மகளிர் தினச் சிறப்புக்கூட்டம்



அண்ணாமலைப் பல்கைலக்கழகத் தமழியல்துறையில் கடந்த மார்ச்சு 6 ஆம் திகதி சர்வதேச உழைக்கும் மகளிர் தினத்தை முன்னிட்டு, சிறப்புக்கூட்டம் நடைபெற்றது. இக்காலப் பெண் - வெளியும் இருப்பும் என்னும் தலைப்பில் தோழர் வ.கீதா அவர்கள் உரையாற்றினார்கள். முன்னதாக எங்கள் துறை உதவிப்பேராசிரியர் முனைவர் இரா. மலர்விழி அவர்கள் வரவேற்புரை வழங்கினார். தமிழ்த்துறைத் தலைவர் பேராசிரியர் முனைவர் ப. ஞானம் அவர்கள் தலைமை ஏற்று உரைநிகழ்த்தினார். இலக்கியல்களிலும், வரலாற்றிலும் பெண் குறித்தான பார்வையை முன் வைத்தார். சங்க காலம் தொடங்கி பெண் மீது நிகழ்த்தபட்ட ஒடுக்குமுறைகளைப் பதிவு செய்தார்கள். அடுத்து உரைநிகழ்த்திய தோழர் வ.கீதா. பெண்ணுக்கான வெளி, அதில் அவள் தன்னை எப்படி உணருகிறாள். பெண்மை, தாய்மை என பெண்களைக் கொண்டாடும் சமூகம் அவள் மீது நிகழ்த்தும் கொடுமைகள், பெண் தன் சுயத்தை உணரவேண்டும். பெண் மீது கட்டமைத்துள்ள கருத்துருக்களின் மீது எதிர் வினை நிகழ்த்த வேண்டும் என்றும் ஊடகங்கள் உருவாக்கி வரும் பெண் பிம்பத்தை உடைத்து வெளிக்கிளம்ப வேண்டும். கூறினார். ஒரு மணிநேரம் அவருடைய உரை அமைந்து. அதனைத் தொடர்ந்து விவாதம் தொடங்களிது. பேராசிரியர்கள் மற்றும் மாணவர்கள் பங்கேற்றனர். இறுதியாக உதவிப்பேராசிரியர் திருமதி நா.சத்யா நன்றியுரை வழங்கினார்.













கருத்துகள்

திண்டுக்கல் தனபாலன் இவ்வாறு கூறியுள்ளார்…
விழாவின் படங்கள் அருமை...

கோலம் சூப்பர்...

நேரம் கிடைப்பின் அனைவரும் உரையையும் பதிவிட வேண்டுகிறேன்... நன்றி... தொடர வாழ்த்துக்கள்...
Thenammai Lakshmanan இவ்வாறு கூறியுள்ளார்…
மிக அருமை.. பகிர்வுக்கு நன்றி.

உங்களோடு தொலைபேசியில் உரையாட இயலுமா.

நான் திரு. எம். ஏ. சுசீலா அவர்களின் மாணவி.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

புறநானூற்றில் கல்விச்சிந்தனை

சங்க இலக்கியத்தில் விருந்தோம்பல்

வாழ்வியல் அறம்