சொற்பொருள்

தமிழ் சொற்கள் சில பொருள் ஒன்று என எண்ணுவோம் ஆனால் அவற்றுள் சில வேறுபாடுகள் இருக்கும் என்பதை நாம் அறிவதில்லை.எடுத்துக்காட்டாக

வணங்குதல் ,தொழுதல் என்னும் சொற்களுக்கு பொருள் ஒன்று என எண்ணுவோம்.ஆனால் இரண்டு சொற்களுனுடைய பொருளில் சிறு வேறுபாடு உண்டு.

வணங்குதல் என்பது தலையினுடைய தொழில் என்றும் தொழுதல் என்பது கையினுடையச் செயல் என்றும் கூறப்பெறுகிறது.இதற்கானச் சான்று திருக்குறளில் காணப்பெறுகிறது.

கோளில் பொறியில் குணமிலவே எண்குணத்தான்
தாளை வணங்காத் தலை


இக்குறளில் ‘வணங்கா தலை’ என்ற சொற்களை நோக்கும் போது வணங்குதல் என்பது தலையினுடைய தொழில் எனபதை அறியலாம்.
அதேபோல்

கொல்லான் புலாலை மறுத்தானைக் கைகூப்பி
எல்லா உயிரும் தொழும்
என்ற குறளில் 'கைகூப்பி தொழும்' என்ற சொற்களைப் பார்கும் போது தொழுதல் கையினுடைய செயல் என்பதனை அறியலாம்.இஸ்லாம் மதத்தினர் இறை வழிப்பாட்டினைத் தொழுகை என்று கூறுவதும் இங்கு நினையத் தகும்.

அது போலவே ஐம் புலன் ஐம் பொறி என்பதற்கும் வேறுபாடு உண்டு.
பொறி என்றால் மெய்,வாய்,கண்,மூக்கு, செவி என்ற உறுப்புக்களைக் குறிக்கும்.புலன் என்றால் அதனால் நடக்க்கூடிய செயலினைக் குறிக்கும்.அதாவது உணர்தல் ,சுவைத்தல் ,பார்த்தல்,நுகர்தல்,கேட்டல் ஆகியவற்றைக் குறிக்கும்.
இதனை வள்ளுவப் பெருந்தகை

கண்டுகேட்டு உண்டுயிர்த்து உற்றறியும் ஐம்புலனும்
ஒண்டொடி கண்ணே உள.


புலனுக்கு விளக்கம் தருகின்றார்.

கருத்துகள்

குப்பன்.யாஹூ இவ்வாறு கூறியுள்ளார்…
மிகவும் பயனுள்ள பதிவு.

குப்பன்_யாஹூ
பெயரில்லா இவ்வாறு கூறியுள்ளார்…
அழகான விளக்கம... நன்றி.
முனைவர்.இரா.குணசீலன் இவ்வாறு கூறியுள்ளார்…
நல்ல் விளக்கம்.................
Admin இவ்வாறு கூறியுள்ளார்…
தமிழ் இலக்கியம் கற்பதிலே அதிக ஆர்வம் காட்டும் நான் உங்கள் வலைப்பதிவினை காணக்கிடைத்ததை இட்டு மகிழ்வடைகிறேன். இக்கால கட்டத்தில் தமிழ் இலக்கியங்கள் படிப்பதற்குரிய வழிகள் குறைவு என்றுதான் சொல்ல வேண்டும். அந்தவகையில் உங்கள் பணி பாராட்டப்பட வேண்டியது....

வாழ்த்துக்கள். தொடருங்கள்...
பெயரில்லா இவ்வாறு கூறியுள்ளார்…
நாளை பத்து மணியளவில் வலைச்சரம் வாருங்கள்.....
குப்பன்.யாஹூ இவ்வாறு கூறியுள்ளார்…
பயனுள்ள பதிவு, நன்றிகள்

குப்பன்_யாஹூ
ஆ.ஞானசேகரன் இவ்வாறு கூறியுள்ளார்…
சிறப்பான விளக்கதுடன் சொல்லியது அருமை. அறிந்துகொண்டேன் நன்றிங்க
குப்பன்.யாஹூ இவ்வாறு கூறியுள்ளார்…
useful post, thanks
"உழவன்" "Uzhavan" இவ்வாறு கூறியுள்ளார்…
ஆகா.. அழகான பதிவு.. வேறுபாடுகளை எடுத்துக்காட்டுகளுடன் சொன்ன விதம் அருமை. பாராட்டுக்கள்.
முனைவர் கல்பனாசேக்கிழார் இவ்வாறு கூறியுள்ளார்…
உங்கள் வருகைக்கு நன்றி குப்பன்.
முனைவர் கல்பனாசேக்கிழார் இவ்வாறு கூறியுள்ளார்…
நன்றி குணா...
முனைவர் கல்பனாசேக்கிழார் இவ்வாறு கூறியுள்ளார்…
நன்றி சந்ரு
முனைவர் கல்பனாசேக்கிழார் இவ்வாறு கூறியுள்ளார்…
உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி உழவன்.
முனைவர் கல்பனாசேக்கிழார் இவ்வாறு கூறியுள்ளார்…
வாங்க தமிழரசி......உங்கள் அழைப்புக்கு நன்றி
அன்புடன் நான் இவ்வாறு கூறியுள்ளார்…
நல்ல...பயனுள்ள இடுகை, புதிதாய் சிந்திக்க வைக்கிறது தொடர்க.
முனைவர் கல்பனாசேக்கிழார் இவ்வாறு கூறியுள்ளார்…
உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி கருணாகரன்
தமிழ் இவ்வாறு கூறியுள்ளார்…
நல்ல விளக்கம்

அன்புடன்
திகழ்
குமரன் (Kumaran) இவ்வாறு கூறியுள்ளார்…
அருமையான விளக்கம். அருமையான எடுத்துக்காட்டுகளாக குறட்பாக்கள். மிகவும் எளிதாக விளக்கியிருக்கிறீர்கள். நன்றி.
முனைவர் கல்பனாசேக்கிழார் இவ்வாறு கூறியுள்ளார்…
வணக்கம் குமரன் உங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் மிக்க நன்றி..........

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

புறநானூற்றில் கல்விச்சிந்தனை

சங்க இலக்கியத்தில் விருந்தோம்பல்

பூவின் பல நிலைகள்.......