சமஸ்கிருத இலக்கிய வரலாறு
இந்திய மொழி மரபினை மொழியியல் வல்லுநர்கள் இந்திய – ஐரோப்பியம் (Indo – European) திராவிடம்(Dravidian) ஆஸ்திரியம்( Austric) திபேத்திய – சீனம் (Tibetian) என நான்காக வகுத்துக் கூறுகின்றனர். கி.பி.1786 இல் சர் வில்லியம் ஜோன்ஸ் என்பவர் கல்கத்தாவில்லுள்ள ஆசியக் கழகத்தில் சமஸ்கிருத மொழியினைப் பற்றி ஆய்ந்து, ஐரோப்பிய மொழிக்கும், சமஸ்கிருத மொழிக்குமுள்ள உறவினை வெளிப்படுத்தினார். அவரைத் தொடர்ந்து கோல்புரூக்பாபு, கீரிம், மாக்சுமுல்லர், புருக்மன், விட்னி ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர்.
இவர்களின் ஆய்வின் மூலமாக மக்கள் பரவப் பரவ மொழிகளில் சிறுசிறு வேற்றுமைகள் வளர்ந்து மொழிபேதங்கள் உண்டாகின்றன. அவை நாளடைவில் கிளைமொழிகளாகி (Dialects) பின்னர், தனித்தனி மொழிகளாக இலக்கிய, இலக்கணங்களுடன் வளர்ந்து விடுகின்றன. இப்படியே மூல இந்திய – ஐரோப்பியம் பல கிளைகளாகப் பிரிந்தது. இப்படி பிரிந்த கிளை மொழிகளுள் ஒன்றே சமஸ்கிருதம். இது இந்திய ஐரோப்பியத்தின் கிழக்கு எல்லையில் உள்ள முக்கிய பிரிவு என்னும் கருத்தை முன்வைக்கின்றனர். இக் கருத்து நிகழ் மொழிச் சூழலில் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.
ஐரோப்பிய மொழியினில் இருந்து கிளைத்த, சமஸ்கிருதத்தில் இருந்து பல கிளைமொழிகள் கிளைத்து வளர்ந்து என்ற கருத்தாக்கம் காணப்படுகின்றது. அவ்வாறு கிளைத்து வளர்ந்த மொழிகளுள் பாலி, பிராகிருதம் மக்கள் வழக்கு மொழியாக இருந்தது என்றும், பின்னால் சமஸ்கிருதம் பயன்பாட்டு மொழியாக இல்லாமல் வழக்கொழியும் நிலை ஏற்றபட்ட பொழுது, இம்மொழிகளில் இருந்து பின்னால் செம்மை செய்து, சமஸ்கிருத மொழியினை உருவாக்கிக் கொண்டனர் என்னும் சிந்தனையும் மொழியியல் அறிஞர்களுக்கிடையே காணப்படுகின்றது.
பாலி, அர்த்தமாகதி, சௌரசேனி, மகாராட்டிரீ, பைசாசி முதலியன பிராகிருதங்களாக மாறின என்றும், இவற்றுள் பாலி மொழியினைப் பௌத்தர்களும், அர்த்தமாகதியைச் சைனர்களும், சௌரசேனியைச் சமஸ்கிருத நாடகங்களிலுள்ள கீழ்நிலை நாடக மாந்தர்களும், மகாராட்டிரம் காப்பயங்களிலும், மக்களுக்கிடையே வழங்கும் கதை இலக்கியத்திற்குப் பைசாச மொழியையும் பயன்படுத்திள்ளனர் என்றும் கூறப்படுகின்றன.
இவற்றுள் சமஸ்கிருத மொழி தேவநாகரி மொழி என்றும், உயர்ந்தோர் மாட்டே பயன்படுத்தப்பட்டது என்பதைச் சமஸ்கிருதத்தில் எழுதப்பட்ட நாடகங்களில் தலைமை மாந்தர்கள் மட்டுமே சமஸ்கிருத மொழியினைப் பேசுவதாக எழுதப்பட்டிருப்பதிலிருந்து அறிந்துகொள்ளலாம். மேலும் சமஸ்கிருத மொழி உயர்ந்த மொழி எனக் கட்டமைக்கும் போக்கும் இருப்பதையும் காணலாம். இதனால் திரவிட மொழிக்குடும்பத்தைச் சார்ந்த மொழிகள் கூட தங்களைச் சமஸ்கிருத்தின் வழித்தோன்றல் என அடையாளப்படுத்துக்கொள்ளவே விரும்புகின்றன.
சமஸ்கிருத மொழியின் காலத்தைப் பலவேறு அறிஞர்கள் கணித்திருக்கின்றனர். பொதுவாக இம் மொழிக்கு கிடைத்துள்ள இலக்கியச் சான்றுகளின் அடிப்படையிலேயே காலத்தை நிர்ணயித்துள்ளனர். ஆனாலும் ஒரு மொழிக்கான காலத்தைச் சரியாக வரையறை செய்வது என்பது இயலாதொன்றாகும்.
இலக்கியச் சிந்தனையின் பயனாகவே ஒரு மொழியினைப் பற்றியும், மக்களின் வாழ்வியல் கூறுகளையும் அறிய இயலும். அந்த வகையில் சமஸ்கிருதத்துக்குக் கிடைத்துள்ள இலக்கியத்தின் வரலாற்றினை ஆய்கின்றது இக்கட்டுரை.
சமஸ்கிருத இலக்கியம் காலத்தால் பழமையும், அளவால் பெரும் பரப்பையும் கொண்டது. சமஸ்கிருத இலக்கியத்தை,
சமஸ்கிருத இலக்கியம்
வேதகால இலக்கியம் இடைக்கால இலக்கியம் பிற்கால கால இலக்கியம்
இதிகாச புராணங்கள்
வேதங்கள் உபபுராணங்கள் காப்பியம்
ருக் யசுர் சாமம் அதர்வணம் சிரவியம் (Audible) திருசியம்(Visible)
பிராம்மணம் பத்தியம் கத்தியம் சம்பு திருத்தம் ரூபகங்கள்
ஆரணியகம் (செய்யுள்) (உரைநடை) (இரண்டும்) (நாடகங்கள்)
உபநிடதம்
வேதாகங்கள் கதை ஆக்யாயிகா
சிட்சை
வியாகரணம்
சந்தம்
நிருத்தம்
சோதிடம் மகாகாவியம் கண்டகாவியம்
கல்பம் (Court epic) (Lyrics)
சிருங்காரம் பக்தி நீதி
(Erotic) (Devotional) (Ethic)
இவ்வாறாகவும், ஸ்ருதி, ஸ்மிருதி, புராணங்கள், காவியங்கள் எனவும் பிரித்துக் காணலாம். ஸ்மிருதி என்பது வேதங்களையும் அதாவது மனித வாழ்க்கைக்குத் தேவையான சட்டங்களைக்கூறும் சட்ட இலக்கியங்கள், ஸ்மிருதி என்பது வேதத்திற்கு விளக்கம் கூறும் இலக்கியங்கள், வேதத்துக்குக் கூறும் சட்டம், ஸ்மிருதி கூறும் விளக்கம் இரண்டையும் இணைத்து எடுத்துக்காட்டுக் கதைகளுடன் விளக்குபவை புராணங்களும், காவியங்களும் ஆகும்.
வேத இலக்கியம்
சமஸ்கிருத இலக்கிய அறிவு மரபின் தொடக்கம் வேதகாலத்தில் தொடங்குகின்றது.வேத இலக்கியத்தின் காலத்தை ஏறக்குறைய 4000 ஆண்டுகளுக்கு முன் அதாவது கி.மு. 1500 –இலிருந்து கி.மு. 200 வரை என வரையறை செய்கின்றனர். மக்கள் வாய்மொழியாக வழங்கி வந்த நாடோடிப்பாடல்களின் தொகுப்பே வேத இலக்கியம். இது அபர்வு சேயம் எனவும் அழைக்கப்படுகின்றது. வேத இலக்கியம் தொடங்கி, சமஸ்கிருத இலக்கிய மரபு என்பது தர்மா, அர்த்தம், காமம், மோட்சம் (அறம், பொருள், இன்பம், வீடுபேறு) என்னும் நாற்பொருளின் அடிப்பையிலேயே அமைந்து, இறுதி பகுதி மோட்சத்தையே வலியுறுத்துகின்றன.
வேத இலக்கியத்தை ருக், யசூர், சாமம், அதர்வம் என நான்காகக் கூறுகின்றனர். இவ்வேதங்களின் தொகுப்பு சங்கிதை எனப்படும். ரிக்வேதப் பாக்கள் கி.மு. 2500 இல் தோன்றின என்பது ஆராய்சியாளர்கள் கருத்து. நான்கு வேதத்துள் முதல் மூன்று ரிக், யசூர், சாமம் மட்டுமே திரயீ வித்யா என மூன்று அறிவுகளாய் கொள்ளப்பட்டன. அதர்வ வேதம் பின்னரே நான்காவது வேதமாக ஏற்றுக்கொள்ளப்பட்டது. ஒவ்வொரு வேதங்களையும் விளக்குவதற்கு தோன்றிய இலக்கிய வடிவம் பிராமணங்கள். இந்த பிராமணங்களின் இறுதி பாகம் ஆரணியகம் என்று கொண்டு காட்டில் ஓதி வந்தனர். இதன் முடிவில் தான் பரம்பொருள் விளக்கும் உபநிடதம் காணப்படுகின்றது. இது தான் வேதாந்தம் அல்லது மறைமுடி என்று சொல்லப்படுகின்றது.
வடமொழி நூல் வரலாறு இருபகுதி உடையது வைதிகப் பகுதி ஒன்று, பிற்பகுதி மற்றொன்று. வேதப்பகுதியில் வேதங்கள் சூத்திரங்கள் இவற்றைப் பற்றிய வருலாறு குறப்படும் எஞ்சியைப் பிற்பகுதியில் கூறப்படும்.(1946,பக்.1) அதாவது பாணினிக்கு முன் உள்ள வேத இலக்கியங்கள் வைதிக இலக்கியம் என்றும் பாணினிக்குப் பின் தோன்றிய நூல்கள் சமஸ்கிருத இலக்கியம் என்றும் கொள்ளப்படுகின்றது.
ருக் வேதம்
வேதங்களுள் முதன்மையும், பழமையும் வாய்ந்தது ரிக் வேதம். இதில் 1028 செய்யுள்கள் காணப்படுகின்றன. இவை பத்து மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளன. இப்பாடல்கள் அனைத்தும் வெவ்வேறு காலக்கட்டங்களில் பல்வேறு புலவர்களால் பாடப்பட்ட தொகுப்பாகும். ரிக் வேதப் பாடல்கள் பெரும் பகுதி தோத்திரப்பாடல்களாக அமைந்துள்ளன.
ஞாயிறு போற்றுதும் ஞாயிறு போற்றுதும்
தேயா மதிநலம் சிறந்திட நாமே
ஒளியினைப் போற்றுதும் ஒளியினைப் போற்றுதும்
உண்மை உள்ளொளி உண்டிட நாமே.
என இயற்கையைக் கண்டு வியந்து வழி படும் போக்கும், கடவுளரைக் கற்பனை உருவமாய் காணும் நிலையும் காணப்படுகின்றது. மும்பத்து மூன்று தேவர்களைக் கொண்டாடுதல் காணப்படுகின்றது. இத்தெய்வங்களுள் இந்திரன் முதன்மை பெறுகின்றான். வருணன், அக்கினி, சோமக்கடவுள், மழைக்கடவுள், யமன், போன்ற கடவுகளைப் பற்றியும் வசுக்கள், ரிபுக்கள், அப்பசரசுகள், கந்தருவர்கள், புராணத் தெய்வங்கள் பற்றிய செய்திகளும் இடம் பெற்றுள்ளன. உயிர்ப்புக் கொடுக்க கூடிய தெய்வமாக சவிதிரு என்னும் தெய்வமும், உழவர் தெய்வமாக பூஷன் என்னும் தெய்வமும் கொண்டாடப்படுகின்றனர்.
வலனேர்பு திரிதரும் ஞாயிற்றின் விடியலைப் பாடாத கவிஞர்களே இல்லை. ருக் வேதத்திலும் உஷையைப் பற்றிய பாடல்கள் வருகின்றன. கவிதைகளில் மிக உயர்ததாகவும், கருத்தாழம் நிரம்பியதாகவும் இப்பாடல்கள் போற்றப்படுகின்றன.
காலையில் உதயம் களித்து வருவதை
ஏலவே யுகந்தொறும் கண்டவர் இறந்தார்
இன்று வாழும்நாம் எழில் நலம் கண்டோம்
நன்று நாளையும் காண்பவர் வருவார்
அண்டத்தின் தோற்றம் பற்றிய தத்துவம் சார்ந்த சில பாடல்களும் ரிக்வேதத்தில் உண்டு. உலகம் தோன்றிய தன்மை பற்றிக் கூறும் இந்தப் பாடல்களிலே புராணக் கதைகளும், பிரம வித்தை சார்பான கருத்துக்களும் கலந்து வருகின்றன. இவை பிற்கால தத்துவ வளர்ச்சிக்கு வித்தாகவுள்ளன.
ருக்வேதத்தில் உலகைப் படைத்த கடவுள் பிரஜாபதி என்று போற்றப்படுகின்றான். உலகம் சடப்பொருளில் இருந்து உருவானது என்னும் கருத்தும் காணப்படுகின்றது. இந்திய தத்துவங்களுக்கெல்லாம் ஊற்றாக காணப்படுகின்ற சிருஷ்டி கீதம் என்னும் பத்தாவது மண்டலம் எல்லா ஆராய்சியாளர்களுக்கும் பயனுடையது. நீருண்டாகி வெப்பத்தினால் அறிவு முளைத்து பிரபஞ்சம் உண்டாகியது என்னும் கருத்தை ரிக் வேதம் முன்வைக்கின்றது.
யசூர் வேதம்
யசூர் வேதம் சுக்கிய யசூர், கிருஷ்ண யசூர் என்னும் இரு பிரிவுகளை உடையது. சுக்கில யசூர் வேதத்தில் பாசுரங்களுக்கு விளக்கம் இல்லை. கிருஷ்ண யசூர் வேத்தில் பாசுரங்களுக்கு அதற்குரிய குறிப்புகளும் கலந்து காணப்படுகின்றன. இப்பாசுரங்கள் ரிக் வேத காலத்து நிலப்பரப்லி இருந்து வேறுபட்ட நில அமைப்பையும், சமூக, சமய வாழ்க்கையையும் குறிப்பிடுகின்றது. ரிக் வேதக் கோட்பாடுகளைக் கொண்டிருந்தாலும், பிரஜாபதி என்னும் தெய்வமும் மந்திர வாய்பாடுகளும் இங்கே முக்கியத்துவம் பெறுகின்றது. வேள்வி முதன்மை பெறுகின்றது.
சாம வேதம்
சாமவேதமும் யசூர் வேதமும் யாகக் கிரிகைகளுக்கான தொகுக்கப்பட்டவை. இங்கு சோமவேள்வி முக்கயத்துவம் பெறுகின்றது. சாமவேதத்தில் உள்ள 1549 பாடல்கள் ருக் வேதத்தில் இருந்து எடுக்கப்பட்டவை. இவை அக்கினி, சோமன், இந்திரன் என்னும் தெய்வங்களை ஆராதிக்கும் போது பாடப்பட்டவை.
அதர்வ வேதம்
அதர்வ வேதத்திற்கு மற்றொரு பெயர் அதர்வாங்கிரஸ் எனப்படும். இது அதர்வன ஆங்கிரஸ் என இரு புராதன புரோகிதர் வம்சத்தைக் குறிக்கும். அதர்வ வேதத்தில் பிறப்பு, திருமணம், மரணம் பற்ய செய்திகளும், அரசியல் தொடர்பான பட்டாபிஷேகம் பற்றிய செய்திகளும் விவரிக்கப்படுகின்றன. இவ்வேதத்தில் வசிய மந்திரங்கள் அதிகம் காணப்படுவதால் இது வசிய மந்திரங்களின் கதம்பம் என்று கூறப்படுகின்றது. நன்மைக்கும் தீமைக்கும் ஏதுவான மந்திரங்கள் அதர்வத்தில் அடங்கியுள்ளன.
பிராமணங்கள்
வேத காலத்தை அடுத்து எழுந்தவை பிராமணங்கள் எனப்பட்டும். பிரம்ம என்னும் சொல்லில் இருந்தே பிராம்மண என்னும் சொல் வந்திருக்கலாம் என்பர். பிரமம் என்னும் சொல்லிற்கு மந்திரம் என்ற பொருளுண்டு. மந்திரத்தைப்பற்றிப் கூறுவதினால், பிரமத்தோடு இயைபுபட்டது பிராமணம் எனக் கூறப்பட்டது. அல்லது யாகத்திலுள்ள ருத்விக்குக்குளுள் பிரம்மா என்பவர் ஒருவராகலானும்,அவர் யாகத்தைப் பற்றி எல்லாவற்றையும்அறிந்தவராய் இருக்கவேண்டும் ஆதலானும், அவருக்கு வேண்டியவற்றைக் கூறும் நூல் பிராமணம் எனக் கூறப்பட்டது எனலாம்.அல்லது பிராமணர்கள் தான் யாகத்தில் ருத்விக்குகளாக இருக்க வேண்டும் என்ற நீயதி இருத்தலின் அவர்களுக்கு வேண்டிய நூல் பிராம்மணம் எனப்பட்டது என்றும் கூறலாம் என்பர் பி.சா. சுப்பிரமணிய சாஸ்திரியார்.
பிராம்மணங்கள் உரைநடை வடிவில் காணப்படுகின்றன. இவை வேதங்களில் கூறப்பட்ட மந்திர வேள்விகளை விளக்கி அவற்றின் பொருளையும், தத்துவத்தையும் குறிப்பிடுவன. ஒவ்வொரு வேதத்துக்கும் பல சாகைகளும் பிராம்மணபாகமும் இருந்தனவாக அறியப்படினும்,தற்போது வழக்கிலுள்ளன மிகச் சிறியனவே ஆகும். அவற்றுள் பஞ்சவிம்சமும் தைத்தீரியமும் மிகப் பழமையானவை என்றும் அதன் பின்னர் ஜைமினீயமும்,கௌஷீதகீதமும், ஐதரேயமும் காணப்பட்டவை என்றும் நான்கு ஸாமவிதானப் பிராம்மணங்களும் கோபதம் என்ற அதர்வேதப் பிராம்மணமும் கடையிற் காணப்பட்டன என்றும் ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.(1946,ப.141)
இவற்றுள் ருக் வேதத்தைச் சார்ந்த பிராமணங்கள் இரண்டு ஐதரேயப் பிராமணம், கௌசீதகி பிராமணம். இவற்றுள் சிறப்பானது ஐதரேயப் பிராமணம் என்று கூறப்படுகின்றது.
சாமவேதத்தில் எட்டு பிராமணங்கள் காணப்படுகின்றன. அவை தலவகாரம் தாண்ட்யம் என்ற பஞ்சவிம்சம், ஷட்விம்சம், ஸாமவிதானம், ஆர்ஷேயப்பிராம்மணம், தேவாதப்பிராம்மணம், வம்சப் பிராம்மணம், ஸம்ஹிதோபநிஷத், சாந்தோக்யம் என்பன ஆகும்.
கிருஷ்ணயசூர் வேதத்தில் கடசாகையிலும் மைத்ராயணீகாகையிலும், ஸம்ஹிதையிற் காணப்படும் பிராம்மணங்கைத் தவிர்த்து பிராமணங்கள் என்று தனிப்புதி இல்லை. சுக்கில யசூர் வேதப்பிராம்மணங்களுள் தற்போது காணப்படும் பிராமணங்கள் இரண்டே அவை கண்வசாகீயப் பிராம்மணம், மாத்தியந்தினசாகீயப் பிராம்மணம்.
அதர்வேதியப் பிராம்மணத்திற்குக் கோபதப்பிராம்மணம் என்று பெயர்.
உபநிடதங்கள்
உபநிஷத்துக்கள் என்று கூறப்படுகின்றது. உபனிஷத் என்ற சொல் அழித்தல் என்ற பொருள் கொண்ட ஸத் என்ற தாது உப, நி என்ற இரண்டு இபஸர்க்கங்களுடன் சேர, அதனின்று உண்டானது. ஆகலின் அச்சொற்கு நன்கு அழித்தற்கு ஸாதனம் எனப் பொருள் ஆகும். (1947,பக்.145) வேதங்களின் அந்தமாக இருப்பதால் உபநிடதங்களை வேதாந்தம் எனவும் கூறுவர்.
ஜீவான்மாவும், பரமான்வாவும் ஒன்று என்பதே உபநிடதங்களின் மூலாதாரமான கோட்பாடாகும். ‘த்த த்வம் அசி ’ அகம் ப்ரம்மாஸ்மி நானே பிரம்ம்ம் உணர்ந்தவன் எல்லாமாகின்றான். அவ்வாறு பிரம்மாவதைக் கடவுளர் கூடத் தடுக்க முடியாது. ஏனெனில் அவனே அவர்களின் ஆன்மாவாகின்றான் எனப் பிருகதாரண்ய உபநிடதம் கூறுகின்றது.
மிகப் பழமையான உபநிடதங்கள் பிருகதாரண்யகம், சாந்தோக்யம், ஐதரேயம், கௌஷீதகம் ஆகும். இவை வசன நடையில் உள்ளன.
கேநோபநிஷத் செய்யுள், வசன நடை இரண்டையும் கொண்டுள்ளது. செய்யுள் நடைக்கொண்ட காடகம், ஈசாவாஸ்யம், ச்வேதாச்வரதம், முண்டகம், மஹாநாராயணம், இவை பிற்காலத்தைச் சார்ந்தன.
இவற்றின் பின்னர் வசனநடையைக் கொண்ட ப்ரச்சன, மைத்ராயணீயம்,மாண்டூக்யம் இவை வந்தன. இவற்றைத் தவிர்த்த அதர்வோபநிஷத்துக்களெல்லாம் மிகப் பிற்காலத்தன.
சூத்திரங்கள்
சூத்திரம் எனினும் நூலெனினும் ஒக்கும் எனபர். சில சொற்களைக் மட்டுமே கொண்டு சுருங்கிய நடையில் அமையும் சிறு சிறு வாக்கியமே சூத்திரம் எனப்படும். சூத்திரங்களால் அமைந்த நூல்களுள் மிகப் பழமையானவை பிராம்மணங்களுடனும் ஆரணியங்களுடனும் தொடர்பு உள்ளவை. ஐதரேய ஆரணியகத்தின் சில பகுதிகளே சூத்திரங்களாக் காணப்படுகின்றன. இவை ஏனைய சூத்திரங்கள் இயற்றியவர்களான ஆஸ்வலாயனர், சௌநகர் முதலியவர்களால் இயற்றப்பட்டது என்பர். சாம வேதத்தின் சில உறுப்புகளான சில பிராம்மணங்கள் கூட அமைப்பில் சூத்திரங்களை ஒத்து காணப்படுகின்றன. இவற்றை வேதாங்கம் எனக் கூறுதல் பொருந்தும் என்பர்(1981,பக்.180) சுரௌத யாகங்களை எடுத்துரைக்கும் சூத்திரங்கள் சிரௌத சூத்திரங்கள் எனப்படும். தினந்தோறும் வீட்டு நிகழ்ச்சிகளைக் கூறும் நூல்களை கிருஹ்ய சூத்திரங்கள் எனப்படும். இவைத்தவிர தர்ம சூத்திரங்களும் உள்ளன. இவை அறநெறி கூறுவன. இது போன்று பல சூத்திர நூல்கள தோன்றியுள்ளன.
புராணங்கள்
வேதங்களில் கூறப்பட்ட பொருளை எளிமையாகப் புரிந்து கொள்ளுவதற்குப் புராணங்கள் துணைப்புரிகின்றன. புராணங்களின் காலம் வாயுபுராணம் ப்ரவசனம் செய்யப்பட்டது எனப் பாணன் ஹர்ஷசரித்திரத்தில் கூறுவதாலும், புராணம் தர்மத்திற்கு மூலம் என குமாரில பட்டரும், சங்கராச்சார்யரும், இராமானூஜரும் கொண்டமையால் கி.பி.11 ஆம் நூற்றாண்டில் ஆல்பெருனி 18 புராணங்களைப் பற்றி கூறுவதாலும்,தற்போதுள்ள புராணங்கள் பாணரின் காலத்திற்கு முற்பட்டது என்பது திண்ணம்.(1946,பக். 308)
புரணம் பற்றிய செய்தி அதர்வ்வேதாம்ஹிதையிலும்,கௌதமதர்மசூத்திரத்திலும் உள்ளது. பவிஷ்யத்போராணம் என ஒரு புராணம் ஆபஸ்தர்மசூத்திரத்தில் குறிக்கப்பட்டுள்ளது. மகாபாரதத்துள் 18 புராணங்கள் இருந்தன என்று கூறப்படுகின்றது. அவை பிரம்மம், பாத்மம், வைஷ்ணவம், சைவம், பாகவதம், நாரதீயம், மார்கண்டேயம், ஆக்னேயம், பவிஷ்யம், பிரம்மவைவர்த்தம், லைங்கம், வாரஹம், ஸ்காந்தம், வாமநம், கௌர்மம், மாத்ஸ்யம், காருடம், பிரம்மாண்டம் என்பன. இவற்றுள் பத்து மகேச்சுவரனைப் பற்றியும்,நான்கு விஷ்ணுவைப்பற்றியும், இரண்டு பிரம்மாவைப் பற்றியும் ஒன்று அக்கினியைப் பற்றியும், ஒன்று பாஸ்கரனைப் பற்றியும் கூறப்பட்டுள்ளதென சூதாம்ஹிதையிற் கூறப்பட்டுள்ளது(1946, பக்.298)
இதிகாசங்கள்
வேதங்களின் முடிவாகவும், சாரமாகவும் அமைந்த உபநிடதங்களின் காலத்துக்கும், சமயச் சார்புடன் உலகியலையும் கூறும் காவியங்கள் நாடகங்கள் உரை நூல்கள் என்பன எழுந்த காலத்துக்குமிடையே தோன்றிய இலக்கிய ஆக்கங்கள் இதிகாசம் என வழங்கலாயின. இதிகாசம் என்னும் இலக்கிய ஆக்கத்தில் இராமாயணமும், மகாபாரதமும் அடங்கும்.இவை அரச சபையில் பாடப்பட்டது. இதனைப் பாடியவர்கள் சூதர் என அழைக்கப்பட்டனர். இவர்கள் அனைத்து நிகழ்வுகளையும் நேரில் கண்டு பாடினர்.
இவர்களுக்கு அடுத்து புலவர் மரபினர் தொடக்கம்.சூதர்களால் நேரில் கண்டு பாடப்பட்ட மரபு புலவர்காலத்தில் கேள்வியால் பாடும் மரபாக மாறுகின்றது. புலவர்கள் அலங்காரமாகப் பாடலைப்பாடினர். சூதர்கள் பாடிய இதிகாசங்கள் பின்னால் புலவர்களால் காப்பியங்களாகப் பாடப்படுகின்றன.
இராமாயணம்
இராமாயணத்தின் காலத்தை கி.மு.380 என்றும்,கி.மு.500 என்றும், கி.மு.300 என்றும் கணக்கிட்டுள்ளனர்.(1946,பக்.321) வால்மீகியால் இயற்றப்பட்ட இராமாயணம் ஏழுகாண்டங்களும்,500 சர்க்கங்களும் 24000 சுலோகங்களும் உள்ளன என்றும், 661 சர்க்கங்கள் 24133 சுலோகங்கள் என்றும் பாடவேறுபாடு உள்ளன.(1946,பக்.313)வால்மீகி எழுதிய இராமாயணத்தில் பல இடைச் செருகல் உள்ளன என்றும் கூறப்படுகின்றன. இந்நூலை ராமாயணம் என்றும், ராமசரிதம் என்றும் சீதையின் சரிதம் என்றும் பொலஸ்த்யவதம் என்றும் கூறப்படுகின்றது.
இராமாயணத்தைப் படிக்கப் படிக் ருசி உண்டாகவாலும், அதனை ஒட்டிப் பின்னர் பல நூல்கள இயற்றப்பட்டமையாலும், அதைப் படித்த பின்னரே காளிதாசரின் நூல்களின் கருத்து பல இடங்களில் நன்கு விளங்குகின்றமையாலும், இராமாயணத்தைப் படித்தால் இஹத்திற்கும், பரத்திற்கும் நன்மை பயக்கும் என ஆஸ்திகர்களால் கருதப்படுகின்றமையாலும், இராமாயணத்தை எல்லோரும் அடிக்கடிப் படித்தால் நன்மை பயக்கும் என்பர் பி.சா.சுப்பிரமணிய சாஸ்திரியார்.
மகாபாரதம்
மகாபாரதத்தில்18 பர்வாக்களில் 1923 அத்தியாயங்களும் 24000 சுலோகங்களும் உள்ளதாக் கூறப்படுகின்றன.பாரதம் என்ற சொற்குப் பாரதயுத்தத்தைப் பற்றிய காவ்யம் எனப் பொருளாகும் என்பது பாணினி சூத்திரத்தாலும் அதன் விருத்தியாலும் அறியப்படம். இப்பொருளை மகாபாரத்ததிலுள்ள சில சுலோகங்கள் வலியுத்தும். பரதர்களின் பெரிய பிறப்பைக் கூறுதலின் மகாபாரதம் என்றும், கேட்போருக்கு நீண்ட ஆயுள் முதலியவற்றைத் தருதலின் சிறந்தும் நான்கு வேதங்களுக்கு மேல் கனமாயிருந்தமையின் பெரிதாயும் இருத்தலின் மகாபாரதம் எனக் கொள்ளப்பட்டது எனக் கூறும் சில சுலோகங்கள். பெரிதும் பாரதப் போரைப் பற்றியதும் ஆகிய நூல் என்றே பொருள் கொள்ளல் தகும்.(1946, பக்.331)
காவியம்
படிப்போருக்கும் நடித்தலைப் பார்ப்போருக்கும் பெரும் மகிழ்ச்சியைக் கொடுப்பதே காப்பியம் எனப்படும். காவியத்தை தொனி என்றும் கூறுவர் ஆநந்தவர்த்தனாசார்யர். அத்தொனி வஸ்துத்தொனி அணித்தொனி, ரஸத்தொனி என மூவகைப்படும். இவற்றுள் ரஸத்தொனியே மிகவும் சிறந்தது என்பர்.
காவியத்தை ச்ரவ்ய காவ்யம், த்ருச்யகாவ்யம் என இரண்டாகக் கூறுவர். த்ருச்யகாவ்யத்தை பொதுவாக நாடகம் என்று கூறுவர். அதனால் காப்பியம் என்றால் ச்ரவ்யத்தையே குறித்தது.
குப்தர் காலத்தில் பல்வேறு காவியங்கள் தோன்றியதால் அவர் காலத்தை காவியக்காலம் என்று கூறுகின்றனர். பாரவி கிரதார்ஜீனீயம், மகா கவி சிசுபாலவதம், பட்டிகாவியம், ஸ்ரீ ஹர்ஷர் நைஷத சரிதம் காளிதாசரின் இரகுவம்சம், குமாரசம்பவம் ஆகியன பஞ்ச காவயங்கள் என்று அழைக்கப்படுகின்றன.
இதன் தொடர்ச்சியாக கவி ரகஸ்யம், ராமசரிதம், காதம்பரி சாரம், ஹரிவிலாசம், பாரதமஞ்சரி, ராமாயண மஞ்சரி, கங்காவதாரணம், சிவலீலார்வணம் , இராமாயண சாரம், ஹர்ஷ சரிதம், கௌடவறம், நவசாக சாங்கசரிதம், விக்கிரமாங்கதேவசரிதம், ராஜரதங்கிணி போன்ற பட காவியங்கள் எழுந்தன.
சதகம்
சமஸ்கிருத்தில் நூறு சுலோகங்களைக் கொண்ட பல சதகங்கள் காணப்படுகின்றன. அவற்றில் தர்மத்தை கூறும் சதகத்திற்கு நீதி சதகம் என்றும், காமத்தைக் கூறும் சதகத்திற்கு சிருங்கார சதகம் என்றும் மோஷத்தைக் கூறும் சதகத்திற்கு வைராக்கியசதகம் என்றும் வழங்கப்பட்டன.
கி.பி. 6 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த பர்த்ருஹரி நீதிசதகம், சிருங்காரசதகம், வைராக்கியசதகம் மூன்றினையும் எழுதியுள்ளார். 9- ஆம் நூற்றாண்டில் பல்லடர் பல்லடச் சதகமும், 11- ஆம் நூறாறண்டில் க்ஷேமந்தர், 15 –ஆம் நூற்றாண்டில் தனதராஜகவி, 17 –ஆம் நூற்றாண்டில் ஜகந்நாதபண்டிதர் போன்றோரால் பல சதகங்கள் இயற்றப்பட்டன.
கதை
இராமயணம் மாகபாரத்தை நிகர்த்த கதைகள் பின்னல் பல தோன்றின. அவற்றுள் குணாட்டியர் எழுதிய பிருகத் கதை என்று கூறப்படுகின்றது. இக்கதை இப்பொழுது கிடைக்கவில்லை. இக்கதையைப் பற்றிய செய்தி சுபந்து பாணர், தண்டியாசிரயர் மூலம் அறியப்படுகின்றது. வேதகாலம் தொட்டு வழங்கி வரக்கூடிய கதைகள் பஞ்சத்தந்திரக் கதைக்ள இவை எப்பொழுது தோன்றின என அறுதியிட்டுக் கூறமுடியாது. இந்நூல் தந்திராக்கியாயம் என்று வழங்கப்பட்டுள்ளது. இதில் கட்டுக்கதைகளும்,நீதிக்கதைகளும், மனித வாழ்க்கைக்குத் தொடர்பான கதைகளும் குழைந்து கிடக்கின்றன. தசகுமாரசரிதம், வாசவத்தை, ஹர்ஷ சரிதம், கதம்பரி போன்ற இன்ப கதைகளும் கதைகளும் தோன்றின.
நாடகம்
கி.மு. இரண்டாம் நூற்றாண்டளவில் வடமொழியில் நாடகம் பூரண உருபெற்றிருக்கவேண்டும் என்பர். பிச்செல் பொம்மலாட்டம் தான் வடமொழி நாடகத்தின் உற்பத்திக்கு மூல ஊற்று பாவைக் கூத்து இந்தியாவில் உருவாகி பின் உலகெங்கும் பரவியது என்பர். நாடகம் என்னும் சொல் நிருத் என்னும் வினையடியாக பிறந்தது. இச்சொல் நிருது என உஷஸ் என்னும் உதய கன்னியைக் குறிக்க வேத்தில் பயன்படுத்தப்பட்டுள்ளது.
மகாகவி காளிதாசருக்கு முன் பாச மகாகவி சிறந்து விளங்கினார் என்று கூறப்படுகின்றது. இவர் சொப்பனவாசவத்தை, பிரதிக்ஞாயௌ கந்தராயணம், சாருதத்தம், அவிமாரகம், பஞ்சராத்திரம், பாலசரிதம் போன்ற நாடகங்களை இயற்றியுள்ளார். வரருசி என்பவர் உபயாபிரிசாரிகை என்னும் பாண வகை நாடகத்தை எழுதியுள்ளார். சூத்திரிகர் என்பவரை மிருச்சக்கடிகம் ஆசிரியர் என்று கூறப்படுகின்றது. இவர்களுக்கு அடுத்துத் தோன்றிய காளிதாசரின் மாளவிகாக்கிமித்திரம், வக்கிரமோர்வசீயம், சாகுந்தலம் போன்றவை மிகச் சிறப்புற்று விளங்கின. ஹர்ஷர், பவபூபதி, வியாசகதத்தர், பட்டநாயணார், சக்கிதரர், முராரி, அனங்க ஹர்ஷர், ராஜசேகரர், க்ஷேமீஸ்வரர் பில்ஹணர், ராமச்சந்திரசூரி, ஜயதேவர் போன்றோர் சமஸ்கிருத நாடகங்கள் இயற்றியுற்றனர்.
சஸ்கிரத நாடக வளர்ச்சியை பாசவர், காளிதாசர், சூத்திரகர், ஹர்ஷர் இவர்களை ஒரு கட்டமாகவும், பவபூதி, விசாகதத்தர், பட்ட நாராயணர் என்போரை இரண்டாம் கட்டமாகவும், முராரி, ராஜசேகர், கிருஷ்ண மிஸ்ரர் ஆகியோரை மூன்றாம் கட்டமாகவும் கூறலாம். கி.பி 10 ஆம் நூற்றாண்டுக்குப் பிறகு சமஸ்கிருத நாடகங்களின் வளர்ச்சிக் குன்றியது.
அலங்கார சாஸ்திரம்
பரதமுனிவர் மிகப்பழமையான நாட்டிய சாஸ்திர நூலை எழுதினார் எனக் கூறப்படுகின்றது. இவரைத் தொடர்ந்து பாமகர் என்பவர் காவியாலங்காரம் என்னும் நூலைச் செய்தார். இது பாமகாலங்காரம் எனவும் வழங்கப்படுகின்றது. 6- ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த தண்டியாசிரியர் காவ்யதர்சம் என்னும் நூலை இயற்றினார். இவர் பாமகர் வழியைப் பின்பற்றினாலும் சில இடங்களில் அவரை மறுக்கின்றார். வாமனர், ருத்திரடர், ராஜசேரர் போன்றோரும் அணியிலக்கண சாத்திர நூல்களை இயற்றியுள்ளனர்
.
15 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த அப்பைய தீட்சிதர் குவல யானந்தம் என்னும் அலங்கார நூலையும், ராஜசூடாமணி தீட்சிதர் காவிய தர்ப்பணமென்ற நூலையும் இயற்றியுள்ளனர்.
மனு எழுதிய மனுஸ்மிருதியும் கௌடிலியரின் அர்த்த சாஸ்திரமும், வாத்ஸ்யாயனார் எழுதிய காமசாஸ்திரமும் சமஸ்கிருதத்தில் தர்ம,அர்த்த ,காம சாத்திரங்களாகப் போற்றப்பட்டன.
சமஸக்கிரத்தின் மூல இலக்கியம் வேதங்களாகும். இதன் பிறகு தோன்றி பிரமாணங்கள், உபநிடதங்கள் , சூத்திரங்கள், புராணங்கள் , இதிகாசங்கள், காவியங்கள், கதைகள் நாடகங்கள் அனைத்தும் வேத்தின் விளக்கங்களாகத் தோன்றிய இலக்கியங்கள் எனலாம். 10 ஆம் நூற்றாண்டுக்குப் பிறகு சமாகிருத இல்க்கியங்களின் செல்வாக்கு குறையத் தொடங்கியது. காரணம் பேச்சுமொழியாக இருந்த சமஸ்கிருதம் பண்டித மொழியாக மட்டும் மாறியதோடு, இறைமொழியாகவும் போற்றப்பட்டதேயாகும்.

கருத்துகள்
பலருக்கும் பயன்படும் விதத்தில் இதை, மின் தமிழ் குழுமத்திலும், பகிர்ந்து கொள்ளங்களேன்.
http://www.tamilheritage.org/
http://groups.google.com/group/minTamil
அன்புடன்
ஆரூரன்
பகிர்ந்தமைக்கு நன்றிகள் பல மேடம்