தொகைச்சொற்கள்.

ஐந்து எண்ணிக்கையில் அமைந்த தொகைச்சொற்கள்........

அக்கினி ----- இராகம்,கோபம்,காமம்,சடம்,தீபம்,

அகிற்கூட்டு ----- சந்தனம்,கருப்பூரம்,எரிகாசு,தேன்,ஏலம்

அங்கம் ----- திதி,வாரம்,நட்சத்திரம்,யோகம்,கரணம்

அரசர்க்குழு ----- மந்திரியர்,புரோகிதர்,சேனாதிபதியார்,தூதர்,சாரணர்

அரசர்க்குறுதிச்சுற்றம் ----- நட்பாளர்,அந்தணர்,மடைத்தொழில்,மருந்துவக் கலைஞர்,நிமித்திகர்

அவத்தை ------ சாக்கிரம்,சொப்பனம்,சுழுத்தி,துரியம்,துரியாதீதம்

அன்னுவயவிலக்கணம் ---- விசேடம்,விசேடியம்,கருத்தா,கருமம்,கிரியை

இலக்கணம் ----- எழுத்து,சொல்,பொருள்,யாப்பு,அணி

இலிங்கம் ----- பிருதிவிலிங்கம்-காஞ்சி,அப்புலிங்கம் - திருவானைக்கா,
தேயுலிங்கம் -திருவண்ணாமலை,வாயுலிங்கம் - சீகாளத்தி,ஆகாயலிங்கம் - சிதம்பரம்

ஈசுரன்முகம் ----- ஈயானம்,தற்புருடம்,அகோரம்,வாமம்,சத்தியோசாதம்

உரைஇலக்கணம் ----- பதம்,பதப்பொருள்,வாக்கியம்,வினா,விடை

உலோகம் ----- பொன்,வெள்ளி,செம்பு,இரும்பு,ஈயம்

எழுத்தானம் ----- பாலன்,குமரன்,அரசன்,விருத்தன்,மரணம்

ஐங்காயம் ----- கடுகு,ஓமம்,வெந்தயம்,உள்ளி,பெருங்காயம்

ஐங்காரம் ----- சீனக்காரம்,வெங்காரம்,பொரிகாரம்,சௌக்காரம்,நவச்சாரம்

ஐம்புலநுகர்ச்சியில் இறப்பன ----- மீன்,வண்டு,யானை,அசுணம்,விட்டில்

கனி ----- எலும்பிச்சை,நாரத்தை,மாதுளை,தமரத்தை,குளஞ்சி

கன்னிகை ----- அகலிகை,திரௌபதி,சீதை,தாரை,மண்டோதரி

குரவர் ----- அரசன்,உபாத்தியாயன்,தந்தை,தேசிகன்,மூத்தோன்

குற்றம் ----- கொட்டாவி,நெட்டை,குறுறுப்பு,மூச்சிடல்,அலமால்

கேள்வி ----- அறம்,பொருள்,இன்பம்,வீடு,வழிநிற்றல்

கைத்தொழில் ----- எண்ணல்,எழுதல்,இலைகிள்ளல்,பூத்தொடுத்திடல்,யாழ்வருடல்

சத்தி ----- பராசத்தி,ஆதிசத்தி,இச்சாசத்தி,ஞானசத்தி,கிரியாசத்தி

சுத்தி ----- ஆன்மசுத்தி,தானசுத்தி,திரவியசுத்தி,மந்திரசுத்தி,இலிங்கசுத்தி

திராவிடம் ----- துளுவம்,மாந்திரம்,கன்னடம்,மகாராட்டிரம்,கூர்ச்சரம்

திருவியம் உண்டாமிடம் ----- மலை,காடு,நாடு,நகர்,நகர்,கடல்

திருமால் ஆயுதம் ----- சக்கரம்,தனு,வாள்,தண்டு,சங்கம்

துரகதி ----- மல்லகதி,மயூரகதி,வியாக்கிரகதி,வானரகதி,இடபகதி

தூபம் ----- பச்சைக்கருப்பூரம்,குந்துருக்கம்,காரகில்,சந்தனம்,சீதாரி

தேவர் ----- பிரமன்,விட்டுணு,உருத்திரன்,மகேசுரன்,சதாசிவன்

பஞ்சமூல்ம ----- செவ்வியம்,சித்திரமூலம்,கண்டுபாரங்கி,பேரரத்தை,சுக்கு

பட்சி ----- வல்லூறு,ஆச்தை,காகம்,கோழி,மயில்

புலன் ----- சுவை,ஒளி,ஊறு,ஓசை,நாற்றம்

மயிர்ப்பால் ----- முடி,கொண்டை,சுருள்,குழல்,பனிச்சை

மன்றம் ----- வெள்ளிடை மன்றம்,இலஞ்சி மன்றம்,கன்னின்ற மன்றம்,பூதசதுக்கம்,பாவைமன்றம்

யாகம் ----- பிரமம்,தெய்வம்,பூதம்,பிதிர்,மானுடம்

வண்ணம் ----- வெண்மை,கர்மை,செம்மை,பசுமை

வாசம் ----- இலவங்கம்,ஏலம்,கருப்பூரம்,சாதிக்காய்,தக்கோலம்

விரை ----- கோட்டம்,துருக்கம்,தகரம்,அகில்,சந்தனம்

வினா ----- அறியான் வினா,அறிவு ஒப்புக்காண்டல்,அறிவுஒப்புக்

காண்டல்,ஐயமறுத்தல்,அறிவுகோண்டல்,மெய்யவற்குக் காட்டல்

கருத்துகள்

சுப.நற்குணன்,மலேசியா. இவ்வாறு கூறியுள்ளார்…
முனைவர் அவர்களே
முத்தான வணக்கம்.

கண்டு
கேட்டு
உண்டு
உயிர்த்து
உற்றறியும்
ஐம்புலனும்..
ஐந்தென்னும்
தொகைச்சொற்கண்ணும் உள..!!
முனைவர் கல்பனாசேக்கிழார் இவ்வாறு கூறியுள்ளார்…
உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சுப.ந.அவர்களே......ஆம் உண்டு.......
முனைவர் கல்பனாசேக்கிழார் இவ்வாறு கூறியுள்ளார்…
முனைவர் அவர்களே
முத்தான வணக்கம்.

//கண்டு
கேட்டு
உண்டு
உயிர்த்து
உற்றறியும்
ஐம்புலனும்..
ஐந்தென்னும்
தொகைச்சொற்கண்ணும் உள..!!//


ஐம்புல இன்பம் உள்ளது பாருங்கள்

புலன் ----- சுவை,ஒளி,ஊறு,ஓசை,நாற்றம்
Admin இவ்வாறு கூறியுள்ளார்…
தமிழின் சிறப்புக்களை பதிவிடும் உங்களுக்கு நன்றிகள் வாழ்த்துக்கள்..
சுப.நற்குணன்,மலேசியா. இவ்வாறு கூறியுள்ளார்…
>முனைவர் அவர்களே,

//கண்டு
கேட்டு
உண்டு
உயிர்த்து
உற்றறியும்
ஐம்புலனும்..
ஐந்தென்னும்
தொகைச்சொற்கண்ணும் உள..!!//

இது உங்கள் இடுகையை மனதாரப் பாராட்டி எழுதிய வரிகள்.

ஏதோ தங்களுக்கு நினைவூட்டியதாக அன்புகூர்ந்து நினைத்துவிட வேண்டாம். அப்படி ஓர் உணர்வை எனது மறுமொழி ஏற்படுத்தியிருந்தால் மன்னிக்க வேண்டுகிறேன்.
Ezhilan இவ்வாறு கூறியுள்ளார்…
விரிவான தொகைச் சொற்கள் தொகுப்பு நன்றாக உள்ளது.
ஆ.ஞானசேகரன் இவ்வாறு கூறியுள்ளார்…
நன்றாக உள்ளது... நல்ல தொகுப்புகள்
முனைவர் கல்பனாசேக்கிழார் இவ்வாறு கூறியுள்ளார்…
உங்கள் வருகைக்கு நன்றி சந்ரு.....
முனைவர் கல்பனாசேக்கிழார் இவ்வாறு கூறியுள்ளார்…
நான் அப்படி எண்ணவில்லை சுப.ந அவர்களே........உள்ளது என்றுதான் கூறினேன்.இதற்கு எதற்கு மன்னிப்பு என்ற வார்த்தைகள் எல்லாம்........
நண்பர்களுக்குள் தேவையில்லை.....
முனைவர் கல்பனாசேக்கிழார் இவ்வாறு கூறியுள்ளார்…
உங்கள வருகைக்கும் கருத்துக்கும் நன்றி அரசு அவர்களே.........
முனைவர் கல்பனாசேக்கிழார் இவ்வாறு கூறியுள்ளார்…
உங்கள் வருகைக்கு நன்றி சேகரன் அவர்களே........

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

புறநானூற்றில் கல்விச்சிந்தனை

சங்க இலக்கியத்தில் விருந்தோம்பல்

இரண்டாம் ஆண்டு - மூன்றாம் பருவம்