கூந்தலின் வகை...
பெண்கள் கூந்தலுக்கு ஐம்பால் என்ற பெயருண்டு.காரணம் ஐந்து வகையாக அமைக்கப்படுதலின் என்று கூறுவர்.
அவை குழல்,அளகம்,கொண்டை,பனிச்சை,துஞ்சை எனப்படும்.
சங்க இலக்கியத்தில் 'துஞ்சை' என்பதைத் தவிர பிற நான்கு வகையும் இடம் பெற்றுள்ளன.
குழல் என்பது ஆண்,பெண் இருபாலரின் முடியையும் குறிக்கும்.
குஞ்சி,கோதை,கதுப்பு,கூந்தல்,ஓதி,பின்,பித்தை என்ற சொல்லாட்சிகளும் சங்க இலக்கியத்தில் காணப்பெறுகின்றன.
இவற்றுள் ஓரி,பித்தை,குஞ்சி என்பன் ஆடவரின் முடியைக் குறிக்க வருகின்றன.
கருத்துகள்