மாலை வகைகள்........


நம் முன்னோர்களால் எழுதப்பட்ட பழமை இலக்கியங்களின் வாயிலாக மாலை என்று இன்று ஒரு சொல்லால் குறிப்பிடுகின்றோமே பூமாலையை அதற்கு பலப் பெயரில் வழங்கியுள்ளதை அறியலாம்.

மாலை,தார்,கோதை,கண்ணி,தெரியல்,தொடையல்,ஒலியல்,தாமம் என்ற சொற்கள் சங்க நூல்களில் காணப்பெறுகின்றன.இந்நொற்கள் அனைத்தும் சில வேறுபாடுகள் உடையது.

கண்ணி கார்நறுங் கொன்றை,காமர்
வண்ண மார்பில் தாரும் கொன்றை


என புறநானூற்றிலும்,

கார்விரி கொன்றைப் பொன்நேர் புதுமலர்
தாரன் மாலையன் மலைந்த கண்ணியன்
என அகநானூற்றிலும்

கண்ணியார் தாரர் கமழ்நறுங் கோதையர்

எனப் பரிபாடலிலும்
காணப்பெறுவதால் கண்ணி,தார் மாலை,கோதை என்ற சொற்கள் வெவ்வேறானவை என்பதை அறியலாம்.

கண்ணி என்பது தலையில் சூடுவது.செறிவாக பல வண்ணமலர்களைக் கொண்டு தொடுக்கப்பெறுவது.
தார் ஆண்கள் அணியக்கூடியது.
மாலை பெண்கள் அணியக்கூடியது.
கோதை ஆண்கள்,பெண்கள் இருபாலரும் அணியக் கூடியது.

தெரியல் என்பது தேர்ந்தெடுக்கப் பட்ட மலர்களால் தொடுப்பது என்று கூறுவர்.
தொல்காப்பியர்
'உறுபகை வேந்திடை தெரியல் வேண்டி'
என்று கூறுவதனால் தெரியல் என்பது இன்ன குலத்தினர் என்று அறிந்து கொள்ள சூடிக்கொள்ளும் பூமாலை என்லாம்.
அதாவது மூவேந்தர்கள் தங்களை அடையாளப்படுத்திக் கொள்ள ஒவ்வொரு வகையான மாலையை அணிந்தார்கள் அல்லவா அதுதான் தெரியல் என்பர்.

தொடையல் என்பது பூவால் தொடுக்கப்படுவது என்று கூறப்பெறிகின்றது.

தாமம் என்பது நாரினால் கட்டப்படும் மாலையைக் குறிக்கின்றது.

கருத்துகள்

ஆ.ஞானசேகரன் இவ்வாறு கூறியுள்ளார்…
நல்லதோர் விளக்கம்.. மிக்க நன்றி
முனைவர் கல்பனாசேக்கிழார் இவ்வாறு கூறியுள்ளார்…
நன்றி சேகரன்.......
குமரன் (Kumaran) இவ்வாறு கூறியுள்ளார்…
ஆண்டாள் மாலை என்று இன்று நாம் சொல்வது தான் தார். ஆண்களுக்கு மட்டுமே உரியது. வில்லிபுத்தூர வடபெருங்கோயிலுடையான் தாரன். அவனுக்காகத் தொடுக்கப்பட்டதை இவள் சூடித் தந்ததால் சுடர்கொடிக்கும் தாரையே அணிவிக்கும் வழக்கம் ஏற்பட்டுவிட்டது.

மற்றவற்றை நன்கு விளக்கியிருக்கிறீர்கள் முனைவரே.
முனைவர் கல்பனாசேக்கிழார் இவ்வாறு கூறியுள்ளார்…
மிக்க நன்றி குமரன் அவர்களே.......
Kamal இவ்வாறு கூறியுள்ளார்…
முருக நாயனார் வரலாற்றில் பல மாலை வகைகளை பற்றி சேக்கிழார் குறிப்பிடுகிறார். அதை விளங்க உங்கள் பதிவு சிறிது உதவுகிறது. நன்றி

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

புறநானூற்றில் கல்விச்சிந்தனை

சங்க இலக்கியத்தில் விருந்தோம்பல்

பூவின் பல நிலைகள்.......