வள்ளலார் வழியில்






நேற்று (17-6-2009)மதுரை சென்று வந்தேன்.அங்கு பேராசிரியர் எம்.ஏ.சுசீலா அம்மா அவர்களையும்,எழுத்தாளர் வேல இராமமூர்த்தி அவர்களையும் சந்தித்து வந்தேன்.எழுத்தாளர் அவர்களின் வீடு அவனியாபுரத்தில் இருந்து,அங்கிருந்து மூன்று கிலோ மீட்டர் தூரத்தில் தான் திருப்பரங்குன்றம் இருந்து.அங்கு சென்று வரலாம் என வேலா இராமமூர்த்தி அவர்கள் கூறினார்கள்.சென்று வந்தோம்.அங்கு நான் கண்ட காட்சி என்னை மெய்சிலிர்க்கவைத்தது.13 ஆண்டுகளாக பாண்டியராசன் என்னும் அன்பர் செயலை எண்ணி மகிழ்ந்து,வியந்து போனேன்.திருப்பரங்குன்றத்தின் பின்புறமுள்ள குகைக்கோவில் சில ஆண்டுகளுக்கு முன் வரை பொதுமக்கள் செல்ல முடியாத அளவுக்கு தீயர்களின் கூடாரமாக விளங்கியுள்ளது.



அந்நிலையை மாற்றி, மக்கள் வந்து செல்லகூடிய இடமாக மாற்றியதில் இவருக்குப் பெரும் பங்கு உள்ளது என்று கூறலாம்.அந்த பகுதியில் கடுமையான பஞ்சம் ஏற்பட்டபொழுது அங்குள்ள குரங்குகள் மயில்கள் போன்ற உயிரினங்கள் உணவில்லாமல் வருந்தும் நிலை ஏற்பட்டுள்ளது.குரங்குகள் எல்லாம் நகரை நோக்கி செல்ல ஆரம்பித்துள்ளன.




இந்நிலைக்கு வருந்திய பாண்டியராசன் அவர்கள் ஒவ்வொரு நாளும் மாலை ஐந்து மணிபோல் அங்குள்ள குரங்குகளுக்கு வாழைப்பழமும்,மயில்களுக்கு அரிசியும் வழங்க வேண்டுமென முடிவு செய்து அன்றிலிருந்து அதனைச் செயல்படுத்தியும் வருகின்றார்.அவர் வரவை எதிர்பார்த்து குரங்குகள் காத்திருக்கின்றன. ஒவ்வொருநாளும் மாலையில் பத்து வாழைத்தார் ,5கிலோ அரிசி கொண்டு வந்து குரங்குகளுக்கும் மயில்களுக்கும் வழங்கி வருகின்றார்.இப்பொருளை ஏற்றி வருதற்கு அவர் ஒரு ஆட்டோவும் வாங்கியுள்ளார்.

இதனோடு அந்த பகுதியில் உள்ள ஆலமரங்கள் எல்லாம் விழுதுவிட்ட செழித்து வளர விழுதுகள் தரையில் இறங்குவதற்கு குழாய்கள் அமைத்துள்ளார்.

அறிவினால் ஆகுவ துண்டோ பிறிதின்நோய்
தந்நோய்போல் போற்றாக் கடை
என்னும் குறளின் பொருளினை அறிந்து,தன் வாழ்க்கையின் கடமையாக எண்ணி ,கடைப்பிடித்து வாழ்ந்து வருகின்றார்.

கருத்துகள்

சுபானு இவ்வாறு கூறியுள்ளார்…
//இந்நிலைக்கு வருந்திய பாண்டியராசன் அவர்கள் ஒவ்வொரு நாளும் மாலை ஐந்து மணிபோல் அங்குள்ள குரங்குகளுக்கு வாழைப்பழமும்,மயில்களுக்கு அரிசியும் வழங்க வேண்டுமென முடிவு செய்து அன்றிலிருந்து அதனைச் செயல்படுத்தியும் வருகின்றார்.

நல்ல மனம் படைத்தவர் அவர். நாமெல்லாம் எம்மைச் சுற்றியுள்ளவர்களது துக்கங்களைளிலும் துயரங்களிலும் பங்குகொள்ளவே மிகக் குறைவு.. ஆனால் அந்த மனிதர்.. நாமெங்கே.. அவர் எங்கே..!
முனைவர் இரா.குணசீலன் இவ்வாறு கூறியுள்ளார்…
இதுபோல எத்தைனையோ பேர் தன்னலம் கருதாது வாழ்ந்து வருகிறார்கள்.......
அவரின் செயல் மிகுந்த மகிழ்வளிப்பதாகவுள்ளது.
சிவத்தமிழோன் இவ்வாறு கூறியுள்ளார்…
"தொல் உலகில்
நல்லார் ஒருவர் உளரேல் அவர்பொருட்டு
எல்லார்க்கும் பெய்யும் மழை" என்று ஔவையார் மூதுரையில் சொன்னது எவ்வளவு உண்மை. இத்தகைய அன்புள்ளம் கொண்டவர்கள் இப்புவியில் வாழ்வதால்த்தான் மழையை நாம் பெறக்கூடியதாகவுள்ளது.

எல்லாம் திருவருட் சம்மதம்.
கலையரசன் இவ்வாறு கூறியுள்ளார்…
வாழ்த்துகள்,

உங்களின் இந்த பதிவு யூத்புல் விகடனில் வெளிவந்துள்ளது...
ஆ.ஞானசேகரன் இவ்வாறு கூறியுள்ளார்…
நல்ல பகிர்வு, மகிழ்வை தருகின்றது.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

புறநானூற்றில் கல்விச்சிந்தனை

சங்க இலக்கியத்தில் விருந்தோம்பல்

பூவின் பல நிலைகள்.......