தொகைச்சொற்கள

ஏழு எண்ணிக்கையில் அமைந்த தொகைச்சொற்கள்.........


அகத்திணை ----- குறிஞ்சி,முல்லை,மருதம்,நெய்தல்,பாலை,கைக்கிளை,பெருந்திணை

அவஸத்தை ----- கர்ப்பாவஸத்தை,ஜன்மாவஸத்தை,பாலியாவஸ்த்தை,யௌவனாவஸ்த்தை,ஜராவஸத்தை,மரணவஸ்த்தை,நரகாவஸ்த்தை

இசை ---- குரல்,துத்தம்,கைக்கிளை,உழை,இளி,விளரி,தாரம்

இடையெழுவள்ளல்கள் ----- அக்குரன்,சந்திமாண்,அந்திமான்,சிசுபாலன்,தந்தவக்கிரன் கன்னன்,சந்தன்

உலகம் ----- பூலோகம்,புவலோகம்,சுவலோகம்,மகாலோகம்,சனலோகம், தவலோகம்,சத்தியலோகம்

உலோகம் ----- செம்பொன்,வெண்பொன்,இரும்பு,ஈயம்,வெங்கலம்,தரா

எழுமதநீர் ----- கன்னமிரண்டு,கண்ணிரண்டு,கரத்துவாரமிரண்டு,கோசகம் ஒன்று என்னும் ஏழிடங்களிலிருந்து யானைக்கு மதனநீர் தோன்றும்

எழுவகை அளவை ----- நிறுத்தல்,பெய்தல்,சார்த்தியளத்தல்,நீட்டியளத்தல்,தெறித்தளத்தல்,தேங்கமுந்தளத்தல், எண்ணியளத்தல்

கடல் ----- உவர் நீர்,நன்னீர்,பால்,தயிர்,நெய்,கருப்பஞ்சாறு,தேன்

கடையெழு வள்ளல்கள் ----- எழினி,ஓரி,காரி,நள்ளி,பாரி,பேகன்,மலையன்

கீழேழுலகம் ----- அதலம்,விதலம்,சுதலம்,ரசாதலம்,மகாதலம்,பாதலம்

கொங்குநாட்டுச் சிவாலயங்கள் ----- திருவெஞ்சமாக் கூடல்,திருக்கரூவூர்த் திருவானிலை,திருப்பாண்டி கொடுமுடி,திருச்செங்குன்றூர்,திருநணா,திருமுருகன் பூண்டி,திருப்புக்கொளியூர்

சத்தவிடங்கத்தலம் ----- திருவாரூர்,நாகப்பட்டினம்,திருநள்ளாறு,திருமறைக்காடு,திருக்காறாயில்,திருவாய்மூர்,திருக்குவளை

சிரஞ்சீவியார் ----- அசுவத்தாமன்,மாபலி,வாயாசன்,அனுமன்,விபீடணன், மார்க்கண்டன்,பரசிராமன்

சுரம் ----- ச,ரி,க,ம,ப,த,நி

தாதுக்கள் ----- இரதம்,உதிரம்,எலும்பு,தோல்,இறைச்சி,மூளை,சுக்கிலம்

தாளம் ----- துருவம்,மட்டியம்,ரூபகம்,சம்பை,திரிபுடை,அடதாளம்,ஏகதாளம்

தீவு ----- சம்புதீவு,பிலக்ஷத்தீவு,குசத்தீவு,கிரவுஞ்சதீவு,சாகரத்தீவு,சான்மலித்தீவு,புட்கரத்தீவு

நதி ----- கங்கை,யமுனை,சரசுவதி,நருமதை,காவேரி,குமரி,கோதாவரி

நாட்டுக் குற்றம் ------ தொட்டியர்,கள்வர்,யானை,பன்றி,விட்டில்,கிள்ளை,பெருமழை

பதார்த்தம் ----- திரவியம்,குணம்,கருமம்,சாமானியம்,விசேடம்,சமவாயம்,அபாவம்

பாதகம் ----- ஆங்காரம்,உலோபம்,காமம்,பகை,போசனப்பிரியம்,காய்தல்,சோம்பல்

பிறப்பு ----- தேவர்,மக்கள்,விலங்கு,புள்,ஊர்வன,நீர்வாழ்வன்,நிற்பன

புரி ----- அயோத்தி,மதுரை,மாயை,காசி,காஞ்சி,அவந்திகை,துவாரகை

பெண்கள் பருவம் ----- பேதை,பெதும்பை,மங்கை,மடந்தை,அரிவை,தெரிவை பேரிளம்பெண்

மண்டலம் ----- வாயு,வாருணம்,சத்திரன்,சூரியன்,நட்சத்திரம்,அக்கினி,திரிசங்கு

மாதர் ----- அபிராமி,மாயேச்சுவரி,கௌமாரி,நாராயணி,வாரகி,இந்திராணி,காளி

முதலெழுவள்ளல் ----- குமணன்,சகரன்,சகாரன்,செம்பியன்,துந்துமாரி,நளன்,நிருதி

முனிவர் ----- அத்திரி,குச்சன்,கௌதமன்,பிருகு,காசிபன்,அங்கிரா,வசிட்டன்

மேகம் ----- சம்வர்த்தம்,ஆவர்த்தம்,புட்கலாவர்த்தம்,சங்காரித்தம்,துரோணம்,காளமுகில்,நீலவருணம்

வித்தியாதத்துவம் ----- காலம்,நியதி,காலை,வித்தை,இராகம்,புருடன்,மாயை

கருத்துகள்

முனைவர் இரா.குணசீலன் இவ்வாறு கூறியுள்ளார்…
பயனுள்ள தொகுப்பு..........
முனைவர் கல்பனாசேக்கிழார் இவ்வாறு கூறியுள்ளார்…
நன்றி முனைவர் குணா...... அவர்களே
Prapa இவ்வாறு கூறியுள்ளார்…
நம்ம பக்கமும் ஒரு தடவ பார்வைய செலுத்துறது !!!!! நேரம் இல்லன்ன பிரச்னை இல்ல விடுங்க பிறகு ஆறுதலாக் வாங்க, அனுமதி இலவசம் ,,,கதவுகள் பூட்டப்படுவதே இல்ல.
முனைவர் கல்பனாசேக்கிழார் இவ்வாறு கூறியுள்ளார்…
வாங்க பிரபா உங்கள் வருகைக்கு நன்றி.........அடிக்கடி வாங்க.......
butterfly Surya இவ்வாறு கூறியுள்ளார்…
மிகவும் மிகவும் ரசிக்கதக்க பயனுள்ள தொகுப்புகள்.

பகிர்விற்கு நன்றிகள் கல்பனா.
முனைவர் கல்பனாசேக்கிழார் இவ்வாறு கூறியுள்ளார்…
வருகைக்கு நன்றிகள் வண்ணத்துப்பூச்சியாரே.......
சுப.நற்குணன்,மலேசியா. இவ்வாறு கூறியுள்ளார்…
முனைவர் அவர்களே,

ஏழு தொகைச்சொற்கள்
எல்லாமே இனியச் சொற்கள்
எப்படித்தான் பிடிக்கிறீர்களோ
இத்தனை அருஞ்சொற்கள்..?
முனைவர் கல்பனாசேக்கிழார் இவ்வாறு கூறியுள்ளார்…
உங்கள வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சுப.ந அவர்களே......அபிதான சிந்தாமணியில் கண்டது....

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

புறநானூற்றில் கல்விச்சிந்தனை

சங்க இலக்கியத்தில் விருந்தோம்பல்

இரண்டாம் ஆண்டு - மூன்றாம் பருவம்