'இலையும் பழுப்பும் எங்கும் உண்டு' வாழ்க்கை இன்பம் துன்பம்,ஏற்றத்தாழ்வு நிறைந்தது என்னும் கருத்தை இப் பழமொழி உணர்த்துகின்றது.இன்ப நிலைக்கு இலையின் இயல்பான தோற்றமும் துன்பநிலைக்கு இலையின் பழுப்பேறிய தோற்றமும் ஒப்புமை கூறப்பெற்றுள்ளன.
மனித வாழ்வினை மேம்படுத்தி நல்ல ஒழுக்கத்தையும் மனவலிமையையும் விரிந்த அறிவையும் சுயவலிமையையும் தருவது கல்வி. அண்ணல் காந்தியடிகள் கல்வியைப் பற்றி கூறும்போது ’குழந்தைகளிடமிருந்தும் சரி உடல்,உள்ளம்,ஆன்ம உணர்வு ஆகியவற்றில் சிறந்தவற்றை ஒருங்கே வெளிக்கொணர்வது தான் கல்வி என நம்புகிறேன்’ என்பர். கல்வி ’வாழவின் அணியாகவும் தாழ்வின் துணையாகவும் விளங்குவது’ எனக் கல்வியின் சிறப்புரைப்பர் அரிஸ்டாட்டில். நுண்ணறிவுப் பயிற்சியோடு மனத் தூய்மையையும் ஆன்மீக நெறியையும் கற்பிப்பது கல்வி என மொழிவர் டாக்டர் இராதாகிருஷ்ணன். இக் கட்டுரை மேம்பட்ட செம்மையான மானுடவாழ்விற்குத் தோன்றாத் துணையாகத் திகழும் சிறப்புமிக்க இக்கல்வி தமிழகத்தில் வளர்ந்தநிலையினைத் தமிழ் இலக்கிய சான்றுகளுடன் குறிப்பாக செவ்விலக்கியமாகத் திகழக்கூடிய எட்டுத் தொகை நூல்களுள் ஒன்றான புறநானூற்றிச் சான்றுகளை மையமிட்டு அமைந்துள்ளது. காட்டுமிராண்டியான மனிதன் விலங்குகளிலிருந்து தன்னைப் பாதுகாத்துக்கொள்ள எழுப்பிய ஒலி கருத்துடன் கூடியதல்ல. இந்நிலையில் மற்றவர்களின் துணையை நாடிய போது கூடி வாழும் நிலை ஏற்பட்டது.அப்போதுதான் ஒருவர் கருத்தை மற்றவர் புரிந்து கொள்ள...
சங்கதமிழ் இலக்கியங்கள் காதல்,வீரம்,கொடையை மட்டுமன்றி இல்லறத்துக்குரிய அறங்களுள் ஒன்றாக விருந்தோம்பலையும் சிறப்பித்துக் கூறுகின்றன.விருந்தோம்பலில் தமிழரே பேர் பெற்றவர்கள். பழந்தமிழர் விருந்தோம்பலை வாழ்க்கையின் உயிர் நாடியாகக் கொண்டமை, அக்கால நூல்களால் நன்கு தெரிகிறது.பழந்தமிழ் நூல்களில் விருந்து மணமே பெரிதும் கமழ்ந்து கொண்டிருந்தது.விருந்தோம்பலின் அருமையை அறிந்து வள்ளுவர் விருந்தோம்பலுக்கென்று தனியோர் அதிகாரத்தைப் படைத்துள்ளார். 'விருந்து' என்ற சொல் புதுமையைப் குறித்துப் பின்பு ஆகுபெயராய் விருந்தினரைக் குறித்து வழங்கலாயிற்று. 'விருந்து தானும் புதுவது கிளந்த யாப்பின் மேற்றே'(பொருளதிகாரம்,237) என்ற தொல்காப்பிய நூற்பா மூலம் அறியலாம். இல்லற நெறி 'பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதலே' இல்லறத்தின் தலையாய நெறியாகும். விருந்தோம்பல் இல்லாத வாழ்க்கை இல்வாழ்க்கை ஆகாது. விருந்தோம்பலில் பெண் பெரும் பங்கு பெறுகிறாள்.ஆதலின் 'நல்விருந்தோம்பலின் நட்டாள்' எனத் திரிகடுகம் கூறும். தொல்காப்பியமும் மனைவிக்கு உரிய மாண்புகளாக விருந்தோம்பலையும் சுற்றம் ஓம்பலையும் சுட்டுகிறது. \ 'வி...
இரண்டாம் ஆண்டு - மூன்றாம் பருவம் ITAM – 31 – அற இலக்கியமும் காப்பியமும் திருக்குறள் பதினெண் கீழ்க்கணக்கு நூல்களுள் அறநூல்கள் பதினொன்று ( திருக்குறள் , நாலடியார் , நான்மணிக்கடிகை , இனியவை நாற்பது , இன்னா நாற்பது , திரிகடுகம் , ஆசாரக்கோவை , சிறுபஞ்சமூலம் , பழமொழி , முதுமொழிக் காஞ்சி , ஏலாதி ) . இவற்றுள் முதன்மையான அற நூல் திருக்குறள். திருக்குறள் அறம்(38) பொருள் (70) இன்பம் (25) என்னும் மூன்று பிரிவுகளையும் குறள் வெண்பா என்னும் பாவகையால் 1330 ஈரடிச் செய்யுள்களையும் கொண்டது. இந்நூல் மதச் சார்பு அற்ற அக, புற வாழ்வியலுக்கான வழிகாட்டி நூலாக இலங்குவதுடன். உலகப் பொதுமறை, பொய்யாமொழி, வாயுறை வாழ்த்து, முப்பால், உத்தரவேதம், தெய்வநூல் எனப் பல பெயர்களால் அழைக்கப்பெறுகிறது,. தமிழரின் அறிவு மரபின் உச்சம் திருக்குறள் என்று கூறலாம். இந்நூலின் சிறப்பு கருதி இந்திய மொழிகளிலும் உலக மொழிகளிலும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. உழவு 1. சுழன்றும்ஏர்ப் பின்னது உலகம் அதனால் உழந்தும் உழவே தலை உழுவதைத் துன்பம் என்று கருதிப் ...
கருத்துகள்