இடுகைகள்

ஜூலை, 2011 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

அரசியலில் ஆணுக்குப் பெண் இளைப்பில்லை காண்

. பெண்மை வாழ்கவென்று கூத்திடுவோமடா! பெண்மை வெல்கென்று கூத்திடுவோமடா ஏட்டையும் பெண்கள் தொடுவது தீமை என்று எண்ணி இருந்தவர் மாய்ந்து விட்டார் வீட்டுகுள்ளே பெண்ணைப் பூட்டி வைப்போம் என்ற விந்தை மனிதர் தலை கவிழ்ந்தார்! எட்டும் அறிவினில் ஆணுக்கிங்கே பெண் இளைப்பில்லை காண் (பாரதியார்) பெண் தனக்கான வெளியில் சுதந்திரமாக சுற்றித்திருந்த காலம் மாறி, நிலவுடைமை சமூகத்தில் அவளுக்கான புழங்கு வெளி ஆணால் வரையறுக்கப்பட்டு , மொழி வழி பதிவு செய்யப்பட்டது. பின்னால் அதுவே பெண்ணுக்கான விதியாக நிலைபெற்றது. ஆண் / பெண் என்னும் எதிர்வுகளின் பேதம் இயற்கையின் படைப்பு அதனைச் சமன்படுத்துவது இயலாத காரியமெனப் பொதுபுத்திக்கு உரைக்கப்பட்டது. இதனால் ஆண் வெளி சமூகமாகவும், பெண் வெளி சமையல் அறையாகவும் கட்டமைக்கப்பட்டது. இக் கருத்தியல் தொடர்பான விவாதங்கள் பைய பைய 19 நூற்றாண்டில் முன்னெடுக்கப்பட்டு பெண்ணியம் என்னும் கோட்பாட்டை உருவாக்கி 20 ஆம் நூற்றாண்டில் மிதவாதம், போராட்ட குணம், தீவிர வாதம், புரட்சிகரம், சமதர்மம் பெண்ணியமென வளரத்தொடங்கியது. இதன் பயனாக பெண் சமூகவெளியில் சில சட்டகங்களை உருவாக்கி ...