மலையின் வகை.......
சங்க இலக்கியப் பாடல்களில் இயற்கையைப் பற்றிய வருணனை பெருமளவில் காணக்கிடக்கின்றன.இவ்வருணனைகளில் குறிஞ்சி நிலப்பகுதியான மலையைப் பற்றிய வருணனையும் இடம் பெற்றுள்ளது.நம் முன்னோர் மலையின் தோற்றத்திற்கு ஏற்ப ஒவ்வொரு பெயரினை இட்டு மகிழ்ந்து பயன்பாட்டில் பயன்படுத்தியுள்ளனர்.
அடுக்கம்,குன்று ,ஓங்கல்,வெற்பு,சிலம்பு,கல்,வரை எனப் பல பெயர்கள் வழங்கப்பெற்றாலும் இவற்றிற்கு இடையே சிறுசிறு வேறுபாடு உண்டு.
அடுக்கம் என்பது மலை பக்கத்தைக் குறிக்கும்.அதாவது அடுக்கம் போன்று தோன்றும் பகுதியைக் குறிக்கும்.
குன்று என்பது குறுகிய மலையைக் குறிக்கும்.குறு என்பது மெல்லின னகரம் பெற்று குன்று ஆயிற்று என்பர்.
ஓங்கல் என்பது ஓங்கிய மலையினைக் குறிக்கும்.
வெற்பு என்பது மிகு உயர்ந்து பிற மலைகளை வென்று நிற்பது.பல மலைகள் சூழ்ந்திருக்கும் போது ஒரு மலை மட்டும் உயர்ந்து காணப்பெறுவது.
சிலம்பு என்பது மலையில் எதிரொலி கேட்கும் பகுதியைக் குறிக்கும்.
கல் என்பது கற்கள் அதிகம் நிறைந்த மலைப் பகுதியாக இருப்பது.
வரை என்பதற்கு சுவர் போல் நிலத்தை வரையறுக்கும் மலை எனப் பொருள் கூறுவர் பாவாணர்.
மலைக்கு இத்தனைச் சொற்களை நம் முன்னோர் பயன்படுத்தியிருக்க நாம் இன்று மலை என்ற ஒரு சொல்லினை மட்டுமே பயன்படுத்தி வருகிறோம்.
கருத்துகள்
இன்னும் பல சங்க இலக்கியத்தில் இடம் பெற்றுள்ள சொற்களைப் பயன்பாட்டுக்குக் கொண்டு வாருங்கள் முனைவரே...
தேவையான ஒரு பதிவு கொடுத்தீர்கள்..... வாழ்த்துக்கள்.....
பற்றி
மணியான
செய்திபடித்து
மலைத்தேன்..!
நன்றி முனைவருக்கு.
மலைகளில் இத்தனை வகையா ?
என்னே தமிழின் சிறப்பு ... நமக்கெல்லாம் பெரும் வியப்பு