மிளகின் கதை


நான் தாங்க மிளகு என்னைப் பற்றி உங்களுக்குக் கொஞ்சம் சொல்லாம் என்று இருக்கிறேன்.நான் எவ்வளவு பழமையாவள் என்பது உங்களுக்குத் தெரியுமா?என்னை யார் யார் எல்லாம் விரும்பி வாங்கினார்கள் தெரியுமா?என்னுடை பிறப்பிடம் என்னுடைய சிறப்பு இதுவாது உங்களுக்குத் தெரியுமா? சொல்கிறேன் கேளுங்கள்.

எதுவுமே ஆதாரத்துடன் சொன்னால் தானே நீங்கள் நம்புவீர்கள்,நான் பழமையானவள் என்பதற்குக் கட்டியம் கூறும் நம்முடைய பழமையான சங்க இலக்கியம்.வாங்க கொஞ்சம் பார்த்துவிட்டு என்னைப் பற்றி சங்க இலக்கியம் என்ன சொல்லுதுனு பார்ப்போம்.

எனக்கு எப்பொழுதுமே உணவில் மிக முக்கிய இடம் உண்டு. உணவில் நஞ்சிருந்தாலும் அதனை முறிக்கும் திறனும் உள்ளது.அதனால் தான் எதிரி வீட்டில் சாப்பிடுவிட்டு வந்து நாலு மிளகைச் சாப்பிட்டால் போதுமென இன்றும் கிராமப் பகுதியில் கூறுவார்கள்.எல்லா இடத்திலையும் நான் விளைந்து விடமாட்டேன்.மலை சாரல் பகுதிதான் மிகவும் பிடித்த பகுதி.

அதனால் தான் முன்பிருந்த சேரநாட்டில் மலைச்சாரல் பகுதியில் வளர்ந்தேன்.அங்கு மட்டும் இல்லாமல் கிழக்கிந்திய தீவுகளாக இருந்த சாவக நாட்டிலும் வளர்ந்தேன்.ஆனாலும் சேர நாட்டில் வளம் மண்ணின் தன்னமையால் நல்ல மணமுள்ள மிளகாக என்னால் இருக்க முடிந்து.அதனால் சாவக நாட்டின் மிளகைவிட சேரநாட்டி மிளகையே அதிகம் வெளிநாட்டவர் வாங்கி சென்றுள்ளனர்.
எனக்கு வேறு பெயரும் இருக்கிறது .என்னை கறி என்றும் மிரியல் என்றும் அழைப்பர்.என்னை ஐரோப்பிய கண்டத்தில் இருந்து வந்த யவனர்கள் அதிமாக விரும்பி வாங்கி சென்றதால் யவனப் பிரியா என்ற பெயரும் உண்டாகிவிட்டது.

நான் கொடியாக பலாமரத்தின் மீதும் ,சந்தனமரங்கிளன் மீதும் மலைகளின் உள்ள சிறு செடிகள் மீதும் ஏறி படர்வேனாம்.

பைங்கறி நிவந்த பலவின் நீழல்(சிறுபாணாற்றுப்படை,43)

கறிவளர் சாந்தம் (அகநானூறு,2)

கறி வளர் அடுக்கம் (குறுந்தொகை,288)
தோட்டங்களாகவும் பயிரிடப் பட்டு இருக்கின்றேன்.

துறுகல் நண்ணிய கறியிவர் படப்பை (அகம்,272)

காய்கறி சமைக்கும் போது என்னையும் கறிவேப்பிலையும் பயன்படுத்தியிள்ளார்கள்.

பசுங்காய்ப் போழொடு கறிகலந்து
கஞ்சக நறுமுறி யளையீ(பெருபாணாற்றுப்படை,(வரி 307,308)


தமிழகத்தின் மேற்கு கரையில் விளைந்த என்னை ,கிழக்குக் கடற்கரையோரமாக சிறந்து விளங்கிய காவிரிப்பூம்பட்டினத்திற்கு வண்டிகளிலும் பொதிமாடுக்ள மேல் ஏற்றியும் கொண்டு வந்துள்ளனர்.அப்படி ஏற்றி வரும் வழியில் சுங்க சாவடியில்,அரசு ஊழியர்கள் வரியும் வாங்கியுள்ளனர்.

காலில் வந்த கருங்கறி மூடை(பட்டினப்பாலை,186)

தடவிநிலைப் பலவின் முழுமுதல் கொண்ட
சிறுசுளைப் பெரும்பழம் கடுப்ப மிரியல்
புணர்ப்பொறை தாங்கிய வடுவாழ் நோன்புறத்து
அணர்ச்செவி கழுதைக் சாத்தோடு வழங்கும்
உல்குடைப் பெருவழி (பெருபாணாற்றுப்படை,77-800



மேலைநாட்டினர் மரக்கலங்களில் வந்து பொற்காசுகளைக் கொடுத்து என்னை வாங்கி சென்றுள்ளனர்.இதனைப் பார்த்த தாயங்கண்ணரும்,பரணரும் தமது பாடல்களில் பதிவு செய்துள்ளனர்.

சேரலர்
கள்ளியம் பேரியாற்று வெண்ணுரை கலங்க
யவனர் தந்த வினைமாண் நன்கலம்
பொன்னொடு வந்து கறியொடு பெயரும்
வளங்கெழு முசிறி ( அகநானூறு,149)


மன்கைகுவைஇய கறிமூடையால்
கலிச்சும்மைய கரைகலக் குறுந்து கலந்தந்த பொற்பரிசம்
கழித்தோணியால் கரைசேர்க்குறுந்து (புறநானூறு,343)


யவனர்கள் பெரும்பாலும் என்னை வாங்குவதற்றகாவே கடல் கடந்து வந்திருக்கின்றனர்.நம்நாட்டில் விளைந்த நல்ல மிளகினை ஏற்றமதி செய்துவிட்டு பற்றாக்குறைக்குச் சாவகத்தில் இருந்தும் இறக்குமதி செய்துள்ளோம்.(நமக்குத் தான் பிறருக்கு வழங்கும் மனது தாராளமாக இருக்கிறதே)

மிளகாயின் வரவிற்குப் பிறகு என்னுடைய பயன்பாடு குறைந்தா என்றால் இல்லை என்று தான் கூறவேண்டும்.இப்பொழுதும் உணவில் எனக்கு தனி இடம் உண்டு.

கருத்துகள்

ராஜா வாயிஸ் இவ்வாறு கூறியுள்ளார்…
காரமான பதிவிற்கு நன்றி
ஆ.ஞானசேகரன் இவ்வாறு கூறியுள்ளார்…
ஆகா.. அருமையான் பகிர்வு... புகைப்படமும் மிக நன்று...
பெயரில்லா இவ்வாறு கூறியுள்ளார்…
நாம் பழங்காலத்திலிருந்தே உணவில் காரத்திற்கு மிளகை மட்டும்தான் பயன்படுத்தி வந்துள்ளோம்.

மிளகாய் என்பது சமீபத்தில் வந்தது. மிளகு காரத்திற்கு இணையாக இந்த காயை பயன்படுத்தலாம் என்பதால்தான் அதற்கு 'மிளகு'காய் - மிளகாய் என்று பெயர் வந்தது.

தமிழராய்ச்சியாளன்
sivaguru இவ்வாறு கூறியுள்ளார்…
Nalla pathivu .Nandri!Ungal Pani Thodaratum.
sivaguru இவ்வாறு கூறியுள்ளார்…
Nalla pathivu .Nandri!Ungal Pani Thodaratum.
முனைவர் கல்பனாசேக்கிழார் இவ்வாறு கூறியுள்ளார்…
வருகைக்கு நன்றி ராஜா
முனைவர் கல்பனாசேக்கிழார் இவ்வாறு கூறியுள்ளார்…
நன்றி சேகரன்
முனைவர் கல்பனாசேக்கிழார் இவ்வாறு கூறியுள்ளார்…
நம்முடைய பழைமையான கறி மிளகுதான்.உங்கள் கருத்துரைக்கு நன்றி...
முனைவர் கல்பனாசேக்கிழார் இவ்வாறு கூறியுள்ளார்…
Nalla pathivu .Nandri!Ungal Pani Thodaratum

நன்றி ஸ்டீவ்
தமிழ் அமுதன் இவ்வாறு கூறியுள்ளார்…
நல்ல பதிவு நன்றி..!
ச.செந்தில்வேலன் / S.Senthilvelan இவ்வாறு கூறியுள்ளார்…
மிளகின் கதை அருமை!! நமது தாராள மனதைப் பற்றிக் கூறியது மிகவும் சரி.
ஹேமா இவ்வாறு கூறியுள்ளார்…
மிளகு கொடியா !
இப்பிடியா இருக்கும்.
அறிந்துகொண்டேன்.நன்றி.
முனைவர் கல்பனாசேக்கிழார் இவ்வாறு கூறியுள்ளார்…
உங்கள் வருகைக்கு நன்றிகள் பல ஜீவா,செந்தில்,ஹேமா.....
வல்வை சகாறா இவ்வாறு கூறியுள்ளார்…
வணக்கம் முனைவர் கல்பனா சேக்கிழார் அவர்களே நேற்றையதினம் உங்களுடைய வலைப்பூவைப் பார்க்கும் சந்தர்ப்பம் ஏற்பட்டது. உங்கள் எழுத்துகள் பிடித்திருந்தது. இன்னொரு கருத்துக்களத்திற்குள் உங்களுடைய ஒரு பதிவை இணைத்துள்ளேன். இத்தோடு அதன் இணைப்பையும் இணைத்துள்ளேன். நன்றி.
http://www.yarl.com/forum3/index.php?showtopic=65304
முனைவர் கல்பனாசேக்கிழார் இவ்வாறு கூறியுள்ளார்…
வணக்கம் தோழி உங்கள் பெயர் அறியமுடியவில்லை.உங்கள் வருகைக்கும் என் பதிவை மீள்பதிவு செய்தமைக்கும் மிக்க நன்றி.உங்களைப் பற்றி அறிந்து கொள்ள விழைகின்றேன்.
குமரன் (Kumaran) இவ்வாறு கூறியுள்ளார்…
மிளகிற்கு கறி என்ற பெயரும் மிரியம் என்ற பெயரும் சங்க காலத்தில் வழங்கியது என்று அறிந்ததில் மகிழ்ச்சி. இன்றைக்கு கறி என்ற சொல்லின் பொருள் மாறிவிட்டது; ஆனால் மிளகு என்ற பொருளில் இருந்து தற்காலப் பொருளுக்கு இந்த சொல் நகர்ந்த விதம் ஒரு தனி வரலாறாகவே இருக்கும் என்று ஊகிக்க முடிகிறது.

பிராகிருத மொழிகளின் வழி வந்த ஒரு மொழியான சௌராஷ்ட்ரத்தில் மிளகை மிரி என்கிறோம் (தமிழகத்தில் நிறைய சௌராஷ்ட்ரர்கள் வாழ்கிறார்கள்). மிரியம் --> மிரி (பிராகிருதம்) --> மரிசி (வடமொழி) என்று சென்றதா அன்றி மாறி அங்கிருந்து இங்கு வந்ததா என்பதை மொழியறிஞர்கள் தான் சொல்ல வேண்டும்.
வேந்தன் அரசு இவ்வாறு கூறியுள்ளார்…
மிக அருமையான கட்டுரை

மிள்கின் காரம் கொண்ட சில்லிநாட்டு இறக்குமதி காயை மிளகுகாய் என்றனர்.

தெலுகு நாட்டினர் மிரியலை மிரேலு என்றும் மிளகாயை மிரப்பகாய் என்றனர். அதுவே வட மானிலங்களில் மிர்ச்சி என்று திரிந்தது.

மேலை நாடுகளில் curry எனற சொல் மசாலாவுக்கு பொதுப்பெயர்.

நம் தமிழ் நாட்டில் கறியுடன் பயன்படுத்திய வேப்பிலையை கறிவேப்பிலை என்றார்கள்

வேந்தன் அரசு
முனைவர் கல்பனாசேக்கிழார் இவ்வாறு கூறியுள்ளார்…
உங்கள் கருத்துக்கும் வருகைக்கும் நன்றி ராஜு.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

புறநானூற்றில் கல்விச்சிந்தனை

சங்க இலக்கியத்தில் விருந்தோம்பல்

இரண்டாம் ஆண்டு - மூன்றாம் பருவம்