இனக்குழு வாழ்வியலும் வரலாற்று எழுதுகையும்
உலக வாழ் இனக்குழு சமூகங்கள் தங்களுக்கெனத் தனித்த வாழ்வியல் முறைகளையும், பண்பாட்டுக்கூறுகளையும் கொண்டிருக்கின்றன. இன்று உலகமயமாக்கலில் தங்களுக்கான அடையாளங்களை இழக்க தொடங்கியிருக்கும் சூழலில் வாழ்ந்த தொன்ம கதைகளை வரலாறுகளை, பண்பாட்டு அசைவுகளை, கொண்டாட்ட முறைகளைப் பதிவு செய்யும் வேணாவளுடன் பல்வேறு ஆவணங்கள், கள ஆய்வுகள் ஆகியவற்றின் அடிப்படையில் பிறமலைக் கள்ளர் வாழ்வும் வரலாறும் என்னும் நூலை இரா. சுந்தரவந்தியத்தேவன் ஆவணப்படுத்தியுள்ளார். இதற்கு இவர் எடுத்துக்கொண்ட முயற்சி இவருடைய உடல் குறையையும் எண்ணாமல் ஒவ்வொரிடமாக கள ஆய்வு மேற்கொண்டு நடுநிலையோடு வழங்கியிருப்பது சிறப்பு. இவரோடு உரையாடிய பொழுது இவர் திரட்டிய ஆவணங்கள் சென்ற இடங்கள் குறித்து கேட்டு வியந்து போனேன். சு.வெங்கடேசன் , அனந்தபாண்டியன் மூவரும் சென்ற இடங்கள் தேடிய ஆவணங்கள், பரிமாறி கொண்ட கருத்தாடல்கள் அனைத்தையும் பகிர்ந்துகொண்டார். தமிழ்ச்சமூகம் கற்றபித்து இருக்க கூடிய இவ் இனக்குழு குறித்த பார்வையை மாற்றி அமைக்கிறது இந்நூல் .