சிராப்பள்ளி
சங்க கால சோழவேந்தரிகளின் தலைநகரமாக செழிப்புற்று விளங்கிய ஊர் உறையூர்(உறைவதற்கு அதாவது வாழ்வதற்றகு ஏற்ற இடமாக இருந்ததால் இப்பெயர் பெற்றது).இன்று உறையூர் பொலிவிழந்து திருச்சியின் ஒரு பகுதியாக இருப்பதைப் பார்க்கின்றோம்(ஒரு காலத்தில் புகழ்பெற்று இருந்த ஊரின் இன்றைய நிலை இது மனிதனுக்கும் பொருந்தும்) சிராப்பள்ளி என்று பின்னால் பெயர் வரக் காரணம் சமயங்களின் தாக்கமே.சமணர்கள் அதிகம் இப்பகுதியில் வாழ்ந்து மக்களுக்கு கல்வி முதலிவற்றைப் போதித்ததால் இப்பெயர் வந்தது என்று கூறுகின்றனர் பள்ளி என்பதற்குப் பொதுவாக வாழுமிடம் இல்லது தங்குமிடம் என்று பொருளுண்டு( பள்ளிவாசல், பள்ளி கூடம்,பள்ளியறை இங்கு வரும் பள்ளிகள் எல்லாம் பக்குவப்படுத்துதல் அல்லது பக்குவப்படுதல் என்ற பொருளில் வரும்)
மூன்று தலையை உடைய அசுரன் இங்கு உள்ள இறைவன் வழிப்பட்டமையால் இப்பெயர் வந்தது எனப் புராணங்கள் கூறுகின்றன.
சிராப்பள்ளியைப் பற்றி ஆய்வு செய்த தி.வை சாதாசிவபண்டாரத்தார்,கி.பி.5-ஆம் நூற்றாண்டில் குன்றின் மேல் சில சமணதுறவிக்ள தங்கி தவம் புரிந்துக்கொண்டிருந்தனர்.அவர்களுள் சிரா என்னும் பெயருள்ள முனிவர் தலைமை முனிவராக இருந்து ,மற்ற முனிவர்களுக்கு வழிகாட்டியுள்ளார்.அவர் பெயராலேயே அவ்வூர் சிராப்பள்ளி என்று அழைக்கப்பெற்றது என்று கூறுகின்றார்.பின்பு நாம் எதையுமே பக்தி கண்ணோட்டத்துடன் தானே பார்ப்போம் ,அதனால் பிற்காலத்தில் சிராப்பள்ளி என்பது திரு என்னும் சிறப்பு பெயர் கொடுக்கப்பெற்று திருச்சிராப்பள்ளி என வழங்கப்பெற்றது.இன்று அதுவும் மருவி திருச்சி என வழங்கப்பெறுகின்றது.(பொருளில்லாமலே பொருளைத் தெரியாமலே திருச்சி திருச்சி என்று வழங்குகின்றோம்,இப்படி எல்லாவற்றையும் சுருக்கி சுருக்கி கொண்டே இருந்தால் எதுவுமே பொருளில்லாமல் போய்விடும்,மனித மனங்களும் கூட)
கருத்துகள்
ம்ம்ம்ம்ம்ம்