அரசன்

அரசன் எப்படியோ அப்படியே குடிகள்

அரசனுக்கஞ்சி வலியார் எளியார்க்கனு கூலமாக்கிறது.

அரசனும் ஆண்டியாவான்,ஆண்டியும் அரசனாவான்.

அரசன்ன்று கொன்றால் தெய்வம் நின்று கொள்ளும்.

அரசன் நினைத்த அன்றே அழிவு.

எழுத்தறிந்த மன்ன்ன் கிழித்தெரிந்தான் ஓலை.
கொடுமையான அரசன் கீழிருப்பதைப் பாக்கிலும் கடுமையான கீழ் புலியின் இருப்பது நன்று.

புத்திகெட்ட இராசாவுக்கு மதிகெட்ட மந்திரி.
மீந்த சுண்ணாம்பையும்,மெலிந்த இராசாவையும் கைவிடல் ஆகாது.
வளைந்த மூங்கில் அரசன் முடிமேல்,வளையாத மூங்கில் கழைக்கூத்தர் காலின் கீழ்.

அரசனுடைமைக்கு ஆகாசவாணி சாட்சி.

அரசனைக் காட்டிக்கொடுப்பது அமைச்சனுக்குத் தர்ம்மல்ல.

அரசனை நம்பி புருசனைக் கைவிட்டாள்.

அரசனில்லாப் படை வெட்டுமா?

கோவுக்கழகு செங்கோன் முறைமை.

கருத்துகள்

S.Lankeswaran இவ்வாறு கூறியுள்ளார்…
“புத்திகெட்ட இராசாவுக்கு மதிகெட்ட மந்திரி”

உண்மை தான் நல்ல கருத்து இதை எங்கள் நாட்டுக்கும் பொருந்தும்.

குறிப்பு சொல் சரிபார்ப்பு என்பதை நீக்கி விட்டால் தங்கள் பதிவுகளுக்கு இடுகை இடுபவர்களுக்கு இலகுவாக இருக்கும் தானே?

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

புறநானூற்றில் கல்விச்சிந்தனை

சங்க இலக்கியத்தில் விருந்தோம்பல்

பூவின் பல நிலைகள்.......