பூவின் பல நிலைகள்.......


பேதை பெதும்பை,மங்கை ,மடந்தை,அரிவை,தெரிவை பேரிளம்பெண், என்று பெண்களுக்கு ஒவ்வொரு நிலையும் இருப்பது போல,பூவுக்கு ஒவ்வொரு நிலை உண்டு.

அரும்பு,போது,மலர்,வீ,செம்மல்

அரும்பு என்பது பூவின் தொடக்க நிலையைக் குறிக்கும்.

போது என்பது பூ மலர்வதுக்கு முன் உள்ள நிலையினைக் குறிக்கும்.

மலர் என்பது பூவின் விரிந்த நிலையினைக் குறிக்கும்.

மலர்ந்த பின் செடியில் இருந்து பூக்கள் உதிரும் நிலையினைக் குறிப்பது வீ .

கீழே உதிர்ந்த பூ மணம் பரப்பிக் கொண்டு இருப்பது செம்மல் எனப்படும்.

கருத்துகள்

ஆ.ஞானசேகரன் இவ்வாறு கூறியுள்ளார்…
நல்ல பகிர்வு,.. மிக்க நன்றிங்க
சுபானு இவ்வாறு கூறியுள்ளார்…
நான் இதுவரை அறிந்திருந்தது அரும்பு மற்றும் மலர். நன்றி. புதியதகலைத் தந்தமைக்கு..
முனைவர் கல்பனாசேக்கிழார் இவ்வாறு கூறியுள்ளார்…
நன்றி சேகரன்........
முனைவர் கல்பனாசேக்கிழார் இவ்வாறு கூறியுள்ளார்…
நன்றி சுபானு.......
ச.முத்துவேல் இவ்வாறு கூறியுள்ளார்…
நறுமுகை?

உங்கள் வலைப்பூ மிகவும் பயனுள்ள,தமிழ்ப்பணியாற்றும், வலைப்பூ. பாராட்டுகளும் , நன்றியும்
Unknown இவ்வாறு கூறியுள்ளார்…
மொட்டு என்பது தமிழ் இல்லையா?

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

புறநானூற்றில் கல்விச்சிந்தனை

சங்க இலக்கியத்தில் விருந்தோம்பல்

வாழ்வியல் அறம்