இடுகைகள்

மே, 2015 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

ஆழ்வார் பாடல்களில் பெண் இருப்பு

            இந்திய   மரபில் பெண்ணுக்கான இருப்பின் விதியை , பல நிலைகளில் உருவாக்கி / வகுத்தும் ,   செயல்படுத்தியும் வந்திருப்பதை , தொல்சீர் இலக்கண , இலக்கியங்கின் ஊடாக பயணிக்கும் போது அறியமுடியும் ., சங்க கால , வேத கால பெண்கள் பெருமையோடும் சிறப்போடும் வாழ்ந்தார்கள் என்ற பிம்பத்தை உருவாக்கவும் முற்பட்டிருக்கின்றனர் .   ஆனால் சமூத்தின் பொதுபுத்தியில் பெண் ஆணைவிடக்   கீழானவள் ; மாறுபட்டவள் இயற்கையிலேயே இவ்விதம் உருவாக்கப்பட்டவள் என்ற கருத்துரு படிந்து கிடக்கிறது . அதனால் தான் சமூகத்தின் அடிமைகள் , சேவகர்கள் குறித்துப் பேசும்போதெல்லாம் பெண்ணையும் சேர்த்தே பேசியிருக்கின்றனர் . ஆட்சி , அதிகாரம் , தனிவாழ்வு , பண்பாட்டு கூறுகள் அனைத்திலும் இக் கருத்து ஊடுருவி இருந்தன . சமண , பௌத்தங்கள் மாற்றுச் சிந்தனை உருவாக்கினாலும் , பெண் குறித்தான கருத்தில் ஒத்த சிந்தனையுடன் செயல்பட்டுள்ளன . வைதீகச் சமயங்களில் பெண்கள் அறியப்பட்டாலும் , ‘ தன்னுறு வேட்கை கிழவன்முற் ...