தொகைச்சொற்கள்

இரண்டு எண்ணிக்கையில் இருக்க கூடியது சொற்கள்




இப் பகுதியில் தொகைகளாக வரக்கூடிய சொற்களைத் தொகுத்துக் கொடுக்கின்றேன்.இத்தொகுப்பு அபிதான சிந்தாமணியில் கண்டது.

அயனம் -----உத்தராயனம் , தஷிணாயனம்

அவத்தை ----கேவலாவத்தை , சகளாவத்தை

அறம் ------ இல்லறம், துறவறம்

அயுதவகை -----அத்திரம் , சத்திரம்

ஆன்மா ------சீவான்மா,பரமான்மா

இடம் ------ செய்யிளிடம்,வழக்கிடம்

இதிகாசம் ---- பாரதம்,இராமாயணம்

இருமுதுகுரவர் -----தாய் , தந்தை

இருமை ------- இம்மை , மறுமை

ஈழநாட்டுச் சிவாலயம் ------திருக்கோணமலை,திருக்கேதீச்சரம்

உலகம் ------ இகலோகம் ,பரலோகம்

எச்சம் ------பெயரெச்சம் , வினையெச்சம்

எழுத்து -----உயிரெழுத்து,மெய்யெழுத்து

கலை ----- சூரியகலை,சந்திர கலை

கந்தம் -----நற்கந்தம்,துர்கந்தம்

கற்பம் ----- பதுமகற்பம் , சுவேதவாரக கற்பம்

கிரகணம் ----- சூரியகிரகணம் , சந்திர கிரகணம்

கூத்து ------- தேசி , மார்க்கம்

சம்பாஷணை ----- வினா , விடை

சவுக்கியம் ------ இகலோக சவுக்கியம் ,பரலோக சவுக்கியம்

சாமானியம் ------ பரம் ,அபரம்

சுடர் ------- சூரியன் , சந்திரன்

ஞானம் ------ பரோக்ஷம் , அபரோக்ஷம்

திணை ------ உயர்திணை , அஃறிணை

தோற்றம் -------சரம் ,அசரம்

பக்கம் ------- சுக்கிலம் ,கிருட்டினம்

பஞ்சாங்கம் --------- வாக்கியம் , சித்தாந்தம்

பாகம் ----------இடப்பாகம், வலப்பாகம்(வாம்பாகம் , தக்ஷணபாகம்)

புடம் ------ சூரியபுடம்,அக்கினிபுடம்

போது ------- பகல் , இரவு

மரபு ------ தந்தை மரபு, தாய்மரபு

வினை -----நல்வினை , தீவினை

வைணவவாகமம் --------வைகானஸம், பாஞ்சராத்திரம்

கருத்துகள்

Admin இவ்வாறு கூறியுள்ளார்…
நல்லதொரு தொகுப்பு.... பகிர்வுக்கு நன்றிகள்...
முனைவர் கல்பனாசேக்கிழார் இவ்வாறு கூறியுள்ளார்…
நன்றி சந்ரு.........
ஆ.ஞானசேகரன் இவ்வாறு கூறியுள்ளார்…
ஓஓஓ... நல்ல தொகுப்புங்க
முனைவர் கல்பனாசேக்கிழார் இவ்வாறு கூறியுள்ளார்…
நன்றி ஞானசேகரன் அவர்களே..........
சப்ராஸ் அபூ பக்கர் இவ்வாறு கூறியுள்ளார்…
அழகாகத் தொகுத்து இருக்கின்றீர்கள்

வாழ்த்துக்கள்.....
முனைவர் கல்பனாசேக்கிழார் இவ்வாறு கூறியுள்ளார்…
வாருங்கள் அபூ உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றிகள்........
முனைவர் கல்பனாசேக்கிழார் இவ்வாறு கூறியுள்ளார்…
இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
சுப.நற்குணன்,மலேசியா. இவ்வாறு கூறியுள்ளார்…
தொகைச்சொற்கள் = வியப்பு + மகிழ்ச்சி
முனைவர் கல்பனாசேக்கிழார் இவ்வாறு கூறியுள்ளார்…
உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சுப.ந.அவர்களே......

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

புறநானூற்றில் கல்விச்சிந்தனை

சங்க இலக்கியத்தில் விருந்தோம்பல்

இரண்டாம் ஆண்டு - மூன்றாம் பருவம்