காதற்காமம்

காதற் காமம் என்ற சொல்லாட்சி சங்க இலக்கியத்தில் காணப்பெறுகின்றது. இச் சொல் முன்பு உணர்த்திய பொருள் மறைந்து ,இப்பொழுது இழிந்த பொருளில் வழங்கப்பெறுகின்றது. காதல் என்பது உள்ளத்தைப் பொருத்தது.காமம் என்பது உடலைப் பொறுத்தது. உள்ளப் புணர்ச்சியில்லா மெய்யுறு புணர்ச்சியும்,மெய்யுறு புணர்ச்சி இல்லா உள்ளப் புணர்ச்சியும் அத்துணை சிறவா.உள்ளப் புணர்ச்சியையும் மெய்யுறு புணர்ச்சியையும் ஒருங்கே இணைத்துக் கூறும் ஒருசொல் தமிழில் இல்லை.அவ்விரு புணர்ச்சியையும் சுட்டக் குன்றம் பூதனார் காதற் காமம் என்னும் புதுச் சொல்லைப் படைத்துள்ளார் எனத் தமிழ்கா காதல் என்னும் நூலில் செம்மல் வ.சுப.மாணிக்கனார் கூறுகின்றார். அச்சொல்லுக்கு மனமொத்துப் புணர்தல் என்பது பொருள்

காதற் காமம் காமத்துச் சிறந்தது
விருப்போ ரொத்து மெய்யுறு புணர்ச்சி.(பரிபாடல்,9)

கருத்துகள்

ஆ.ஞானசேகரன் இவ்வாறு கூறியுள்ளார்…
///அவ்விரு புணர்ச்சியையும் சுட்டக் குன்றம் பூதனார் காதற் காமம் என்னும் புதுச் சொல்லைப் படைத்துள்ளார் எனத் தமிழ்கா காதல் என்னும் நூலில் செம்மல் வ.சுப.மாணிக்கனார் கூறுகின்றார். அச்சொல்லுக்கு மனமொத்துப் புணர்தல் என்பது பொருள்///


ஓஒ.... சரியாதான் இருக்கும்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

புறநானூற்றில் கல்விச்சிந்தனை

சங்க இலக்கியத்தில் விருந்தோம்பல்

இரண்டாம் ஆண்டு - மூன்றாம் பருவம்