தமிழர் திருமணமுறை -2
வாழ்வியல் வழிகாட்டி (அ) திருவள்ளுவர் வழிபாடு
மக்கள் அனைவரும் உலகில் தக்க வகையில் எவ்வாறு வாழவேண்டும் என்று வழிகாட்டியவர் திருவள்ளுவர்.
அறத்தால் பொறுள் தேடி, அப்பொருளால் இன்புற வேண்டும் என்பதற்காக முப்பால் அருளியவர் அப்பெருமகனார்.
அறன் எனப்பட்டதே இல்வாழ்க்கை என்றும்
அறத்தால் வருவதே இன்னபம் என்றும் தெளிவு படுத்தியவர் அவர்.
இரு சிறகு வீசுப் பறக்கும் ஒரு பறவையைப் போல், மணமக்கள் இருவரும் ஒருமைத் தன்மையராய் இல்வாழ்க்கை நடத்தினால் அவர்கள் வாழ்வே வீடுபேறு இன்பம் என்றும், அமிழ்தம் அருந்தும் அமர வாழ்வு என்றும் கூறியவர் அவர்.
கணவனுக்கு மனைவியும்,மனைவிக்கு கணவனும் துணையாக அமைந்து குடும்பக் கதமையை இருவரும் ஒப்பாகத் தாங்கி, வாழவேண்டிய முறைப்படி வாழ்ந்தால் அவர்கள் வாழ்வு தெய்வ வாழ்வு என்று உறுதி மொழி தந்தவர் அவர். ஆதலால், நலவாழ்வு வேண்டு அவரைப் போற்றுவோம், எனக் கூறி, வள்ளுவர் சிலைக்கோ, படத்திற்கோ திருக்குறள் நூலுக்கோ மலர் தூவி மணமக்கள் வழிப்படச் செய்தல்.
வள்ளுவம் வாழ்க ! வாழ்வியல் வாழ்க !
என மும்முறை அவர்களைக் கூறச் செய்தல்.
சான்றோர் வழிபாடு
மணவிழாவுக்கு வந்துள்ள பெருமக்கள்,தாய்மார்கள், செல்வர்கள் அனைவரையும் போற்றும் வகையில மணமக்கள் எழுந்து நின்று, அவையோரை வணங்குமாறு செய்தல். சானாறக பெருமக்களே, நீங்கள் தனச்சான்றுடன் பேசி, அதன் படி செயலாற்றும் பெருமக்கள். நீங்கள் திருமணத்திற்கும் சான்றாக விளங்குகின்றீர்கள்.இம்மணமக்கள் இந்த நல்ல பொழுதில் , அவையோராகிய உங்கள் அனைவரின் வாழ்த்தையும் வேண்டு, வணங்குகின்றார்கள.தனித்தனியே வந்து வணங்குதல் போலாகா நேரங்கருதி உங்கள் அனைவர் முன்னும் நின்று வணங்குகின்றார்கள். நாங்கள் அறிந்தோ அறியாமலோ, தெரிந்தோ, தெரியாமலோ, புரிந்தஃதோ, புரியாமலோ ஏதாவது சொல்லியிருந்தாலும், செய்திருந்தாலும் அவற்றைப் பொறுத்துக் கொண்டு எங்களை வாழ்த்தியருளவேண்டுகின்றோம்.ஆயிரம் வாழ்த்துதல் ஒரு பூனையையும் யானையாக்கும்.உங்கள் வாழ்த்துதல் எங்களை என்றென்றும் ஓங்கி உயர்ந்து வாழச் செய்யும் என உங்களை வேண்டுகின்றார்கள் எனக் கூறி அவையினரை வணங்கச் செய்தல்.
சான்றோர் வாழ்க ! சால்புகள் வாழ்க !
என மணமக்களை மும்முறை கூறச்செய்தல்,சான்றோர் அனைவரையும்
மணமக்கள் வாழ்க ! வாழக!
என மும்முறை வாழ்த்தச் செய்வித்தல்.
பெற்றோர் வழிபாடு
மணமக்களைப் பெற்ற பெருமைக்குரியவர்களை மணமேடைக்கு அழைத்து, மணமக்களை அவர்கள் பெற்றோருக்கு மாலை அணிவிக்கச் செய்தல்.
மகவைத் தந்தவர் தந்தை ,ஆகி இருந்தவர் ஆய் ஆகிய தாய். அவர்கள் இருவரும் எத்தனை எத்தனை பேறுகளைப் பெற்றிருந்தாலும் பெற்றோர் ஆவதில்லை.மக்களைப் பெற்றதாலேயே பெற்றோர் எனப்பட்டனர்.
பெறுமவற்றுள் யாமறி வதில்லை அறிவறிந்த
மக்கட்பே றல்ல பிற
தம் பொருள் என்ப தம் மக்கள் என்றார். பெற்றோர்கள் கொடையே உயிர்க்கொடை, உடற்கொடை, உணர்வுக் கொடை,உயர்வுக்கொடை எல்லாமும் ஆதலால், கண்கண்ட தெய்வமாகிய பெற்றோர்களை மணமக்கள், வணங்குகின்றார்கள் என்று கூறி மணமக்களை
பெற்றவர் வாழ்க ! பெருந்தகை வாழ்க !
என மும்முறை வாழ்த்தச் செய்து வணங்க வைத்தல், பெற்றோர் தம் மக்களுக்கு மலர் தூவி
உயிரே வாழ்க ! உயர்வே வாழ்க !
என மும்ம்முறை வாழ்த்தச் செய்தல்.
திருமண மங்கலநாண் (அ) விரலாழி பூட்டல்
பழைய சாளில் நம் முன்னோர் முழுமதி பார்த்து இரவுப்பொழுதில் மங்கல விழா நிகழ்த்தினர்.முழுமதிப்பொழுதே முழுத்தம் எனப்பட்டது.முழுத்தம் பார்த்தல், முழுத்தப்புடவை, முழுத்தக்கால் நடல் என்பவை பழைய வழக்கம்.
முழுத்தம் என்பது முகூர்த்தம் என ஆக்கப்பட்டது. பகல் மணமாகவும் மாறியது.
ஆயினும் வளர்பிறையில் திருமணம் செய்தல் அதன் அடையாளமாம்.முன்னாளில் மங்கல விழாவைத் தாய்மார்கள் முன்னின்று நடத்தினர். பொதுவிழாக்களும், சடங்குகளும் நடத்துவதில் தேர்ச்சியும் செய்நேர்த்தியும் உடைய முதுசெம்பெண்டிர் நால்வர் கூடி நடத்தியதையும், கற்பினில் வழுவாமல், நல்ல பல உதவிகளும் புரிந்து, கணவன் பாராட்டும் வகையில் வாழ்க என அவர்கள் வாழ்த்தியதையும் அகநானுறூ கூறுகின்றது.
அந்நிலை ,குலப்பெரியவர், ஊராளியர் தலைவர், நாட்டாண்மை, மூப்பர் என்பவர் முன்னிலையில் மணங்கள் நிகழ்ந்தன.
பின்னே சடங்குகளும் மாறி, மொழியும் மாறி ஆடவர் நடத்துவதாகவும் அமைந்துவிட்டது. பகுத்தறிவு , சீர்திருத்தம் எனப்படும் மணங்களும் ஆடவர் நடத்துவனவாகவே ஆகிவிட்டன. மணம் முதலிய, சடங்குகளை மகளிர் நடத்துகின்ற மரபை மீட்டெடுப்பின் நன்மையாம் எனக்கூறி, முதிய தாய்மார் நால்வரையோ பலரையோ மணமங்கல நாணை வழிபட்டு எடுத்து மணமகன் கையில் வழங்கித்திருப்பூட்டு நடத்துமாறு செய்தல், கெட்டிமேளம் முழங்கச் செய்தல், தாய்மார்களைக் குரவை இடச் செய்தல் பெருநலமாம், திருப்பூட்டு நிகழ்த்தியப் பின்னர்,
மங்கலம் என்ப மனைமாட்சி மற்றதன்
நன்கலம் நன்மக்கட் பேறு
என மும்முறை கூறி, மேடையில் இருப்பவர்களையும் அவையோரையும் கூறச் செய்தல், மேடையில் இருப்போர் மலரும் ,மங்கல அரிசியும் தூவுதல்.
-------------தொடரும்

கருத்துகள்
நான் இணையத்தமிழ்த் தொடர்பாக புதுவைப்பல்கலைக்கழகத்தில் ஆய்வு செய்கிறேன் தங்களுடைய இணையத்தமிழ் தொடர்பான கட்டுரைகளை நான் வாசித்துள்ளேன் மேலும்
தங்களிடம் இணையத்தமிழ் தொடர்பான
தரவுகள் இருந்தால் அளித்துதவும் படி கேட்டுக்கொள்கிறேன்
நன்றி

முருகன் சுப்பராயன்
மும்பை