உள்ளத்திலிருந்து...............


என் மீது விழும்
கடைசித் துளி
உன் துளியாக இருக்கட்டும்

என் தேடலின்
ஆரம்பம் பூக்கிறது
முடிவு உன்னுள் இனிக்கின்றது.

புரியாதவர் கூறுவர்
அடிமை என்று
புரிந்தவர் போற்றுவர்
உயிரடிமை என்று.......

ஆழ்வார் நாயன்மார்
நாயக நாயகியாக
எவ்வாறு குழம்பினேன்
பின்
உன்னை பார்த்தும் தெளிந்தேன்........

நிலா தண்ணிழல் தரும்
நீ........
என் நிழலையும்
அல்லவா
சேர்த்து மகிழ்கிறாய்.........

ஆணில் பாதி
பெண்ணென்று
உணர்ந்தவன் நீயல்லவா.....
அர்த்தநாரீஸ்வரன்......

நான் அடிமைப் படுத்தினேனாம்
அது - உண்மை
எப்படி சாத்தியமானது
குழம்பினார்கள்..........
அன்பினால்
என்றவுடன்
அதிசயித்தார்கள்.........

நீ கேட்டதை நானும்
நான் கேட்டதை நீயும்
கொடுத்தோம்.......
வசமானது வாழ்க்கை.........

யார் சொன்னது
மனைவி அமைவதெல்லாம்
இறைவன் கொடுத்த
வரமென்று......
கணவன் அமைவது
அல்லவா
கடவுள் கொடுத்த வரம்........

கணவன் எனக்
கைபிடித்தேன்
தோழனெனத்
தோள் கொடுத்தாய்.........

கருத்துகள்

முனைவர் இரா.குணசீலன் இவ்வாறு கூறியுள்ளார்…
அட !!!!!!!!!!!!!!!!!!!!11
கவிதையும் வருதே.....
முனைவர் கல்பனாசேக்கிழார் இவ்வாறு கூறியுள்ளார்…
வாங்க குணா ஏதோ.........
Ezhilan இவ்வாறு கூறியுள்ளார்…
நல்ல கருத்துடன் அழகான கவிதை.வாழ்கையை நலமாக மாற்ற, இருவருக்கும் சமமான பங்கு உள்ளது.
முனைவர் கல்பனாசேக்கிழார் இவ்வாறு கூறியுள்ளார்…
//நல்ல கருத்துடன் அழகான கவிதை.வாழ்கையை நலமாக மாற்ற, இருவருக்கும் சமமான பங்கு உள்ளது.//

ஆம் அரசு வாழ்க்கை இருவரும் விட்டுக்கொடுத்துப் போனால் இனிக்கும்.உங்கள் வருகைக்கு நன்றி.
ஆ.ஞானசேகரன் இவ்வாறு கூறியுள்ளார்…
//புரியாதவர் கூறுவர்
அடிமை என்று
புரிந்தவர் போற்றுவர்
உயிரடிமை என்று.......//

உண்மையின் பகிர்வாய் இருக்குங்க
ஆ.ஞானசேகரன் இவ்வாறு கூறியுள்ளார்…
///யார் சொன்னது
மனைவி அமைவதெல்லாம்
இறைவன் கொடுத்த
வரமென்று......
கணவன் அமைவது
அல்லவா
கடவுள் கொடுத்த வரம்........///

உண்மையாகவா சொல்லுகின்றீர்கள்
ஆ.ஞானசேகரன் இவ்வாறு கூறியுள்ளார்…
//கணவன் எனக்
கைபிடித்தேன்
தோழனெனத்
தோள் கொடுத்தாய்.......///

மகிழ்ச்சியில் வாழ்த்துகள்
முனைவர் கல்பனாசேக்கிழார் இவ்வாறு கூறியுள்ளார்…
உங்கள் வருகைக்கும் நன்றி ஞானசேகரன் அவர்களே......... உண்மையைத்தான் கூறுகின்றேன்.
mohamedali jinnah இவ்வாறு கூறியுள்ளார்…
அது ஆண் எழுதிய மொழி அது பழ்சு இது புதுசு ஆனாலும் அருமை. தாருங்கள் புதுமையினை

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

புறநானூற்றில் கல்விச்சிந்தனை

சங்க இலக்கியத்தில் விருந்தோம்பல்

பூவின் பல நிலைகள்.......