பழமொழி
நம் கிராமத்து மொழிகளில் முக்கிய இடம் பழமொழிக்கு உண்டு.பழமொழியின் சிறப்பை உணர்த்தவே எழுந்த நூல் பழமொழி நானூறு.இன்று வழக்கில் பழமொழிகள் பயன்படுத்துதல் குறைந்து கொண்டு வருகின்றன.அவற்றையெல்லாம் பயன்பாட்டிற்குக் கொண்டுவர வேண்டும்.அச்சிறு முயற்சியாக நம் முன்னோர் அச்சம் தொடர்பாக பயன்படுத்திய பழமொழிகளைக் கீழே தருகிறேன்.தொடர்ந்து ஒவ்வொரு தலைப்பிலும் வரும்.
௧. அரண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய்
௨. மடியிலே கனமிருந்தால் வழியிலே பயம்.
௩. முதுகிலே புண் உண்டானால் செடியிலே நுழையப் பயம்.
௪. முட்டைப் பூச்சிக்குப் பயந்து வீட்டை இடிப்பார்களா?
௫. அச்சமற்றவன் அம்பலம் ஏறுவான்.
௬. அடிக்கிற காற்றுக்கும்,பெய்கிற மழைக்கும் பயப்படு.
௭. இடிக்கொம்புகாரன் கோழிக்குஞ்சு சத்தத்திற்கு அஞ்சுவானா?
௮. என்றும் பயப்படுதலினும் எதிரே போதல் உத்தமம்.
௯. கரடி கையிலுதைபட்டவனுக்குக் கம்பளிக்காரனைக் கண்டால் பயம்.
௧0. நயத்திலாகிறது பயத்திலாகாது.
௧௧. பிச்சைக்காரனுக்குப் பயப்பட்டு அடுப்பு மூட்டாமல் விடுகிறதா?
௧௨. கள்ளன் அச்சம் காடு கொள்ளாது.
௧௩. கிளி பிடித்த்தோ,புலி பிடித்த்தோ?
௧௪. அஞ்சுவோரைக் கெஞ்சடிக்கப் பார்க்கிறான்.
௧௫. விழுந்தவன் சிரித்தான் வெட்கத்திற்கஞ்சி.

கருத்துகள்
அப்படி ஒன்னு இருக்குல்ல ?
பழமொழிகள் என்பவை நம் முன்னோரின் அனுபவங்கள் அதில் பல உண்மைகள் உள்ளன.அதனை சரியாகப் உணராமல் பல பழமொழிகள் பொருள் மாறிவிட்டன.சான்றாக வக்கத்தவன் தான் வாத்தியார் வேலைக்குப் போவான்
போக்கத்தவன் தான் போலீஸ் வேலைக்குப் போவான்.
இதன் உண்மையான பொருள்
சான்றோர் வாக்குக் கற்றவன் தான் வாத்தியார் வேலைக்குப் போவான்
திருடனின் போக்குக் கற்றவன் தான் போலீஸ் வேலைக்குப் போவான்
என்பதாகும்.
இதுபோலபல பொருள்கள் வழங்கப்படுகின்றன
தாங்கள் பழமொழியோடு அதன் பொருளும் கூறினால் நன்றாக இருக்கும்.
தங்கள் பணி தொடரட வாழ்த்துக்கள்