தஞ்சையிலிருந்து சிதம்பரம் வரை
இன்று காலை மறக்கமுடியாத நாள். கடந்த பத்து நாள்களாக எங்கள் கல்லூரி காலவரையறை யற்ற விடுமுறை அறிவித்திருந்து.அதனால் என் சொந்த மண் தஞ்சைக்குச் சென்றிருந்தேன். கல்லூரி திங்கள் அதாவது இன்று திறப்பதாக அறிவித்து இருந்த செய்தி அறிந்து,நண்பர் ஒருவரிடம் இன்று விடுப்பு எடுத்துக்கொள்ளலாமா என்று கேட்டேன் . எடுக்கலாம் என்றார். எங்களூரில் எங்கள் அப்பா 25 ஆண்டுகளுக்கு முன் கட்டிய உத்திராபதியார் கோவில் கும்பாபிஷேகம் அதனால் விடுப்பு எடுக்கலாம் என்று இருந்தேன்.அதோடு மட்டுமல்ல நான் புகுந்த ஊரிலும் மாலையில் 40 ஆண்டுகள் கழித்து திரௌபதி அம்மனுக்கு தீமிதி திருவிழா இரண்டிலும் கலந்துகொள்ளவேண்டுமென எண்ணி விடுப்பு எடுக்கலாம் என்று இருந்தேன்.
இன்று காலை தங்கை வீட்டிலிருந்து அவள் குழந்தைகள் அனைவரும் அம்மா வீட்டிற்குச் சென்று கும்பாபிஷேகத்தில் கலந்து கொண்டு பிறகு வயலூர் வரலாம் என்று திட்டமிட்டிருந்தோம்.சரி கல்லூரிக்கு விடுப்பு சொல்லலாம் என சுமார் 7.30 மணிக்கு எங்கள் துறை அலுவலக ஊழியரைத் தொடர்பு கொண்டேன். அவர் கண்டிப்பாக கல்லூரி வரவேண்டும் பத்து நாள்கள் தொடர்ந்து விடுமுறைவிட்டதால் விடுப்பு எடுக்க கூடாது என்று கூறிவிட்டார். என்ன செய்வது என்று ஒன்றும் புரிவில்லை.என் கணவருரைத் தொடர்பு கொண்டு கேட்டேன் அவரும் அறியவில்லை.தங்கை வீடு தஞ்சை புதிய பேருந்து நிலையம் அருகே . குளிக்கவில்லை கிளம்பவும் இல்லை . ஊரிலோ திருவிழா யாரையும் தொந்தரவு செய்ய விருப்பமில்லை என்ன செய்வது எனச் சிந்தித்தேன் . காரை நானே ஓட்டி செல்வது என முடிவு செய்தேன். தங்கை குழந்தைகளைப் பேருந்தில் அனுப்பி உரத்தநாட்டில் தம்பியைக் மகிழ்வுந்தைக் கொண்டு வந்து அழைத்துக்கொண்டு செல்ல சொல்லலாம் என்று கூறினேன் அவளும் ஒப்புக்கொண்டாள்.அவளிடம் மகிழ்வுந்து வுள்ளது ஆனால் அவள் ஓட்டமாட்டாள்.
கிளம்பி முடிக்க மணி 8 ஆனது. தண்ணீர் மட்டும் குடித்தேன். அம்மாவிடம் தொலைப்பேசியில் பேசி மகிழ்வுந்தை உரத்தநாட்டிற்கு அனுப்பி தங்கையையும் பிள்ளைகளையும் அழைத்துக்கொள் என்று கூறினேன்.அம்மா நீ தனியாக செல்கிறாயே எனப் பயந்தார்கள்.பேசுவதற்கு நேரமில்லை எனக் கூறிவிட்டு,வீட்டை விட்டு 8 மணிக்கு கிளம்பினேன். மகிழ்வுந்தில் தங்கையையும் பிள்ளைகளையும் அழைத்துக்கொண்டு பேருந்து நிலையம் சென்றேன்.பேருந்து ஒன்று தயாராக இருந்து.அதில் ஏற்றிவிட்டு ,பேருந்து கிளம்பியவுடன் புதிய பேருந்து நிலையத்தில் இருந்து கிளம்பினேன். பழைய பேருந்து நிலையம் தாண்டி கேஸ்சும் பெட்ரோலும் நிரப்பிக்கொண்டு கிளம்பினேன் .அப்போது நேரம் 8.10 . சிதம்பரம் வேகமாயச் சென்றால் 2.30 அல்லது 3 மணி நேரத்திற்கு மேலாகும்,பேருந்தில் செல்ல 5 மணி நேரத்திற்கு மேலாகும்.கல்லூரி 10 மணிக்கு .
கிளம்பினேன் மனத்துணிவுடன் தனியாக. வேளையோ காலை அதிகமாக கூட்டம் இருக்கும் சரி பரவாயில்லை சென்றுவிடலாம் என எண்ணினேன். வந்து கொண்டிருந்தேன்
கணவர் அலைபேசியில் அழைத்தார். வயலூர் நான் வரும் வழிதான் ,அங்கு என்னுடை நாத்தனாரின் கணவரை அழைத்துக்கொண்டு வந்து விடச்சொல் என்றார் .அவர் சொல்லும் போது அவ்வூரைத் தாண்டி வந்துவிட்டேன். அய்யம் பேட்டை வரும்போது மணி 8.35.
பாபநாசம் வரும் போது மணி 8.50. கும்பகோணம் புறவழிச் சாலையில் வந்தேன். தம்பி பேசினான் பத்திரமாக செல் என்றான்.சாலைகளில் கூட்டம் அவ்வளவாக இல்லை.வழியில் ஒரு பைக்கில் ஐந்து இளைஞர்கள் அமர்ந்து ஓட்டிக்கொண்டு வந்தார்கள். குறுக்காக புகுந்துவிட்டார்கள் நான் வேகத்தை குறைத்துதால் அவர்கள் பிழைத்தார்கள். ஒரு நொடி தவறியிருந்தாலும் நிலை வேறாக அமைந்திருக்கும்.
இளைய சமுதாத்தை நொந்த படி வந்தேன். கும்பகோணம் தாண்டி வர மணி 9. மகிழ்வுந்தில் ஆளில்லா இடத்தில் 100 80 என்ற வேகத்தில் ஓட்டிக்கொண்டு வந்தேன். 10 மணிக்கு மேலாகிவிடுமே ஒரு மணி நேரம் காலம் கடந்து வர அனுமதி வாங்கலாம் என அலைபேசியில் நண்பரைத் தொடர்பு கொண்டு கூறினேன். இடையே தங்கை சென்றிருப்பாளா என்ற எண்ணம் தோன்ற அவளுடைய அலைபேசிக்குத் தொடர்பு கொண்டேன் கிடைக்கவில்லை.பிறகு வீட்டு எண்ணிற்கு செய்து கேட்டேன் அப்பொழுதுதான் வந்ததாக கூறினார் . அப்பொழு நான் குத்தாலத்தை தாண்டியிருந்தேன். குத்தாலத்தை தாண்டி ஒரு மாடு குறுக்கே வந்து விட்டது அதனை தாண்டி வர 1 நிமிடம் ஆகிவிட்டது.அதனைக் கடந்து மாயவரம் வந்தேன் நேரம் சரியாக 9.45 .
மாயவரத்தில் பேருந்து நிலையம் பழுதுபார்பதால் வேறு இடத்திற்கு மாற்றியிருந்தனர்.அதனால் நான் வரும் வழியில் நிறைய பேருந்துகள் வழிமறித்துக் கிடந்தன.அதனை கடந்து வர ஐந்து நிமிடம் ஆகிவிட்டது. 20 நிமிடதுதல் வைதிஸ்வரன் கோவிலை அடைந்தேன். நேரம் 10 ஐத் தொட்டது .அடுத்து சீர்காழி 10.15 சிதம்பர் வந்து அடைந்தேன் 10.25 க்கு .கையெழுத்திட்டேன் 10.30 மணிக்கு.அதுவரை எனக்கு ஒன்றும் தெரியவில்லை .கொஞ்ச நேரம் மயக்கமாக வருவதுபோல் இருந்து உணவு உட்கொள்ளாததால்.
துறைத்தலைவருடன் தஞ்சையில் நான் சந்தித் தமிழறிஞர்களைப் பற்றி கூறிவிட்டு. என் அறை நோக்கிச் சென்றேன் நேரம் 10.45. வீட்டிலிருந்து பேசியில் அழைப்பு இவ்வளவு வேகமாக சென்று விட்டாயே என அம்மா திட்டினார்கள்.பிறகு ஒவ்வொருவராக அலைபேசியில் தொடர்பு கொண்டு வினவிகொண்டே இருந்தார்கள்.என் கணவர் தோசை வாங்கி வந்து கொடுத்தார் சாப்பிட்டுவிட்டு ,என் முதுகலை மாணவரின் ஆய்வேட்டினைத் திருத்தினேன்.12 மணிக்கு வீட்டிற்கு கிளம்பினேன்.ஓய்வு எடுத்தேன்.
மூன்று முறை தனியாக மகிழ்வுந்தை ஓட்டிக்கொண்டு ஊருக்குச்சென்றுள்ளேன்.இருப்பினும் இவ்வளவு விரைவாக இரண்டு மணி நேரத்தில் வந்ததால் அனைவரும் திட்டி தீர்த்தார்கள். இது ஒரு வேறுபட்ட அனுபவத்தைக் கொடுத்து என்றால் மிகை இல்லை. நமக்கு இக்கட்டான சூழல் வரும் போது துணிந்து முடிவு எடுக்க வேண்டும் . நாமும் குழம்பி பிறரையும் குழப்ப கூடாது.
எண்ணிய முடிதல் வேண்டும்
நல்லனவே எண்ணல் வேண்டும்
திண்ணிய நெஞ்சம் வேண்டும்
தெளிந்த நல்லறிவு வேண்டும் வேண்டும்.

கருத்துகள்
நல்லனவே எண்ணல் வேண்டும்
திண்ணிய நெஞ்சம் வேண்டும்
தெளிந்த நல்லறிவு வேண்டும் வேண்டும்.//
துணிவுக்கு வாழ்த்துக்கள்