சிந்தனைகள்

தனது தாய்மொழியைச் செம்மையாகப் பயன்படுத்த தெரியாத எவனுக்கும் பிறமொழியில் நல்ல தேர்ச்சி வராது.---------பெர்னார்ட் ஷா

பரந்த கற்பனைவளம்,எல்லாப் பொருள்களிலும் ஊடுருவும் பேராற்றல் இவை இல்லாதவனும் இலக்கியமே படிக்காத எந்த எழுத்தாளனும் காலத்தால் சாகாத இலக்கியத்தைப் படைக்க முடியாது.--------காண்டேக்கர்

எந்நேரமும் தொழில் பணி என்று இராமல் ஒரு நாளைக்குக் கொஞ்ச நேரமாவது வீட்டில் குழந்தைகளுடன் இருப்பதுதான் மகிழ்ச்சியான வாழ்க்கை.-------சாகர்.

உண்மையான நல்ல மனிதர்களை ஏன் பார்க்க முடியவில்லை என்றால் எல்லோரும் அந்த வேடத்தைப் போட்டுக் கொண்டிருப்பதால் தான்.------------ஹிலே

உயர்ந்த குடியில் பிறந்த எவன் தன்னிடம் வரக்கூடிய பழிக்கு அஞ்சுகிறானோ அவனைத் தேடிப் பொருள் கொடுத்தாவது நட்புக்கொள்.-------திருவள்ளுவர்

அறிவுள்ள மனிதர்களோடு உரையாடு.அறிவில்லாத மனிதர்களோடு உறவாடு.அனால் பண்பில்லாதவரைக் கண்டால் ஒதுங்கிவிடு.----------லயட்கரின்

கருத்துகள்

சுபானு இவ்வாறு கூறியுள்ளார்…
நல்ல பயனுள்ள பதிவு... :)
முனைவர் கல்பனாசேக்கிழார் இவ்வாறு கூறியுள்ளார்…
நன்றி சுபானு.
முனைவர் இரா.குணசீலன் இவ்வாறு கூறியுள்ளார்…
நல்ல சிந்தனைகள்...
ஆ.ஞானசேகரன் இவ்வாறு கூறியுள்ளார்…
//தனது தாய்மொழியைச் செம்மையாகப் பயன்படுத்த தெரியாத எவனுக்கும் பிறமொழியில் நல்ல தேர்ச்சி வராது.-//

ஆம்ம்....

மேலும் நல்ல பதிவு

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

புறநானூற்றில் கல்விச்சிந்தனை

சங்க இலக்கியத்தில் விருந்தோம்பல்

பூவின் பல நிலைகள்.......