சீலையா சேலையா ?


இன்று வழக்கில் நாம் கூறகூடிய சேலை என்ற சொல்லட்சி சரியா?(பொதுவாக இப்பொழுது புடவை,அல்லது saree என்பது பெருவழக்காவிட்டது வேறு) எனபதைப் பார்த்தால் அது தவறு என்றே சொல்லத் தோன்றுகிறது.நம் கிராம்புறங்களில் சீலைத்துணி,சீலைக்காரி,சீலையைக் கிழித்துக்கொண்டா திரிந்தேன்,சீலைப்பேன் வழங்கி வருதலைக் காணலாம்(இப்பொழுது இங்கும் படித்தவர்கள் மத்தியில் வழங்கக் கூடிய சேலை என்ற சொல்லதான் சரியெனக் கிராம்புறங்களிலும் இவ்வழக்கு இன்று மாறி வருகின்றது)
சீரை என்பது பழஞ்சொல் 'ஆள்பாதி ஆடை பாதி 'என்னும் தமிழ் சொல்லுக்கு மூலமாவது சீரை என்னும் சொல்.ஒருவனுக்கு சிறப்பாக அமைந்தது சீரை எனப்பட்டது. சீரை சுற்றித் திருமகள் பின் செல்ல எனபது கம்பர் வாக்கு.சீலை என்னும் சொல் திரிந்து சீலையாக நின்றது.
சீர்த்தி மிகு புகழ் என்பது தொல்காப்பிம்.சிர்த்தி என்னும் பெண்பாற் பெயர் பண்டை வழக்கில் இருந்துள்ளது.சீர்த்தி என்ன்ற சொல்தான் பிற்காலத்தில் கீர்த்தி என வழங்கப்பெற்றது.(இது வட சொல் என்றும் மாற்றினர்)
சீரம் என்பது சீரைப் பொருளதே.சீரம் அழகுப் பொருள் தருவது போல் சீலமும் அழிகுப் பொருள் தரும்சிறப்புப் பொருள் தரும்.ஆதலால் சீரை சீலையாக சொல்லவது பிழையற்றயற்றது.சேலை என்பது பிறழ்வுற்ற வடிவமாகும்.

கருத்துகள்

ஆ.ஞானசேகரன் இவ்வாறு கூறியுள்ளார்…
//சீரை சீலையாக சொல்லவது பிழையற்றயற்றது.சேலை என்பது பிறழ்வுற்ற வடிவமாகும்.
//

நன்றி
இளங்குமரன் இவ்வாறு கூறியுள்ளார்…
வணக்கம். நாம் பழமையைவிடுத்துப் புதுமை செய்கின்றோம் என நினைத்து பல தவறுகளைப் புரிந்து வருகின்றோம் என்பதற்கு சீலையும் ஒரு நல்ல எடுத்துக் காட்டு. வாழ்த்துகள்.

தட்டச்சுப் பிழைகள் உள்ளன. post என்பதை அழுத்தும் முன்னர் ஒருமுறை சரிபார்த்தபின் அழுத்தவும்.

உங்களை முன்னரே அறிவேன் என நினைக்கின்றேன்.(ஆர்குட்வழி)

நன்றி.

ஒரு நல்ல தகவல் களஞ்சியத்தை அறிமுகப்படுத்திய நா.கணேசன் ஐயா அவர்களுக்கும் நன்றி.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

புறநானூற்றில் கல்விச்சிந்தனை

சங்க இலக்கியத்தில் விருந்தோம்பல்

இரண்டாம் ஆண்டு - மூன்றாம் பருவம்