அம்பல் அலர்
அம்பல் அலர் கௌவை என்ற சொல்லாட்சிகள் சங்க இலக்கியங்களில் காணப்பெறுகின்றன.திருக்குறளில் திருவள்ளுவர் அலரறிவுறுத்தல் என்ற அதிகாரத்தைப் படைத்துள்ளார்.சரி அம்பல் அலர் என்றால் என்ன என்று பார்த்தோம் என்றால் தலைவன் தலைவி காதல் கொண்டு ஒழுகும் செய்தி சிலருக்கு மட்டும் தெரிந்தால் அது அம்பல் எனப்படும்.பலர் அறிந்தால் அதற்கு பெயர் அலர் எனப்படும்.இப்பொழுது கூறுகின்றோமே கிசுகிசு என்று அதைதான் முன்பு அம்பல் அலர் என்று பிரித்துக் கூறியிருக்கின்றார்கள்.
அதாவது அம்பல் என்பது மொட்டு நிலை என்றும் அலர் என்பதை மலர்ந்த நிலை என்றும் கூறலாம்.காதல் எப்பொழுது அம்பலாக மாறுகிறதோ அப்பொழுது அது நன்மையில் முடியும் என்ற கருத்தும் பண்டு இருந்துள்ளது.
அம்பலுக்கு உவமை கூறும் போது ஒலி குறைவாக கேட்க கூடிய கோழி,நாரை போன்றவற்றின் சத்ததையும் ,அலருக்கு உவமை கூறுமிடத்து எங்கும் பரவிகாணக்கூடிய சூரியனின் ஒளி,காட்டுத்தீ,அதிர்ந்து கேட்க கூடிய முரசின் ஒலி,களிற்றின் ஆரவாரம்,வீரர்கள் ஆரவாரம்,அருவியின் ஓசை,பறையோசை,போர்கள் ஆரவாரம் போன்றவற்றை உவமையாக கூறுவதாலும் அம்பல் என்பது சிலர் அறிந்த செய்தியாகவும் அலர் என்பது பலர் அறியக்கூடிய செய்தியாகவும் சங்க இலக்கியத்தில் ஆட்சிப்பெற்றுளதை அறியலாம்.நம்முன்னோரின் சொல்லாட்சித்திறத்தையும் எண்ணி வியக்கலாம்.
கருத்துகள்
நல்ல பகிர்வுக்கு நன்றி
விளக்கத்துக்கு ஏற்ற படம்!
அழகு.!
நாகப்பட்டினம் மாவட்டத்தில் பூந்தோட்டம் எனும் ஊருக்கு அருகில் உள்ள அழகிய கிராமத்தின் பெயர் அம்பல்.
திருஅம்பர் என்பது தான் பின்னர் மருவி அம்பல் எனும் பெயராயிற்று.
இங்கு அழகிய பழம் பெரும் சிவன் கோயில் உள்ளது. சம்பந்தர் பாடல் பெற்றது.
இவ்வூரில் நா.தண்டபாணி எனும் தமிழாசிரியர் தமிழ் தொண்டாற்றி வருகிறார்.
முருகன் சுப்பராயன்
நன்றிகளுடன் வாழ்த்துக்கள்..
நன்றிகளுடன் வாழ்த்துக்கள்..