பழமொழி-அதிஷ்டம்
1. அதிஷ்டம் இருந்தால் அரசு பண்ணலாம்.
2. கைக்கு எட்டியது வாய்க்கு எட்டவில்லை.
3. பால் குடிக்கப் பாக்கியம் இல்லாதவன் பால் வாங்கினானாம்.அதையும் பூனை குடித்ததாம்.
4. ஆசை இருக்குகிறது தாசில் பண்ண,அதிஷ்டம் இருக்கிறது கழுதை மேய்க்க.
5. இடுக்கிறவள் புடைக்கிறவள் இங்கே இருக்க எட்டிப்பார்த்தவள் கொட்டிக்கொண்டு போனாள்.
6. கொடுக்கிற தெய்வம் கூறையைப் பிய்த்துக்கொண்டு கொடுக்கும்.
7. ஏர் பிடித்தவன் என்ன செய்வான்,பானை பிடித்தவள் பாக்கியம்.
8. குபேரன் பட்டனம் கொள்ளைபோனாலும் அதிர்ஷ்ட வீணனுக்கு அகப்பைக் காம்பூ அகப்படுமா?
9. சித்திரை மாதத்தில் பிறந்த சீர்கேடனுமில்லை,ஐப்பசி மாததில் பிறந்த அதிர்ஷ்டவானுமில்லை.
10 அதிஷ்டவான் மண்ணைத் தொட்டாலும் பொன்னாகும்.
11. சனியன் புடிச்சவளுக்குச் சந்தைக்குப் போனாலும் புருசன் அகப்படமாட்டான்.
12. ஒருவனைக் கொன்றவன் உடனே சாவான்,பலரைக் கொன்றவன் பட்டமாள்வான்.
13. அகப்பட்டவனுக்கு அஷ்டமத்திலே சனி,ஓடிப்போனவனுக்கு ஒன்பதாமிடத்திலே ராசா.
14. சும்மா இருக்கிற தம்பிரானுக்கு இரண்டு பட்டை.
15. அவிசாரியானாலும் முகராசி வேண்டும்.

கருத்துகள்
பனை மரத்துல நெறி கட்டிச்சாம்''
இதுக்கு என்ன மேடம் அர்த்தம்?
பழமொழிகள் என்பவை நம் முன்னோரின் அனுபவங்கள் அதில் பல உண்மைகள் உள்ளன.அதனை சரியாகப் உணராமல் பல பழமொழிகள் பொருள் மாறிவிட்டன.சான்றாக வக்கத்தவன் தான் வாத்தியார் வேலைக்குப் போவான்
போக்கத்தவன் தான் போலீஸ் வேலைக்குப் போவான்.
இதன் உண்மையான பொருள்
சான்றோர் வாக்குக் கற்றவன் தான் வாத்தியார் வேலைக்குப் போவான்
திருடனின் போக்குக் கற்றவன் தான் போலீஸ் வேலைக்குப் போவான்
என்பதாகும்.
இதுபோலபல பொருள்கள் வழங்கப்படுகின்றன
தாங்கள் பழமொழியோடு அதன் பொருளும் கூறினால் நன்றாக இருக்கும்.
தங்கள் பணி தொடரட வாழ்த்துக்கள்