நிலவில் மலர்ந்த முல்லை....
நம்முடைய பழமையான இலக்கியங்கள் இன்றும் வாழ்ந்துகொண்டு நம்மை இன்புறுத்திக்கொண்டும் செவ்வியல் மொழிக்குக் காரணமாகவும் இருப்பதற்குக் காரணம் அந்நூல்களை அழிவுறாமல் அச்சில் ஏற்றிய பெருமக்களையே சாரும்.பழமையான நூல்கள் அழிவுறாமல் காத்ததில் பெரும் பங்கு தமிழ்த் தாத்தா என்று அனைவராலும் அழைக்கப்பெறும்
மாமனிதர் உ.வே.சா அவர்கள்.அவர் பத்துப்பாடல் நூல்களைத் தேடி சென்று என்ன என்ன துன்பங்களை அனுபவித்துப் பெற்றார் என்பதை பதிவு செய்துள்ளார்.நம்முன்னோர்கள் எத்துணை துன்பத்திற்க்கு இடையே சங்க நூல்கள் போன்றவற்றை காத்துள்ளார்கள்.அவற்றைப் போற்றி பாதுகாப்பது தம்முடைய கடமை அல்லவா.
இதோ பத்துப்பாட்டை தேடிசென்றதை அவர் மொழியிலேயே காணலாம்.
சீவகசிந்தாமணியை நான் முதன் முதலில் ஆராய்ந்து பதிப்பித்து வருகையில் (1887-இல்)அதில் உள்ள மேற்கோள்கள் இன்ன இன்ன நூலிலுள்ள வென்று கவனித்தேன்.அப்பொழுது பல பழைந தமிழ் நூல்களைப் பற்றி அறிந்தேன்.பத்துப்பாட்டென்று ஒரு தொகை நூல் உண்டென்பதும் அது திருமுருகாற்றுப்படை முதலிழ பத்துத் தனி நூல்களை உடையதெனபதும் நாளடைவில் தெரிய வந்தன.அதனால் பத்துப்பாட்டைத் தேடிப் பெற்று ஆராயவேண்டுமென்ற ஆவல் உண்டாயிற்று.பல நண்பர்களுடைய இதவியினால் பத்துப்பாட்டின் பிரதிகள் சில கிடைத்தன.ஆனாலும் அவற்றில் பத்துப்பாட்டுகளும் இல்லை.இருந்த பாடல்களுக்கும் தனியே மூலம் இல்லாமல் உரை மட்டும் இள்ளனவாகவும் ,இடையிதையே இறைந்தனவாகவும் இருந்தன.இள்ள பகுதிகள் திருத்தமாக இல்லை ஆகையால் மேலும் மேலும் பத்துப்பாட்டுப் பிரதிகளைத் தேடிவந்தேன்.
யான் கும்பகோணம் காலேஜில் வேலைபார்த்து வந்த அக்காலத்தில் விடுமுறைகளில் வெளியூருக்கு இதன் பொருட்டுப் பிரயாணம் செய்து வருவதுண்டு.
ஒரு சமயம் ஆவணியவிட்டத்தோடு தொடர்ந்து ஒரு வாரம் விடுமுறை கிடைத்தது.திருநெல்வேலிப் பக்கதிற் பரம்பரை வித்துவான்களுடைய வீடிகளில் தேடினால் சுத்தமான பிரதிகள் கிடைக்குமென்று எண்ணியிருந்தேன்.ஆதலில் அவ்விடுமுறையில் திருநெல்வேலிக்கும் ஆழ்வார் திருநகரி முதலிய ஊர்களுக்கும் சென்றுவர நிச்சயித்து அங்கேயுள்ள சில அன்பர்களுக்கு நான் வருவதை எழுதியிருந்தேன்.இதனை என தந்தையாரிடம் தெரிவித்த போது அவர்,சிராவணத்திற்கு இங்கே இராமல் வெளியூருக்குப் போக வேண்டாம் .அடுத்த விடுமுறையில் பார்த்துக் கொள்ளலாம் என்று எனது எண்ணத்திற்குத் தடையை உண்டாக்கினார்.நான் போகவேண்டிய அவசியத்தைச் சொன்னேன்.அவர் சிறிதேனும் இணங்காமல் போகக்கூடாதென்று தடுத்தனர்.சிராவணத்தைக் காட்டிலும் பத்துப்பாட்டு எனக்குப் பெரிதாக இருந்தமையால் மிகவும் சிரம்பஃபட்டு அவரிடம் தக்க சமாதானம் கூறி விடைபெற்றுப் புறப்பட்டேன்.
இரவு எட்டு மணி,ரெயில்வே ஸ்டேயனுக்கு ஒற்றை மாட்டுவண்டியொன்று பேசிக்கொண்டு ஏறினேன்.என் தந்தையார் அரைமனத்தோடு விடைகொடுத்து அனுப்பினார்.ஒரு தகரப்பெட்டி மட்டும் உடன் வந்த்து.வண்டி வாணாதுறை என்னும் இடத்துக்குத் தென்பாற் செல்லும் போது
எதன்மேலோ மோதிக் குடைசாய்ந்து விட்டது.நான் கீழே விழுந்தேன்;மேலே என் பெட்டி விழுந்தது.இந்த நிலையிலும் எனக்கு ஊக்க குறைவு உண்டாகவில்லை .என் மனம் முழுதும் திருநெல்வேலியில் இருந்த்து.ஏதாவது ககன குளிகையை ஒரு மகான் கொடுத்து,இதை மிகவும் அவசரமான சமயத்தில் அதை உபயோகித்திருப்பேன்.என் மனவேகத்துக்கு நேர்மாறாக வண்டியின் வேகம் இருந்ததோடு இடையில் வழியில் கீழேயும் வீழ்த்திவிட்டது.
திரும்பி வீட்டுக்குப் போய் இருந்து மறுநாள் புறப்படலாமென்னு முதலில் எண்ணினேன்;முன்பே எனது பிரயாணத்தைத் தடுத்த என் தந்தையாருக்கு வண்டி குடைசாய்ந்த அபசகுணமும் துணைசெய்து பின்னும் என் பிரயாணத்தைத் தடுக்க ஏதுவாகுமென்று நினைத்து அங்கனம் செய்வது தக்கதன்றென்று பின்பு துணிந்தேன்.ஆதலால் உடனே வண்டிக்காரனுக்குரிய சத்தம் முழுவதையும் கொடுத்துவிட்டுப் பெட்டியைத் தூக்கிக் கொண்டு ஸ்டேஷனை நோக்கி நடந்தேன்.நல்லவேளையாக நான் உத்தேசித்துச் சென்ற புகைவண்டி கிடைத்தது ஏறிச்சென்றேன.
தஞ்சாவூருக்கு அப்பால் வரும்போது நடுவழியில் ஒரு காட்டில் வந்து வண்டி திடீரென்று நின்றது.ரெயில்வே அதிகாரிகள் பலர் வந்து நான் இருந்த வண்டியைக் கீழும் மேலும் பார்த்தார்கள்.தூக்க மயக்கத்தோடு இருந்த என்னைக் கீழே இறங்கி வேறு வண்டிக்குப் போகும்படி அதட்டிச் சொன்னார்கள்.நான் இருந்த வண்டிக்கு முன்னே இருந்த வண்டியில் தீப்பிடித்து விட்டதாம்.அதனால் இரண்டு வண்டிகளையும் கழற்றி விட அவர்கள் எண்ணினார்கள்.நான் ஈசுவரத்தியானம் செய்துகொண்டு வேறு வண்டியிற் போய் ஏறினேன்.புறப்பட்டது முதல் உண்டான இந்த இடையூறுகளால் மனதுக்குள் சிறிது சஞ்சலம் உண்டாயிற்று.எனக்கு இருந்த ஊக்கமிகுதியாற் பிறகு அது நீங்கிற்று.
மறுநாட் காலையில் சொக்கியமாக நான் திருநெல்வேலியை அடைந்தேன்.அங்கே அக்காலத்தில் கனகசபை முதலியாரென்று கனவான் ஒருவர் ஸப்ஜட்ஜாக இருந்து பிறகு அங்கிருந்து திருநெல்வேலிக்குப் போனார்.தஞ்சாவூரில் இருந்த காரலத்தில் அவர் எனக்குப் பழக்கமானார்.அப்பொழுது ஒருமுறை என்னுடைய நண்பர் கே.சுந்தர்ராமையரவர்கள் மூலம்,தாம் திருநெல்வேலிக்கு மாற்றப்பட்டிருப்பதாகவும்,அங்கே வடுகள் தேடும் விஷயத்தில் தம்மால் இயன்ற உபகாரம் செய்வதாகவும் சொல்லியனுப்பியதுண்டு.அது நினைவில் இருந்தமையாலும்ரநான் புறப்படுவதற்கு முன் அவருக்கு எழுதியிருந்தமையாலும்,திருநெல்வேலியில் அவரு இருப்பிடத்தை விசாரித்துக் கொண்டு அவரிடம் சென்றேன்.என்னை அவர் கண்டவுடன் எனது க்ஷேம சமாசாரத்தைக் கூட விசாரிக்காமல் உங்களுக்கு இப்போதுதான் ஒரு கடிதம் எழுதித் தபாலுக்கு அனுப்ப இருந்தேன் ; இங்களிடம் சொல்லவேண்டியவற்றை இந்தக் கடித்தத்தில் எழுதியிருக்கின்றேன் என்று சொல்லி ஒரு கடித்தத்தை நீட்டினார்.அது விலாச மெழுதித் தபால் தலையும் ஒட்டப்பெற்று அனுப்பத் தக்க நிலையில் இருந்தது.அதனை நான் பிரித்துப் பார்த்தேன்.அதிலிருந்து செந்திகளின் கருத்து வருமாறு.
நான் தங்களுக்கு வாக்களித்தபடி ஏட்டுச் சுவடிகள் விஷயத்தில் உதவி செய்ய இயலாதவனாக இருக்கின்றேன்.இளமை முதற்கொண்டு என்னுடைய நண்பராயுள்ள ஸ்ரீ.சி.வை.தாமோதரம் பிள்ளையவர்கள் தமக்குச் சில ஏட்டுச் சுவடிக்ள வேண்டுமென்று எழுதியிருந்தார்கள்.நான் தேடித் தருவதாக அவர்களுக்கு வாக்களித்திருக்கிறேன்.தங்களுக்கு வேண்டியனவாகச் சொன்ன புஸ்தகத்தையே அவர்களும் கேட்டிருக்கிறார்கள்.அதனால் தங்களுக்கு உதவி செய்ய இயலாதென்பதைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.இப்பக்கங்களில் வந்து தேடிச் சிரம்பபடவேண்டாம்.
இதைப் படித்துப் பார்த்தேன் ;முதலியாரை நோக்கி மெத்த ஸந்தோஷம்.நீங்கள் உதவி செய்வதாகச் சொல்லியிருந்தமையால் உங்களைத் தேடி வந்தேன்.தங்களுக்கு என்னைப் பற்றி கவலை வேண்டாம்,இந்தப் பக்கங்களில் எனக்குப் பழக்கமுள்ள பிரபுக்களும்,வித்துவான்களும் இருக்கின்றார்கள்.அவர்கள் மிக்க அன்போடு எனக்கு உதவி செய்வார்கள்.ஆதலால் நான் போய் வருகிறேன் என்றேன்.
நான் மிக வருத்தப்படுவேனென்று முதலியார் நினைத்திருப்பார் போலும் எனக்கு விடை அவருடைய முகத்தில் ஒரு வியப்புக்குறிப்பை உண்டாக்கிற்று;அப்படியா உங்களுக்கு யார் யார் நண்பருகள்? எந்த எந்த ஊருக்குப் போகப் போகின்றீர்கள்? என்று அவர் கேட்டார்.
நான் இந்த பக்கத்திலே பெரிய கனவான்கள் பலருடைய ஆதரவு எனக்குக் கிடைக்கும்.பல ஜமீன்தார்களுடைய பழக்கம் என்க்கு உண்டு.ஆழ்வார் திருநகரி ஸ்ரீ வைகுண்டம்,தென்திருப்போரை முதலிய இடங்களுக்கெல்லாம் போய்த் தேட எண்ணியிருக்கின்றேன். என்று சொல்லிவிட்டு மெய்யன்பர்களாகிய பல உத்தியோகஸ்தர்கள் பெயர்களையும் கனவான்கள் பெயர்களையும் சொன்னேன்.நான் குறிப்பிட்டவர்களெல்லாம் முதலியார் அதிகாரத்திற்குப் புறம்பானவர்கள்.
கேட்ட முதலியார் அப்படியானால் கிடைக்கும் புஸ்தகங்களில் எனக்கும் ஏதாவது கொடுத்தால் தாமோதரம் பிள்ளையவர்களுக்கு அனுப்புவேன் என்றார்.
நான் நகைத்துக் கொண்டே நானே பறந்து கொண்டு இருக்கின்றேன்.இந்த நிலைநில் உங்களுக்கு வேறு கொடுக்க வேண்டுமா? நீங்கள் பெரிய உத்தியோகத்தில் இருப்பவர்க்ள .உங்களுடைய செல்வாக்குக்கு எவ்வளவோ சுவடிகள் கிடைக்கலாம்.என்று சொல்லி விடைபெற்றுவிட்டு வந்துவிட்டேன்.
பிறகு கைலாசபுரத்தில் இருந்த வக்கீலும் ஜனோபகாரியுமாகிய அன்பர் ஸ்ரீ.ஏ.கிருஷ்ணசாமி ஐயரென்பவரது வீடு சென்றேன்.அவர் மிக அன்போடு எப்போது வந்தீர்கள் நீங்கள் வருவதை முன்பே தெரிவித்திருக்க கூடாதா? என்று சொல்லி உபசரித்து உணவு முதலிய சௌரியங்களைச் செய்வித்தார்.ஆழ்வார் திருநகரிக்குப் போய் அங்கேயுள்ள கவிராயர்கள் வீடுகளில் ஏடு தேடுவதற்கு வந்த என் கருத்தை அவரிடம் தெரிவித்தேன்.அவர் நீங்கள் சிறிதும் கவலைப்பட வேண்டாம்.என்னுடைய நண்பரும் வக்கீலுமாகிய சுப்பராய முதலியாரென்பார் ஸ்ரீ வைகுண்டத்தில் இருக்கின்றார்.அவருக்கு ஒரு கடிதம் எழுதி தருகின்றேன்.உங்களுக்கு வேண்டிய அனுகூலங்கள் யெல்லாம் அவர் செய்து கொடுப்பார் என்று கூறினார்.பிறகு ஸ்ரீ வைகுண்டத்திற்கு ஒரு வண்டி ஏற்பாடு செய்து கொடுத்து என்னை அனுப்பினார்.
அங்ஙனமே ஸ்ரீ வைகுண்டம் போய்ச் சேர்ந்து வக்கீல் சுப்புராய முதலியாரைக் கண்டேன்.அவர் மிக்க அன்போடு உபசரித்துப் பேசினார்.தம்மால் இயன்ற உதவிகளையெல்லாம் செய்வதாக வாக்களித்தார்.பிறகு அவருடன் அங்கிருந்து அருகிலுள்ள ஆழ்வார்கள் திருநகரிக்குச் சென்றேன்.நான் கடிதம் அனுப்பியிருந்த ஆழ்வார் திருநகரி அன்பர்கள் என் வரவை எதிர்பார்த்திருந்தனர்.அப்போது திருவாடுதுறை மடத்து அதிபர்களாக இருந்த ஸ்ரீ அம்பலவாண தேசிகவர்கள் அவ்வூர் மடத்திலுள்ள காரியஸ்தருக்கு என்னைக் கவனித்துக் கொள்ளும் படி உத்தரவு செய்திருந்தார்கள்.அவர்கள் யாவரும் முயன்று கவிராயர்கள் வீட்டிலுள்ள சுவடிகளையெல்லாம் தேடி எடுத்து நான் வந்தவுடன் பார்க்கத்தக்க சிலையில் வைத்திருந்தனர்.
நான் முதலில் லஷ்மண கவிராயரென்று ஒருவருடைய வீட்டிற்குப் போனேன். அவர் மிகவும் சிறந்த வித்துவானாகிய தீராத வினைதீர்த்த திருமேனி கவிராரென்பவருடைய பரம்ம்பரையினர்.அவர் வீட்டில் ஆயிரக்கனக்கான் சுவடிகள் இருந்தன. பல பழைய நூல்களும் ,இலக்கணங்களும் ,பிரபந்தங்களும் புராணங்களும் இருந்தன. எல்லாவற்றையும் பிரித்துப் பிரித்துப் பார்த்து வந்தேன். நான் தேடி வந்த பத்துப்பாட்டு மட்டும் கிடைக்கவில்லை.ஒரு சுவடியில் மூவாயிரத்துக்கும் மேற்பட்ட நூல்களின் ஜாப்தா இருந்தது.அதிற் கண்டவற்றுள் பத்துப்பாட்டின் முதல் ஏழுபாடல்களுள்ள பிரதியின் பெயர் ஒன்று.ஊரை விட்டுப் புறப்பட்டது முதல் அனுகூலமான செய்தியொன்றையும் பெறாமல் தளர்ச்சியடைந்திருந்த என் மனத்தில் அப்பொழுது சிறிது ஊக்கம் பிறந்தது.அந்தச் சுவடிக் குவியல்களிலே பத்துப்பாட்டு அகப்படக் கூடுமென்றே நம்பினேன்.
மூன்று நாள்கள் ஆழ்வார் திருநகரியில் இருந்தேன் .வந்த முதல்நாள் ஆவணியவிட்டம்.ஸ்ரீ வைகுடண்டத்தில் இருந்த பள்ளிக்கூடப் பரிசோதகரும் என் நண்பருமாகிய சிவராமையரென்பவருடைய வீட்டில் தங்கியிருந்தேன்.ஒவ்வொருநாளும் லஷ்மண கவிராயர் வீட்டில் ஏடு பார்ப்பதும் இடையிலே சில சமயங்களில் தாயவலந்தீர்த்த கவிராயர் ,அமிர்த கவிராயர் முதலிய வேறு கவிராயர்கள் வீடிகளிலுள்ளவற்றைப் பார்ப்பதும் என்னுடைய வேலைகளாக இருந்தன. முப்பது கவிராயர்கள் வீட்டிலுள்ள ஏடுகள் எல்லாஃவற்றையும் பார்த்தேன்.பத்துப்பாட்டு அகப்படவில்லை இது நான் புறப்பட்ட காலத்து ஏற்றபட்ட சக்னங்களின் பயன் என்றெண்ணி வருந்தினேன்;என் உள்ளம் சோர்ந்தது.
அப்பொழுது லஷ்மண கவிராயர் எங்கள் வீட்டில் அளவற்ற ஏடுகள் இருந்தன.எங்கள் முன்னோர்களில் ஒரு தலைமுறையில் மூன்று சகோதரர்கள் இருந்தார்கள்;அவர்களில் ஒருவர் இறந்து விட்டார்.அவருடைய மனைவியாரின் பிறந்தகம் தச்சநல்லூர்.தம் புருஷர் இறந்தவுடன் அவர்கள் தச்சநல்லூர் சென்றுவிட்டார்கள்.போகும் போது இங்கிருந்து சுவடிகளையெல்லாம் பாகம் பண்ணி மூன்றில் ஒரு பகுதியை எடுத்துக்கொண்டு போய்விட்டார்களாம் என்றார்.பத்துப்பாட்டும் அந்தச் சுவடிகளோடு தச்சநல்லூருக்குப் போயிருக்க வேண்டும் ,சரி இவ்வளவு சிரம்பஃபட்டும் பயனில்லாமல் போயிற்றே என்று வருந்தி நான் கூறினேன்.
அவர் திடீரென்று எதையோ நினைத்துக்கொண்டு ,ஒரு விஷயம் மறந்துவிட்டேன்; இவ்வூரில் என்னுடைய மாமனார் இருக்கிறார்.தேவபிரான்பிள்ளை யென்பது அவர் பெயர்.அவருக்கு எனக்கும் இப்பொழுது மனக்கலப்பில்லை.என்னுடைய வீட்டிலிருந்து வேலைக்காரன் ஒருவன் சில சுவடிகளைக் கொண்டுபோய் அவரிடம் நீங்கள் தேடும் புஸ்தகம் இருக்கிறதாவென்று பார்க்கச் செய்யலாம்.ஆனால் நான் அவரோடு பழகுவதை இப்போது நிறுத்திவிட்டேன் என்றார்.
அவற்றையும் பார்ப்போம் தாங்கள் மட்டும் தயை செய்யவேண்டும் தாங்கள் அவர் வீட்டில் இருப்பவற்றை வாங்கித் தரவேண்டும் ; என்னை வரச்சொன்னாலும் உடன் வருவேன் என்று நான் அவரைக் கேட்டுக் கொண்டேன்;அருகிலுள்ளவர்களும் சொன்னார்கள்.கவிராயர் அங்ஙனமே செய்வதாக ஒப்புக்கொண்டார்.
ஏடுகளைப் புரட்டிப் புரட்டிப் பார்த்துக் கையும் மனமும் சோர்ந்து,அவ்வூரில் ஸப்ரிஜிஸ்தாராராக இருந்த இராமசாமி ஐயரென்பவர் வீட்டுக்குப் போனேன்.இரவு அவர் வீட்டிற் போஜனம் செய்துவிட்டுத் திண்ணையில் உட்கார்ந்தேன்.அவ்வூரிலுள்ள ஸ்ரீ வைஷ்ணவப் பெரியார் சிலர் நான் விஇரும்பியபடி திவ்யப் பிரபந்தந்நிலுள்ள சில பாசுரங்களின் பழைய வியாக்கியானங்களைக் கேட்டு அடையும் முழுமகிழ்ச்சியும் எனக்கு அப்பொழுது உண்டாகவில்லை.அதற்குக் காரணம் அவற்றைச் சொன்னவர்களது குறையன்றுநென் உள்ளத்துக்குள்ளேயிருந்து,பத்துப்பாட்டு அகப்படவில்லை என்ற கவலையே.
இப்படி இருக்கையில் அன்று ஏதோ விசேஷமாதலின் திருவீதியில் பெருமாளும் சடகோராழ்வாரும் எழுந்தருளினார்கள்;ஆழ்வார்கள் அவதரித்த திவ்யதேசம் அவ்வூரென்று நான் சொல்வது மிகை; நானும் பிறரும் எழுந்து தரிசனம் செய்தோம்.நான் வணங்கினேன்.பட்டர்கள் சந்தனம் புஷ்ப மாலை முதலியவற்றை அளித்தார்கள்.எல்லோருடைய அன்பும் ஒருமுகப்பட்டு அத்தகைய மரியாதைகளை நான் பெறும்படி செய்தது.அப்பொழுது நம்மாழ்வார் திருக்கோலத்தை தரிசித்தேன்; அவரைப் பார்த்து ஸ்வாமி தமிழ் வேதம் செய்தவரென்றுதேவரிரைப் பாராட்டுகின்றார்கள். தேவரீருடைய ஊருக்குத் தமிழ் நூலொன்றுறைத் தேடி வந்திருக்கின்றேன்.தமிழுக்குப் பெருமை யருளும் தேவரீருக்கு நான் சிரமம் தெரியாத தன்றே.நான் தேடி வந்தது கிடைக்கும்படி கருணை செய்யாமல் இருப்பது நியாயமா என்று சொல்லிப் பிரார்த்தித்தேன்.உள்ளம் அயர்ந்து போய்,இனிமேல் செய்வது ஒன்றும் இல்லை என்ற முடிவிற்றகு வந்தமையினால் இங்கனம் பிராத்தனை செய்தேன்.
பெருமாளும் ஆழ்வாரும் அவ்விடத்தைக் கடந்து அப்பால் எழுந்தருளினார்கள் .உடனே நாங்கள் திண்ணையில் வந்து அமர்ந்தோம் .நிலா ஒளி நன்றாக வீசியது.அப்பொழுது லக்ஷ்மண கவிராயர் எதையோ தம் மேலாடையால் மறைத்துக்கொண்டு மிகவும் வேகமாக எங்களை நோக்கி வந்தார்.திருக்கோயில் பிரசாதங்களைப் பெற்று அவற்றை மறைத்துக்கொண்டு வருகிறாரென்று நான் நினைத்தேன்.வந்தவர் இந்த புஸ்தகத்தைப் பாருங்கள் இந்த ஒன்றுதான் என் மாமனாரிடம் இருக்கிறது;பார்த்துவிட்டுத் திருப்பி அனுப்பிவிடுவதாகச் சொல்லி வாங்கிவந்தேன் என்று கூறி மேல் வஸ்திரத்தால் மூடியிருந்த சுவடியை எடுத்தார்.அவர் என்னிடம் கொடுப்பதற்கு முன்பே ஆத்திரத்தால் நான் அதனைப் பிடுங்கினேன்.மேலே கட்டிருந்த கயிற்றை அவிழ்த்து அந்த நிலாவின் ஒளியிலேயே பிரித்தேன்.சட்டென்று முல்லைப்பாட்டு என்ற பெயர் என் கண்ணில் பட்டது.நிலவில் மலர்ந்த அம் முல்லையினால் என் உள்ளம் மலர்ந்தது.எனக்கு உண்டான சந்தோஷத்திற்கு எல்லையில்லை.மிகவும் விரைவாக முதலிலிருந்து திருப்பித் திருப்புப் பார்த்தேன்.ஆரம்பத்தில் திருமுருகாற்றுப்படை அப்பால் பொருநராற்றப்படை,அதன் பின் சிறுபணாற்றுப்படை இப்படி நெடுநல்வாடை முடிய ஏழுபாட்டுக்கள் இருந்தன.ஒவ்வோர் ஏட்டையும் புரட்டிப் புரட்டிப் பார்க்கையில் என்னையே மறந்து விட்டேன்.சந்தோஷ மிகுதியினால் அப்பொழுது என் வாயிலிருந்து வந்த வார்த்தைகள் அருகிலிருந்தவர்களுக்குப் பொருள் பட்டிரா.அந்தச் சமயத்தில் மட்டும் என்னை யாரேனும் புதிதாகப் பார்த்திருந்தால் எனக்குப் பைத்தியம் பிடித்திருப்பதாகவே கருதியிருப்பார்.என்னுடைய மன உணர்ச்சி அவ்வளவு தீவிரமாக இருந்தது.
ஆழ்வாரைப் பிராத்தித்தது வீண்போகவில்லை.அவர் கண்கண்ட தெய்வம் என்பதில் ஐயமேயில்லை எனுற அருகில் இருந்தவர்களிடம் கூறினேன். அன்று இரவு முழுதும் சந்தோஷ மிகுதியினால் எனக்குத் தூக்கமே வரவில்லை.மறுநாட் காலையில் திருக்கோயிலுக்குச் சென்று பெருமாளையும் ஆழ்வாரையும் தரிசித்து அர்ச்சனை செய்வித்து இப்படியே நான் நினைத்த காரியங்களுக்கெல்லாம் அனுகூலமாக செய்தருள வேண்டும் என்று பிராத்தித்துவிட்டு வந்தேன்.
அப்பால், ஊற்றுமலை ஜமீன்தாராகிய ஹிருதயாலய மருதப்பத் தேவருக்குக் கொடுஃக்கும் பொருட்டு ஊரிலிருந்து கொண்டு போயிருந்த சீவக சிந்தாமணி புஸ்தகத்தையும் ,வேறு சில புஸ்தகங்களையும் லஷ்மண கவிராயருக்கும் கொடுத்தேன்.அங்கே கிடைத்த ஐங்குறு நூற்றின் பழைய உரையுள்ள குறை ஏட்டுப் பிரதி ஒன்றையும் பதிற்றுப்பத்து,புறப்பொருள் வெண்பா மாலையாகிய இரண்டையும் பத்துப்பொட்டோடு பெற்றுக்கொண்டு முக்கிநமானவர்களிடமெல்லாம் விடைபெற்று வேறு சில ஊர்களிலுள்ள கவிராயர்கள் வீடுகளிலிருந்து ஏடுகளையும் பார்த்துக்கொண்டு திருநெல்லவேலி சென்றேன்.
திருநெல்வேலியில் கனகசபை முதலியாரைக் கண்டேன்.அவர் எங்கெங்கே போயிருந்தீர்கள் யார் யார் உதவி செய்தார்?என்ன என்ன நூல்கள் கிடைத்தன? என்று விசாரித்தார்.எனக்கு இன்னாரின்னார் உதவி செய்தனரென்றும் கிடைத்த சுவடிகள் இன்னது இன்னதென்று தெரிவித்தேன்.அவர் எனக்கு ஏதாவது தந்தல் தமோதரம் பிள்ளைக்கு அனுப்புவேன் என்றார்.தேடாத இடமெல்லாந்நேடி அலையாத அலைச்சலெல்லாம் அலைந்து பெற்றவைகளை உங்களுக்கு நான் எப்படித் தருவேன்? நீங்கள் சிரமப்படாமல் பிறருடைய சிரமத்தினால் லாபம் பெறுவது நியாயமா?என்று சொன்னேன்.அவர் மேலே ஒன்றும் பேசவில்லை.அப்பால் அங்கே கைலாயபுரத்திலிருந்து கிருஷ்ணசாமி ஐயரவர்களைப் பார்த்து அவர்கள் மூலம் கிடைத் உதவியைப் பாராட்டி விடைபெற்று கும்பகோணம் வந்து சேர்ந்தேன்.
நிலவில் மலர்ந்த முல்லையையுடைய அப்பிரதியிலும் ஏழு பாட்டுக்களின் உரை மாத்திரம் இருந்தது.ஆனால் திருத்தமுள்ளதாக்க காணப்பட்டது.நான் ஏடுகளைத் தேடச் சென்று பட்ட சிரமத்தைப் பற்றிய வரலாறு மிக பல.அவற்றுள் இந்த நிகழ்ச்சி ஒன்று.
கருத்துகள்
என்ன ஒரு உழைப்பு !!
எல்லாக் காலத்திலும் உழைப்பே இல்லாமல் பயனடைய காத்திருப்பவர்கள் உண்டு என்பதும் புரிகிறது.
தமிழின் மேல் காதல் என்பதற்கு ஐயரவர்களின் வாழ்க்கையே உதாரணம். ஏனெனில் தன் தமிழ் புலமையை காட்டும் வண்ணம் ஒரு தனிக் காவியம் படைத்து தன் பெயரை நிலைநாட்டிக் கொள்ள முற்படவில்லை. அதற்கு பதில் சிதறிக் கிடக்கும் முத்துக்களைச் சேர்த்து கடைசி வரையிலும் தமிழன்னைக்கு தமிழ் மாலை கோர்ப்பதிலேயே வாழ்நாளை அர்ப்பணித்தார். அருமையான இடுகைக்கு நன்றி.
தீபாவளி நல்வாழ்த்துகள்
அவர்கள் கொடுத்துச் சென்ற செல்வங்களைப் பாதுகாக்க தவறிவிடுவோமோ என்று தோன்றுகிறது.
உவேசா தமிழன்னை நமக்கு அளித்த கொடை.
பாராட்டுக்கள்.
மனதைத் தொட்ட இந்த இடுகைக்கு மிக்க நன்றி
அன்புடன்
கி. விசுவநாதன்