கள்ளின் வகை......


சங்க நூற்பாடல்களில் பல வகையான கள்வகைகள் காணப்பெறுகின்றன.அக்கால மக்களின் வாழ்க்கையில் மது உண்டு களித்தல் எனபது இயல்பாக இருந்துள்ளது.
கள்ளினைத் தேறல்,நறவு,தோப்பி,அரியல்,வேரி,காந்தாரம்,மட்டு,பிழி எனப் பல்வேறு பெயர்களால் வழங்கியுள்ளனர்.இவற்றுள் சிறுசிறு வேறுபாடு உண்டு.

கள்ளில் தெளிந்து காணப்பெறுவதைத் தேறல் என்று குறிப்பிட்டுள்ளனர்.

நெல்லில் இருந்து தயாரிக்கப்படும் ஒருவகை கள்ளின் பெயர் நறவு என்றும் தோப்பி என்றும் வழங்கப்பெற்றுள்ளது.

நெற்சோற்றினில் இருந்து இறக்கப்படும் ஒருவகை கள் அரியல்.இதற்கு தேன் என்றும் பொருள் உண்டு.

மூங்கிற் குழாயில் ஊற்றி நிலத்தில் புதைத்து வைத்து முதிரச்செய்தவது மட்டு.

பனை,பலா,தேனிறால் முதலியவற்றில் இருந்து பிழுந்து எடுப்பது பிழி.

கருத்துகள்

தமிழ் அமுதன் இவ்வாறு கூறியுள்ளார்…
ஆஹா !! கள்ளில் இத்தனை வகைகளா ???
முனைவர் இரா.குணசீலன் இவ்வாறு கூறியுள்ளார்…
தேட்கடுப்பன்ன நாட்படு தேறலை ஆடவரும் பெண்டிரும் விரும்பி அருந்திய காலம் சங்க காலம் .. இப்பதிவைப் படித்தவுடன்

சிறியகட் பெறினே எமக்கீயும்;மன்னே
பெரியகட் பெறினே
யாம் பாடத் தான் மகிழ்ந்து உண்ணும் மன்னே...”

என்னும் புறநானூற்றுப்பாடல்தான் நினைவுக்கு வந்தது..

பழஞ்சொற்களை மீட்டுருவாக்கம் செய்யும் பதிவு.. தொடர்க.
முனைவர் கல்பனாசேக்கிழார் இவ்வாறு கூறியுள்ளார்…
நன்றி ஜீவன் அவர்களே........
முனைவர் கல்பனாசேக்கிழார் இவ்வாறு கூறியுள்ளார்…
உணமைதான் குணா மட்டு நீக்கி மதுவருந்தியும்....பட்டு நீக்கி துகிலுடுத்தியும்.... என்ற பாடலும் பெண்கள் உண்டு களித்த்தைக் கூறுகின்றது.
ஆ.ஞானசேகரன் இவ்வாறு கூறியுள்ளார்…
ஓஓ.. கள்ளை பற்றியும் கலக்கல் விளக்கம்
முனைவர் கல்பனாசேக்கிழார் இவ்வாறு கூறியுள்ளார்…
நன்றி சேகரன்.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

புறநானூற்றில் கல்விச்சிந்தனை

சங்க இலக்கியத்தில் விருந்தோம்பல்

இரண்டாம் ஆண்டு - மூன்றாம் பருவம்