கதைகதையாய் காரணமாம்...ஒக்கூர்(ஒக்காநாடு கீழையூர்)
ஊர் வரலாறு நாட்டுக்குள்ளேயும்நாலு நாடு நலம் பெறும் ஒக்கநாடு பச்சிலை பறிக்கா நாடு பைங்கிளி நோகாத நாடு கள்ளர் மரபு தவறாத நாடு கடல் தண்ணீயை வாட்டும் நாடு சொல்லுக்கும் பெரிய நாடு நிகழத்தால் பதில் சொல்லும் சுயமரியாதை உடைய நாடு ஊர்ப்பெயர்கள் பல்வேறு கதையாடல்களுக்கு நிலைகளனாக விளங்குகின்றன. ஒக்கூரும் பல தொன்மரபுகளையும் கதையாடல்களையும் கொண்டுள்ளதை மேற்கண்ட பாடல் மூலம் அறியலாம். இப்பாடலில் நாட்டுக்குள்ளேயும் நாலு நாடு என்று குறிப்பிடுவது காசவளநாடு, கோணூர்நாடு ,ஒக்கநாடு, பைங்காநாடு என்னும் ஊர்களாகும். 10,11 ஆம் நூற்றாண்டுகளில் இது போன்ற அமைப்பு காணப்பட்டுள்ளது. பின்னால் ஒவ்வொரு நாட்டுக்குள் இருந்த ஊர்களும் பிரிந்து உள்ளன. ஒக்காடு என்னும் ஊர் பின்னால் மேலையூர் கீழையூர் என்றும் பிரித்துள்ளது. இதில் நிகழத்தால் பதில் சொல்லும் நாடு என்பது பிற ஊர்களில் ஏதேனும் குற்றங்கள் நடந்தால் அது தொடர்பாக பஞ்சாயத்துக் கூட்டச் சொல்லி அனுப்படும் நாட்டோலையைக் குறிக்கும். இந்த ஊரில் நடக்கக் கூடிய வழக்குகளுக்கு மட்டுமல்லாமல் அவ்வூரைச் சுற்றி இருக்க கூடிய மற்ற ஊர்க...