத்தில் தாம் தோன்றிய காலம் தொட்டு இடையறவுபடாமல் தொடர்ச்சியாக ஊடாட்டம் நிகழ்த்தி வரும் நூல் திருக்குறள். படைப்பாளர்கள் திருக்குறளின் கருத்துகளைத் தழுவிக்கொண்டனர். பிறநூல் உரையாளர்கள் தங்கள் கருத்துக்கு வலுசேர்க்க அல்லது விளக்கப்புகும் பகுதியைத் தெளிவிக்க மேற்கோள்களாகத் தமது உரைகளில் எடுத்தாண்டனர். திருக்குறளைப் புரிந்துகொள்ள முயன்வர்களும் புரிய வைக்க முயன்றவர்களும், தமது அறிவாற்றலைப் புகுத்திப்பாக்க விரும்பியோருர் எனப் பலர் உரையெழுதினர். திருக்குறளைத் தமிழரின் பண்பாட்டு அடையாளமாக கண்டோர் திருக்குறளை அரசியல் ஆயுதமாக்கி பொதுவெளியில் அனைவரும் கற்கும்,கேட்கும், பார்க்கும் வகையில் பரவலாக்கம் செய்தனர். தமிழ்ப் புலமை மரபு திருக்குறளுளை அகப் புறநிலைகளில் ஆய்ந்து ஆய்ந்து அதைச் சுற்றிப் பிண்ணிப் பிணைக்கப்பட்ட தளைகளை விடுத்து திருவள்ளுவரின் மெய்யான சிந்தனையை நோக்கி நகர்த்த முற்பட்டுக்கொண்டிருக்கிறது. அந்நிலையில் இந்த நூல் கவனம் பெறுகிறது. முன்னுரை பகுதியில் திருக்குறள் வளர்ச்சி வரலாறு, தொகுப்பின் தேவையும் இதழ்க் குறிப்புகளும், இதழ்களின் வழி திருக்குறள்...