பழமொழி-அதிகாரம்

௧. அதிகாரி வீட்டு கோழிமுட்டை குடியானவன் வீட்டு அம்மியையும் உடைக்கும்

௨. தேளுக்கு மணியம் கொடுத்தால் நிமிஷத்துக்கு நிமிஷம் கொட்டும்

௩. மாமியார் உடைத்தால் மண்குடம் ,மருமகள் உடைச்சா பொன்குடம்

௪. வழியே போய் வழியே வந்தால் அதிகாரி செஙெகோல் என்ன செய்யும்.

௫. ஐயர் இடம் கொடுத்தாலும் அடியார் இடம் கொடார்கள்.

௬. அம்மான் வீட்டு வெள்ளாட்டியை வடிக்க அதிகாரியைக் கேட்க வேண்டுமா?

௭. ஏவுகிறவனுக்கு வாய்ச்சொல்,செய்கிறவனுக்கு தலைச்சுமை.

௮. தகப்பனுக்கு கட்டக் கோவணமில்லை,மகன் தஞ்சாவூர் மட்டும் நடைபாவாடை போடச் சொன்னானாம்.

௯. நரிக்கு நாட்டாமை கொடுத்தா கிடைக்கு இரண்டாடு கேக்குமாம்.

௧0. சாமி வரம் கொடுத்தாலும் பூசாரி வரங்கொடுக்கமாட்டான்.

11. நாற்கலம் கூழுக்கு நானே அதிகாரி.

12. வீடு வெறும் வீடு வேலுர் அதிகாரம்.

13. தட்டிக்கேட்க ஆளில்லாவிட்டால் தம்பி சண்டப் பிரசண்டம்.

14. அதுதான் இராயர் கட்டளையாய் இருக்கிறதே.

15. அரி என்கிற அச்சரம் தெரிந்தால் அதிகாரம் பண்ணலாம்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

புறநானூற்றில் கல்விச்சிந்தனை

சங்க இலக்கியத்தில் விருந்தோம்பல்

இரண்டாம் ஆண்டு - மூன்றாம் பருவம்