இடுகைகள்

ஆகஸ்ட், 2019 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

இரண்டாம் ஆண்டு - மூன்றாம் பருவம்

இரண்டாம் ஆண்டு - மூன்றாம் பருவம் ITAM – 31 – அற இலக்கியமும் காப்பியமும் திருக்குறள் பதினெண் கீழ்க்கணக்கு நூல்களுள் அறநூல்கள் பதினொன்று ( திருக்குறள் , நாலடியார் ,  நான்மணிக்கடிகை ,  இனியவை நாற்பது ,  இன்னா நாற்பது ,  திரிகடுகம் ,  ஆசாரக்கோவை ,  சிறுபஞ்சமூலம் ,  பழமொழி ,  முதுமொழிக் காஞ்சி ,  ஏலாதி  ) . இவற்றுள் முதன்மையான அற நூல் திருக்குறள். திருக்குறள் அறம்(38) பொருள் (70) இன்பம் (25) என்னும் மூன்று பிரிவுகளையும்  குறள் வெண்பா என்னும் பாவகையால் 1330 ஈரடிச் செய்யுள்களையும் கொண்டது. இந்நூல் மதச் சார்பு அற்ற அக, புற வாழ்வியலுக்கான வழிகாட்டி நூலாக இலங்குவதுடன். உலகப் பொதுமறை, பொய்யாமொழி, வாயுறை வாழ்த்து, முப்பால், உத்தரவேதம், தெய்வநூல் எனப் பல பெயர்களால் அழைக்கப்பெறுகிறது,. தமிழரின் அறிவு மரபின் உச்சம் திருக்குறள் என்று கூறலாம். இந்நூலின் சிறப்பு கருதி இந்திய மொழிகளிலும் உலக மொழிகளிலும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. உழவு 1.    சுழன்றும்ஏர்ப் பின்னது உலகம் அதனால் உழந்தும் உழவே தலை உழுவதைத் துன்பம் என்று கருதிப் ...